பேச்சு:கான்கோர்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்கோர்டு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
தொடர்பிழந்த வெளியிணைப்புகளைக் கொண்ட கட்டுரைகள் since July 2011 என்ற பகுப்பு வருகிறது. ஆனால் எல்லா வெளிஇணைப்புகளும் வேலை செய்கிறது. ஏன் இந்த பகுப்பு வருகிறது என புரியவில்லை--குறும்பன் 17:13, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

இறுதியில் d ஒலி வர டு பயன்படுத்ததுவது வழக்கம். ட் என்பது t ஒலி தரும். எடுத்துக்காட்டு: ரேசன் கார்டு, ரோடு. எனவே, தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் கான்கார்டு என்று மாற்ற வேண்டுகிறேன். இதே போன்ற சிக்கல் உள்ள மற்ற கட்டுரைகளிலும் இத்தகைய மாற்றத்தைச் செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். சில இடங்களில் இறுதியில் வரும் d எழுத்து து, த் ஒலி தரும். எடுத்துக்காட்டு: Rasheed. எனவே, தகுந்த இடங்களில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--இரவி 22:05, 10 பெப்ரவரி 2012 (UTC)

பெயரை மாற்றலாம் என்று நினைத்தேன் ஆனால் இதன் பெயர் Concorde (ஆங்கிலத்திலும் Concorde என்று மாற்றிவிட்டார்கள்) இதை எப்படி உச்சரிப்பது என்று புரியவில்லை. de (கான்கார்டே?) என்று முடிகிறது. --குறும்பன் 22:55, 10 பெப்ரவரி 2012 (UTC)

ஓ ! இது பிரெஞ்சு சொல் போல.. ஒலிப்பு அறிந்தவர்கள் உதவ வேண்டும்--இரவி 23:09, 10 பெப்ரவரி 2012 (UTC)

e இல் முடிந்தாலும் ஏ என ஒலிப்பதில்லை. French word concorde (IPA: [kɔ̃kɔʁd]). தமிழில் கான்கார்ட் (கான்கார்டு), கொன்கோர்ட் (ஈழத்தமிழ்). மன்மோகன் சிங், மன்மோகன் சிங்கு என எழுதவேண்டும். கார்டு, ரோடு போன்றவை எடுத்துக்காட்டுகள் அல்ல.--Kanags \உரையாடுக 23:32, 10 பெப்ரவரி 2012 (UTC)

சிங்கு என்பது சரி என்றாலும் பொது வழக்கம் இல்லை. ஆனால், கார்டு (card), ரோடு போன்றவை ஏற்கனவே பொது வழக்கில் உள்ளவை. எனவே, அந்த எடுத்துக்காட்டுகளைத் தந்தேன். குறிப்பாக, card, cord ஒத்த ஒலிப்பு உள்ளவை. எந்த வகையில் இந்த எடுத்துக்காட்டுகள் இங்கு பொருந்தா என்று விளக்கினால் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். நன்றி--இரவி 00:08, 11 பெப்ரவரி 2012 (UTC)

கார்டு, ரோடு போன்றவை தமிங்கிலீசுச் சொற்கள். எனவே அவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளவும் கூடாது, எழுதவும் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:34, 11 பெப்ரவரி 2012 (UTC)

இல்லை சிறீதரன், எந்தெந்த ஒலி / எழுத்துகளில் தமிழ்ச் சொற்கள் முடியா என்னும் இலக்கண விதி வேறு. பிறமொழிச் சொற்களை எப்படித் தமிழாக்குகிறோம் என்பது வேறு. சிங் -> சிங்கு எடுத்துக்காட்டு போல கார்ட் -> கார்ட்டு என்று எழுதினால் அது cartu என்ற ஒலிப்பே தரும். நோட்டு, ரூட்டு போன்ற சொற்களை ஒப்பு நோக்கலாம். எனவே, d ஒலி வேண்டுமானால் ட் இல்லாமல் வெறுமனே டு என்று முடிப்பதே சரியாக இருக்கும். கார்ட் - > cart என்னும் ஒலிப்பே தரும்--இரவி 16:07, 11 பெப்ரவரி 2012 (UTC)

dictionary.comல் [1] கான்கோர்டு ( கான்கோ(கா)ர்ட் என்று அல்ல ) என்ற உச்சரிப்பது போல் எனக்கு தோன்றுகிறது. --குறும்பன் 02:07, 11 பெப்ரவரி 2012 (UTC)

எனக்கும் அப்படியே கேட்கிறது. கான்கோர்டு என மாற்றலாமா?--இரவி 16:07, 11 பெப்ரவரி 2012 (UTC)

