பேச்சு:பூமேடை ராமையா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனானி நண்பர்கள்/ஜெயமோகன் ரசிகர்கள்/ விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களுக்கு,

தயவு செய்து ஜெயமோகன் எழுதிய கதையை வெளி இணைப்பாக இணைக்காதீர்கள். ராமையா பற்றி அவர் கட்டுரை எழுதவில்லை. கதை எழுதியுள்ளார். முன்னர் மதுரை மணி ஐயர் கட்டுரையில் சர்ச்சை கிளம்பியபின்னர் கதை/புனைவு/composite character என்று விளக்கம் போனது. அருள் கூர்ந்து கற்பனைக் கதைகளை இப்படி வெளியிணைப்பாகத் தருவதைத் தவிருங்கள் இன்னுமொரு முறை கதை இணைக்கப்பட்டால் 59.92. ip range விக்கிக்கு பங்களிப்பதிலிருந்து தடை செய்யப்படும். கணக்கு இல்லாதவர்கள் இக்கட்டுரையைத் தொகுக்க இயலாத வண்ணம் பூட்டியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:44, 10 மார்ச் 2011 (UTC)

காத்தற்கான காரணம்[தொகு]

இக்கட்டுரை எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்டது. அவர் சில காலமாக தனது இலக்கியப் படைப்புகளில் வரும் கதை மாந்தர் எந்த நிஜ வாழ்வு மனிதரையொற்றி அமைக்கப்பட்டனவோ அவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் விக்கியில் சேர்த்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் மதுரை மணி ஐயர் பற்றிய கட்டுரையில் ”உயர்தர மதுவில் ஈடுபாடுள்ளவர்” என்று எழுதியிருந்தார். அப்போது வெளியான அவரது கதை ஒன்றிலும் மணி ஐயர் அல்லது அவரை வைத்து உருவாக்கிய பாத்திரத்துக்கும் குடி பழக்கம் உள்ளது என்று எழுதப்பட்டிருந்தது.

பின் இது சர்ச்சையாகியதால் கதையில் வந்தது மணி ஐயர் போன்ற கேரக்டர் எனவும் அவரல்ல எனவும் விளக்கமளிக்கப்பட்டது என நினைக்கிறேன். மேலும் ஜெயமோகனின் ரசிகர்களுள் ஒருவரான அரங்கசாமி அந்த சர்ச்சைக்குரிய வரியினை விக்கி கட்டுரையிலிருந்து நீக்கி விட்டார்.

மேற்சொன்ன அனைத்தும் எந்த வரிசையில் நடந்தது/ பின்புலம் என்ன/ ஏற்கனவே என்ன இலக்கியத் தகராறு என்று இன்னும் எனக்கு தெளிவாக விளங்கவில்லை. ஏதோ விக்கிப்பீடியாவை வைத்து சர்ச்சையாகியுள்ளது என்பது மட்டும் தெரிகிறது. எனவே வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளில் வெளி இணைப்பாக ஜெயமோகனின் தளத்தில் வெளியாகி இருக்கும் அவரது கதைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தொடுப்புகளை நீக்கி வருகிறேன். (அவை கட்டுரைகளாக இருந்தால் நீக்குவதில்லை, புனைவுப் படைப்புகளுக்கான இணைப்புகளை மட்டுமே நீக்கி வருகிறேன்). சில நேரங்களில் அக்கதைகளில் நிஜப் பெயர்களும் சில நேரங்களில் வேறு பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்ப்பட்ட கதைகளுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளிலிருந்து வெளியிணைப்புத் தருவது உகந்ததாக இராது. மேலும் ஏற்கனவே ஒரு முறை இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அவரது தளத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை எழுதினால், அவற்றுக்கு இங்கிருந்து அட்டிரிபூசன் கொடுப்பத்தில் சிக்கல் இல்லை. ஆனால் கற்பனை கதைகளை வெளி இணைப்பாகத் தரவியலாது.

இந்நிலையில் இக்கட்டுரைக்கும் சில ஐபி பயனர்கள் அவர் எழுதிய சிறுகதைக்கு இணைப்பு தந்து வருகிறார்கள். இது வரை மூன்று-நான்கு முறை வெளி இணைப்பை நீக்கிய பின்னரும் மீண்டும் மீண்டும் இணைகப்படுகின்றன. எனவே இக்கட்டுரையை ஒரு வார காலத்துக்கு பூட்டியுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 15:16, 10 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூமேடை_ராமையா&oldid=713756" இலிருந்து மீள்விக்கப்பட்டது