பேச்சு:நரசய்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது பெயர் தமிழர் கப்பற்கலை ஆய்வாளர்கள் என்ற பகுப்பில் உள்ளது. இவர் தமிழர் கப்பற்கலையைப் பற்றி என்ன ஆய்வு செய்திருக்கிறார்?--பாஹிம் (பேச்சு) 00:57, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவது சரியாகவே இருக்கலாம். தமிழ்க் கப்பற்கலை ஆய்வாளர்கள் என்று பகுப்பிடலாமா?--Kanags \உரையாடுக 04:20, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]
அப்படிக் கூறுவதாக இருந்தாலும் இவர் கப்பற்கலையைப் பற்றி என்ன ஆய்வு செய்திருக்கிறார் என்ற விபரம் இருக்க வேண்டுமே.--பாஹிம் (பேச்சு) 05:46, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கப்பற்கலை என்னும் போது தனியே கப்பல் கட்டுவது மட்டும் இங்கே நான் குறிப்பிடவில்லை. இதன் துணை அல்லது மேல் பகுப்புகளாக கப்பல் செலுத்துவது, கடற்பயணம் செய்வது (Navigation), கடல் வணிகம் ஆகியவை அமையலாம். இவர் தான் எழுதிய நூலுக்கு செய்த ஆய்வு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "'தொடர்ந்து அகழ்வாராய்வு, சாசனங்கள் மற்றும் மண்பாண்டச் சான்றுகளுடனும், நணயவியல் குறிப்புகளுடனும், அப்போதிருந்த வணிக முறைகள், செயல்பட்டு வந்துள்ள வணிகக் குழுக்கள் ஆகிய சான்றுகளுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது" [1]. --Natkeeran (பேச்சு) 01:10, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நரசய்யா&oldid=1290347" இலிருந்து மீள்விக்கப்பட்டது