பேச்சு:சென்னை தொழில்நுட்ப நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை தொழில்நுட்ப நிறுவனம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழ்ச் சொல்[தொகு]

கழகம் என்றால் Corporation என்றல்லவா ஆங்கில இணைச்சொல் வரும்?? Institute என்பதற்கு எது சரியான தமிழ் சொல்?? -- Vatsan34 04:46, 25 டிசம்பர் 2009 (UTC)

Institute என்பதை "நிறுவனம்" எனலாம். மேற்படி நிறுவனத்தினர் தமது பெயரைத் தமிழில் எப்படி எழுதுகிறார்கள்? அதைப் பின்பற்றி எழுதுவது நல்லது. இல்லாவிட்டால், Madras Institute of Technology என்பதை "மதராசு தொழில்நுட்ப நிறுவனம்" என எழுதலாம் என்பது எனது கருத்து. "மெட்ராசு" என்பதற்குப் பதிலாக "மதராசு" என்று எழுதுவது நல்லது. "மதராசு" ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் சொல். மயூரநாதன் 05:09, 25 டிசம்பர் 2009 (UTC)
நான் இங்கு தான் பொறியியல் பயின்றேன். அனால் நான்கு வருடத்தில் ஒரு முறையும் தமிழில் எதையும் கண்டதில்லை வளாகத்தில் :D. ஆகையால் நீங்கள் சொன்ன தலைப்புக்கே பக்கத்தை நகர்த்துகிறேன்.நன்றி. -- Vatsan34 05:20, 25 டிசம்பர் 2009 (UTC)
சென்னை தொழில்நுட்ப நிறுவனம் என்று MIT - இன் இணையதளத்திலுள்ள ஒரு புகைப்பட gallery -இல் கொடுக்கப்பட்டுள்ளது. (ராஜம் அரங்கு ஓய்வு விடுதி திறப்பு 4 x 5 வரிசையிலுள்ள படம் [1]). இதையே நாமும் பயன்படுத்தலாமே? -- பரிதிமதி 12:53, 25 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)
தமிழ் இணைய பல்கலைக்கழக தமிழ்-தமிழ் அகராதியில் கழகம் என்பதற்கு "கல்வி பயிலும் இடம்;கல்விச் சங்கம்;படை,மல் முதலியன பயிலும் இடம்;சூது;சூதாடும் இடம்;ஓலக்கம்;புலவர் கூடிய சபை" என பொருள் தரப்பட்டுள்ளது.த.வி மற்றும் கூகுள் தேடலிலும் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கழகம்,அறிவியல் கழகம் என எடுத்தாளப்பட்டுள்ளது. ஒரே சீராக மதராசு (சென்னை)தொழில்நுட்பக் கழகம் என பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து.
நிறுவனம் என பொதுவாக வணிக அமைப்புகளையே குறிப்பிடுகிறோம்.--மணியன் 17:12, 25 டிசம்பர் 2009 (UTC)
தொழில்நுட்பக் கழகம் அல்லது தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனலாம்.--Kanags \பேச்சு 23:01, 25 டிசம்பர் 2009 (UTC)
Institute என்ற சொல்லுக்கு நிறுவு என்ற பொருள் உண்டல்லவா? அதனடிப்படையில் நிறுவனம் என்பதும் சரியே. மேலும் M.I.T. இணையதள இணைப்பில் சென்னை தொழில்நுட்ப நிறுவனம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது [கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த ராஜம் ஓய்வு விடுதி கல்வெட்டில் பார்க்கலாம். [2] 4-ஆவது வரிசையில் 5-ஆவது படம்] எனவே சென்னை தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரை Official name என்று எடுத்துக்கொள்ளலாம். ( தனிப்பட்ட முறையில் எனக்கு நிலையம் என்ற சொல்லே பிடித்தமானது. ஆனால் அதிகாரபூர்வ சொல் ஒன்று இருந்தால் அதையே பின்பற்றுவோம் என்பது என் கருத்து ). -- பரிதிமதி 00:29, 28 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)
சென்னை தொழில்நுட்ப நிறுவனம் என்று தலைப்பை மாற்றலாமா?? --Vatsan34 07:25, 30 டிசம்பர் 2009 (UTC)