பேச்சு:பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திரவிழாவும் காம விழாவும் ஒன்றா ? இந்திர விழா இந்திரனுக்கு எடுக்கப்ட்ட விழா இல்லையா ? వినోద్  வினோத் 08:45, 16 மார்ச் 2008 (UTC)

கட்டுரையின் விக்கியாக்கம்[தொகு]

சுந்தர், இக்கட்டுரையை இட்டவர் இரா. வாசுதேவன் (இரவா) என்பவர். நீங்களும் மற்றவர்களும் எத்தனை வடிவாக இக் கட்டுரையை மாற்றியும் திருத்தியும் விக்கிநடையில் எழுத உதவுகிறீர்கள் என்பது புதிய பயனர்களுக்குப் மிகவும் பயன் தரும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழறிவும் ஆர்வமும் மிக்க 8-10 புதிய பயனர்கள் வர இருக்கின்றார்கள். எனவே இக்கட்டுரை பெறும் மாற்றங்கள் ஒரு முன் எடுத்துக்காட்டாக பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். நட்புடன் புதிய வருநர்களுக்கு உதவுவோம்.--செல்வா 15:10, 16 மார்ச் 2008 (UTC)

ஆம் அந்த நோக்கிலேயே உமாபதியும் கனகுவும் செய்த விக்கியாக்கத்தை நானும் தொடர்ந்தேன். தலைப்பை சங்க இலக்கியத்தில் காதல் திருவிழா என்று மாற்றலாமா? (புதுப்பயனர்கள் வரவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி.) -- சுந்தர் \பேச்சு 15:15, 16 மார்ச் 2008 (UTC)

எழுத்துரிமம்[தொகு]

இக்கட்டுரையாளர் இரவாதான் என்றாலும், இக்கட்டுரையின் எழுத்துரிமம் திண்ணை இணைய இதழினுடையதா என்று ஓர் ஐயம் உள்ளது. முனைவர் இரா. வாசுதேவன் விளக்குவாரா? திண்ணைக் கட்டுரையைப் பார்க்கவும் --செல்வா 03:24, 18 மார்ச் 2008 (UTC)