பேச்சு:கிறிஸ்தவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்தவம் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உட்பிரிவுகள்[தொகு]

உட்பிரிவுகள் அல்லது உள் பிரிவுகள் என்று இருக்கவேண்டும் - தமிழ் இலக்கணப்படி.--C.R.Selvakumar 03:27, 30 ஜூன் 2006 (UTC)செல்வா

சில வெளியிணைப்புகள்[தொகு]

அண்மையில் உண்மையடியான் என்பவர் தனது சொந்த வலைப்பதிவுகளை வெளி இணைப்புகளாக இணைத்துச் சென்றுள்ளார். இவ்வலைப்பதிவுகள் அனைத்தும் மற்றைய மதங்களை எதிர்த்து எழுதப்பட்ட சொந்தக் கருத்துக்களைக் கொண்டுள்ளன. வெறும் பிரசாரத்துக்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இப்படியான இணைப்புகள் விக்கிபீடியாவின் கொள்கைகளுக்கு மாறானவையாகக் கருதுகிறேன்.--Kanags \பேச்சு 22:52, 26 ஜூலை 2008 (UTC)

ஆம் நானும் அவ்வாறே கருதுகின்றேன். இவை விக்கிபீடியாவை நடுநிலைத்தன்மையை பாதிப்பனவாகும். --உமாபதி \பேச்சு 01:17, 27 ஜூலை 2008 (UTC)

விக்கியின் நடுநிலை காப்போம்[தொகு]

Kanags, உமாபதி இருவரும் கூறுவது சரி என்றே கருதுகிறேன். தற்போது இக்கட்டுரைக்கு வெளி இணைப்பாகத் தரப்படுகின்ற நான்கும் பொருளற்றவையாகவும் பொருத்தமில்லாதவையாகவும் இருப்பதால் அவற்றை அகற்றிவிடுமாறு வேண்டுகின்றேன். நடுநிலை இணைப்புகள் சிலவற்றைப் பரிந்துரைக்கலாம். --பவுல்-Paul 21:35, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

கிறிஸ்துவம் குறித்தான விமர்சனங்கள்[தொகு]

வலைப்பூக்களில் உள்ளது போன்று எழுதப்பட்டுள்ளது. ஆங்கில விக்கியில் உள்ளதுபோல் நடுநிலை தவறாது எழுதுதப்படல் வேண்டும். --Anton (பேச்சு) 07:10, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அதற்காக அப்படியே அழித்துவிடுதல் ஞாயமா. விமர்சனங்களை கண்டு ஏன் தயங்குகின்றீர்கள்(நடுங்குகின்றீர்கள்) என்று புரியவில்லை. ஏசுவின் மனைவி மீதான விமர்சனம் மிகவும் பிரபலமானது. குரான் ஏசுவையும் இசுலாமியன் என்கிறது. பைபில் இறைவனின் குமாரன் என்று ஏசுவை சொல்கிறது. குரான் இறைவனுக்கு குமாரன் என்றெல்லாம் கிடையாது என்று கூறுகிறது. இந்த முரன்பாடுகளை. கட்டுரையை படிக்கும் ஒருவர் அறிந்து கொள்ளவே கூடாது என்பது எந்த விதத்தில் ஞாயமாகும்.

இதுவா நடுநிலை தன்மை.

Sivane (பேச்சு) 06:49, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

@Sivne! நீங்கள் பல்வேறு பக்கங்களிலும் முறை தவறி நடக்கிறீர்கள். உங்களுடைய விமர்சனங்களைக் கண்டு நடுங்குவதாக நீங்களே கூறிக்கொள்கிறீர்கள். அப்படியாயின் உங்களைப் பயங்கரவாதி எனலாமா? மேலும், விமர்சனங்கள் என்று வருவதாயின் மூலக் கோட்பாடுகளைப் பற்றியே இருக்க வேண்டும். மாறாக நீங்கள் கற்பனை செய்துகொண்டவையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்குப் பொருத்தமென நீங்கள் வாதிடுவது தவறு.--பாஹிம் (பேச்சு) 08:15, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

1. கிறிஸ்து கருப்பு நிறமாகவும், சுருட்டை முடியும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரின் உருவம் இப்போது உள்ள வணங்கப்படும் உருவம் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது,.

