பேச்சு:சிவகாமியின் சபதம் (புதினம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

12 வருடங்களா?[தொகு]

இரண்டு ஆண்டுகள் தான் கல்கியில் தொடர்கதையாக வந்ததென நினைக்கிறேன் (1944-46). தயவு செய்து சரிபார்க்கவும்--Sodabottle 08:41, 31 மே 2010 (UTC)[பதிலளி]

12 ஆண்டுகள் அதிகம் தான், ஆனாலும் இரண்டாண்டுகள் குறைவு போலவும் தெரிகிறது. குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் வெளிவந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:45, 1 ஜூன் 2010 (UTC)
எனது பிரதியைப் புரட்டிப் பார்த்தேன் இரண்டரையாண்டுகள் என ஒரு அடிக்குறிப்பில் போட்டிருக்கிறது (சுவஸ்திக சின்னத்தைப் பற்றி விளக்கும் போது, நாஜிக்கள் பழங்கால இந்தியர்களிடமிருந்து இதை "சுட்டார்கள்" என்று கல்கி ஒரு அடிக்குறிப்பில் விளக்குகிறார். அந்த அடிகுறிப்புக்கு அடைப்பில் இரண்டாம் உலகப்போரின் போது இப்புதினம் முதலில் வெளியானது என்று போட்டு ஆண்டுகள் 1942-44 வாக்கில் என்றும் போட்டுள்ளது.). இதை விட பெரிய புதினமான பொன்னியின் செல்வன் மூன்றரை ஆண்டுகளே வெளி வந்துள்ளது (1950-53). எனவே அதைவிடக் குறைவான காலமே இது வெளியாகி இருக்க வேண்டும்--Sodabottle 20:22, 1 ஜூன் 2010 (UTC)

முதல் பாகம்[தொகு]

முதல் பாகத்தின் பெயர், "பரஞ்சோதி யாத்திரை". இச்சுட்டியை பாருங்கள். என்னிடம் உள்ள பிரதியிலும் (1980 களின் இறுதியில் கல்கியில் தொடராக வந்தபோது, பிரித்து பைண்ட் செய்யப்பட்டது) "பரஞ்சோதி யாத்திரை" என்றே உள்ளது. மதுரைத் திட்டத்தில் மின்னூலாக்கியவர்கள் தவறுதலாக பூகம்பம் என்று இட்டு விட்டனர் என நினைக்கிறேன். முதல் பகுதியில் பூகம்பம் எதுவும் நிகழ்வதாக எனக்கு நினைவில்லை. எனவே "பரஞ்சோதி யாத்திரை" தான் சரியானது என நினைக்கிறேன்.--Sodabottle 07:58, 1 ஜூன் 2010 (UTC)

பரஞ்சோதி யாத்திரை என்றே படித்த ஞாபகம்.--Kanags \உரையாடுக 09:45, 1 ஜூன் 2010 (UTC)