பேச்சு:தவறின்றித் தமிழ் எழுதுவோம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@ பயனர்:பா.ஜம்புலிங்கம்... கவனிக்கவும்: வழுக்குத்தமிழ் அல்லது வக்குத் தமிழ்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@ வணக்கம், பயனர்:Selvasivagurunathan m. இந்நூலில் நான்காவது கட்டுரையின் தலைப்பு வழுக்குத் தமிழ் என்றுதான் உள்ளது (பக்கம் 11). கட்டுரையின் முதல் பத்தியில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார் : "தலைப்பைப் பார்த்துவிட்டுப் பின்னர் இப்பகுதியைப் படிக்கத் தொடங்குவோர், இது என்ன புதிய தமிழ் என்று நினைக்கக்கூடும்....வழக்குத் தமிழ் என்பதை வழுக்குத் தமிழ் என்று தவறாக அச்சிட்டு விட்டார்களோ? என்றவாறு நினைத்துத் திகைத்துத் திண்டாட வைத்து விடக்கூடாது என்பதற்காகத் தரப்படும் சிறு விளக்கமே இங்கு முதலில் இடம் பெறுகிறது...". தாங்கள் நினைப்பது போல பிறர் அவ்வாறு நினைக்க வாய்ப்பிருப்பதால் அச்சொல்லை மட்டும் பதிவிலிருந்து நீக்கிவிடலாமா என யோசிக்கிறேன். தங்களின் கருத்தறிந்து ஆவன செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:42, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை எனும் கட்டுரையைப் பாருங்கள். அதில் குறிப்பு எனும் முறை கையாளப்பட்டுள்ளது. அதன்படி இங்கும் செய்யலாம். இதன்மூலம் ஒரு புதிய விசயத்தை ஐயம் ஏற்படாதவாறு தெரிவிக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:07, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கருத்திற்கு நன்றி. குறிப்பு என்று தலைப்பிட்டு பின்வரும் பத்தியை இணைத்துவிடலாம் என எண்ணுகிறேன். தங்களின் கருத்தறிந்து தொடர்வேன். நன்றி.
இந்நூலில் நான்காவது கட்டுரையின் தலைப்பு வழுக்குத் தமிழ் என்று உள்ளது (பக்கம் 11). கட்டுரையின் முதல் பத்தியில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார் : "தலைப்பைப் பார்த்துவிட்டுப் பின்னர் இப்பகுதியைப் படிக்கத் தொடங்குவோர், இது என்ன புதிய தமிழ் என்று நினைக்கக்கூடும்....வழக்குத் தமிழ் என்பதை வழுக்குத் தமிழ் என்று தவறாக அச்சிட்டு விட்டார்களோ? என்றவாறு நினைத்துத் திகைத்துத் திண்டாட வைத்து விடக்கூடாது என்பதற்காகத் தரப்படும் சிறு விளக்கமே இங்கு முதலில் இடம் பெறுகிறது...". --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:28, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வழுக்குத் தமிழ் என்பதனை நூலின் ஆசிரியர் எப்படிப் பொருள்கொள்கிறார், அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் எனும் தகவலை சுருக்கமாக தெரிவிப்பது, சாலச் சிறந்தது எனக் கருதுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கீழ்க்கண்டவாறு அமைக்கலாமா என்பது குறித்து எழுதவேண்டுகிறேன். குறிப்பு : யாரேனும் ஒருவர் ஒரு சொல்லையோ தொடரையோ எக்காரணத்தாலாவது தவறாகப் பயன்படுத்திவிட்டால், பின்னர் பலரும் அத்தகைய தவறுகளைத் தொடர்வது மரபாகிவிட்டது என்றும், அத் தவறான தமிழுக்குத்தான் வழுக்குத் தமிழ் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆசிரியர் கூறுகிறார். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:15, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:52, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இணைத்துவிட்டேன், நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:10, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]