வலைப்பூக்களில் உள்ளது போன்று எழுதப்பட்டுள்ளது. என்று விமர்சனம் செய்யப்பட்ட நீக்கப்பட்ட பகுதி. இதை விக்கிக்கு ஏற்றவாறு மாற்றாமல் ஏன் அகற்ற வேண்டும். ஆதாரம் வேண்டும் என்று கூறாமல் ஏன் நீக்க வேண்டும். இப்படி நீக்குவதனால் விமர்சனங்களை மூடிமறைக்கின்றீர்ககள் என்பதை நான் கூறித்தான் தெரிய வேண்டுமா.

ஏன் இது போல் செய்கின்றீர்கள்.

Sivane (பேச்சு) 06:54, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் உளறுவதை எப்படி அனுமதிக்க முடியும்? நீங்கள் தொடர்ந்து பொய்யுரைத்தால் அது உண்மையாகிவிடுமா? நீங்கள் விமர்சனம் செய்தால் அவற்றுக்குத் தக்க பதில்களையும் கட்டுரையிற் சேர்க்க வேண்டுமல்லவா?--பாஹிம் (பேச்சு) 08:55, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


கடவுள் மறுப்பாளர்கள் இயேசு என்ற ஒருவர் வரலாற்றில் இருந்திருக்கவில்லை என்பார்கள். பின்னர் அவருக்கு மனைவி இருந்தது என்பார்கள். இதில் எது சரி? இரண்டுக்கும் கட்டுரையில் ஆதாரம் சேர்த்தால் கட்டுரையை வாசிப்பவர்கள் நிலை என்ன?

நீங்கள் கிறிஸ்தவம் பற்றியோ பிற மதங்கள் பற்றியோ ஆதாரத்துடன் பண்பாக, கலைக்களஞ்சிய பாணியில் எழுதுங்கள். அது சரியாக இருந்தால், நானும் அதை தொகுக்கிறேன். ஏற்கெனவே விமரிசனங்கள் பற்றி தொகுத்தும் உள்ளேன். இல்லை உங்கள் விருப்பம்போல விமரிசிக்க முயன்றால், என்னால் முழு வீச்சில் அதற்கு எதிர் வாதங்களை விக்கியிக்கு உட்பட்டு வைக்கவும் முடியும். என்னைப் பொறுத்தவரை தமிழுக்கு வளம் சேர்க்கவே வந்தேன். நீங்கள் எவ்விதமோ நான் அறியேன்.

நடுங்குகின்றீர்கள் போன்ற வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான உரையாடலுக்கு அழகல்ல. மேலும், நான் நடுங்குவதாக இருந்தால், என் ஒளிப்படம் உட்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்திருக்க மாட்டேன். உங்கள் கருத்துக்களை என்னுடன் நேரில் பகிர்ந்து கொள்ள விருப்பம் என்றாலும் எனக்கு ஆட்சேபனையும் இல்லை, நடுக்கமும் இல்லை. உங்களுக்கு எப்படி?

//குரான் ஏசுவையும் இசுலாமியன் என்கிறது.// அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் இசுலாமியரின் பார்வை என்பதில் தொகுத்துவிடுங்கள். நான் அது சரியா அல்லது பிழையா என்பது பற்றி கிறித்துவ, இந்து, யூத, பகாய், கடவுள் மறுப்பாளர்கள், வரலாற்றுப் பார்வை என்பதில் தொகுத்துவிடுகிறேன். அதுதானே நடுநிலை. --Anton (பேச்சு) 13:21, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நடுக்கம் என்பதை தயக்கம் என்றும் பொருள்தரும் என்றே எண்ணினேன். தவறுக்கு மன்னிக்கவும். குரான் கூறுபவற்றை இணைக்க ஆதரவு தந்தமைக்கு நன்றி. அடுத்த வெள்ளியன்று தொகுக்கிறேன். நீங்களும் தாராளமாக பங்கெடுத்து மற்றவர்களின் பார்வையை இணையுங்கள் அப்போதுதான் நடுநிலை கிடைக்கும்.மறுப்பில்லை. நன்றி. - Sivane (பேச்சு) 18:55, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிபீடியாவின் நாடு நிலை எது???[தொகு]

அதிகாரம் மிக்கவர்கள் அதிகாரம் அற்றவர்களின் கட்டுரைகளை நிக்குவது அதற்கான சரியான காரணத்தை குறிப்பிடாது தன்னிச்சையாக செயல்படுவது என்றால் ஒவ்வொரு பயனருக்கு ஏற்றால் போல் அடிமை வாழ்க்கை வால்வதர்க்கு நான் தயாராக இல்லை. தமிழ் விக்கிபீடியா ஒரு சிலரின் அதிகார துர்பிரயோகம் இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம். உருண்டைக்கும், கோளத்துக்கும், நீள் உருண்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் முதலமை கட்டுரையில் இட்டவர்கள் தான் இந்த அறிவாளிகள்!!! நான் விக்கியின் யேர்மனிய கட்டுரையில் மூவாயிரம் கட்டுரைகளை வரைந்துள்ளேன் ஆனால் இப்படி ஒரு கேவலமான சிறிய நிகழ்வு அங்கு நடக்கவில்லை. தமிழ் விக்கியில் நடு நிலை இல்லை என்பதை நான் இப்பொது நன்கு அறிவேன். பொய்யான கட்டுரைக்கும், உயர் அதிகாரிகளுக்கு சலாம் போட்டால் மட்டுமே இங்கு நிலையான பொய்யை எம்மால் எழுத முடியும்.!! ஆனால் பொய் உரைப்பதற்கு நான் தயாராக இல்லை!!--சிவம் 08:40, 21 செப்டெம்பர் 2012 (UTC)

இங்கே எவரும் எவருக்கும் சலாம் போடுவது கிடையாது. நீங்கள் யேர்மனிய விக்கிப்பீடியாவில் மூவாயிரமல்ல முன்னூறாயிரம் கட்டுரைகளை எழுதினாலும், தமிழில் ஒரேயொரு கட்டுரையைக்கூட நீங்கள் இலக்கணப் பிழையின்றி எழுதவில்லை. உருண்டைக்கும் கோளத்துக்கும் வித்தியாசம் என்னவெனில் உருண்டை என்பது சமசுக்கிருதத்திற் கோளம் என்று அழைக்கும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல். அவை இரு வேறு மொழிகளின் ஒத்த சொற்கள் என்பதைத் தவிர எந்த வேறுபாடும் இல்லை.--பாஹிம் (பேச்சு) 08:44, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிவம், நீங்கள் யேர்மனிய விக்கியில் 3000 கட்டுரைகள் எழுதியவர் என்பதை நம்பும்படியாக இல்லை. உங்களது விக்கிப்பற்றிய புரிதலே சந்தேகமாயுள்ளது. இங்கு யாரும் யாருக்கும் சலாம் போட்டு கட்டுரைகள் எழுதவில்லை, நீக்கவில்லை. தயவுசெய்து விக்கிசூழலை வலைப்பதிவாகவோ, போரமாகவோ எண்ணி தவறான பிரச்சாரத்தில் ஈடுபடாதீர்கள். --மாகிர் (பேச்சு) 17:09, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) என்பதில் கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு மற்றும் "கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து அகிய தலைப்பு உரையாடலின்படி, கிறிஸ்தவம், கிறிஸ்து ஆகிய சொற்களைப் பயன்படுத்தவும். --AntanO (பேச்சு) 02:37, 25 ஏப்ரல் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிறிஸ்தவம்&oldid=3814025" இலிருந்து மீள்விக்கப்பட்டது