  • தமிழில் ட் என்பது வல்லினம் (ஒற்றாக எங்கு வந்தாலும்!). கார்ட்டு என்றால் Cart, கார்டு என்றால் Card. (பாட்டு-பாடு, காட்டு-காடு, வாட்டு-வாடு போல) வல்லின ஒற்று முன்னே வந்தால் மட்டுமே அடுத்து வரும் வல்லிய உயிர்மெய் எழுத்து வலித்து ஒலிக்கும், இது தவிர ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் வல்லின உயிர்மெய் எழுத்து வல்லினமாக வலித்து ஒலிக்கும். எனவே வலித்து வல்லினமாக ஒலிக்கும் இடங்கள் இரண்டே இரண்டுதான். கான்கோர்டு என்று எழுதுவதோ கான்கார்டு என்று எழுதுவதோ கடைசியில் வரும் ஒலிப்பைத் துல்லியமாகக் காட்டும் (குற்றியலுகரம் என்பதால்). தமிழ் இரண்டுசுழி ன் என்னும் எழுத்துக்குப் பின் வரும் ககர உயிர்மெய் எழுத்து மெலிந்தே ஒலிக்கும் (நான்கு, புன்கு, என்கிறேன் என்பதில் வருவது போல). இது ஏற்கத்தக்கத் திரிபு. எனவே கான்கோர்டு/கன்கார்டு என்பது congorde என்பது போன்ற ஒலிப்பு. ஒலிப்பை மட்டும் காட்டவேண்டும் எனில் தமிழ் மரபை மீறி கான்க்கோர்டு/கான்க்கார்டு என்று எழுதிக்காட்டலாம் (சொல்லாகப் பயன்படுத்துவது தவர்க்க வேண்டுவது). இக்கட்டுரையின் தலைப்பைக் கான்கோர்டு அல்லது கான்கார்டு என்று மாற்றுவது நல்லது என்பது என் கருத்து. இரவி, //கார்ட்டு என்று எழுதினால் அது cartu// என்பது முற்றிலும் சரியல்ல. cartə என்பது போல ஒலிக்கும் (தமிழ் டகரம் பல்லண்ண ஆங்கில ta போன்றது அன்று என்பது இன்னொரு வேறுபாடு). கடைசியில் வரும் ə என்பது குற்றுயிரொலி அல்லது குற்றியல் உயிரொலி (இதனை ஆங்கிலத்தில் schwa என்றும் கூறுவர்), இங்கே இது தமிழில் நன்கு அறியப்பட்ட குற்றியலுகரம். கார்ட்டு என்பது ஆங்கிலேயர் cart என்று ஒலிப்பது போன்றதே அவர்களும் cartə ஒலிப்பர் அப்படிக் குறிக்காவிடினும்!!--செல்வா 16:40, 11 பெப்ரவரி 2012 (UTC)

பேச்சு வழக்கில் எல்லா இடத்திலும் குற்றியலுகரம் வருவதில்லை தானே? ரூட்டு, நோட்டு ஆகிய சொற்களில் ட்டு ஒலி முழுமையாகவோ பாதிக்கு மேலேயோ ஒலிப்பதையே கேட்டுள்ளேன் :)

//தமிழ் இரண்டுசுழி ன் என்னும் எழுத்துக்குப் பின் வரும் ககர உயிர்மெய் எழுத்து மெலிந்தே ஒலிக்கும் (நான்கு, புன்கு, என்கிறேன் என்பதில் வருவது போல)//

இதை மறந்து விட்டேன் :) இயன்ற அளவு ஒலிப்புத் துல்லியம் என்பதற்காக கான்க்கோர்டு என்று எழுதலாம். கானுக்கோர்டு என்று எழுதினாலோ வேறு வகையில் ஒரு திரியும். ஆனால், ஒலிப்புத் துல்லியம் என்பதற்காகத் தமிழில் இயல்பாக வராத மெய்யொலிக்கூட்டங்களை இடுவது தகுமா? தமிழில் முதலில் மெய்யெழுத்து வராது என்கிறோம். ஆனால், கிரந்தம் தவிர்க்க ஃகாவ்னியம் என்று எழுதுகிறீர்கள். ஆய்தம் முதலில் வரலாம் என்று விதி உண்டா? எதை எங்கு எந்த அளவு விட்டுக் கொடுப்பது? இது ஒரு மிகவும் சிக்கலான கேள்வியாகவே தோன்றுகிறது :)--இரவி 17:00, 11 பெப்ரவரி 2012 (UTC)

  • ஆங்கிலம், பிரான்சியம் போன்ற மொழிகளிலிருந்து தமிழ் ஒலிபெயர்ப்புப் பெறுவதிலும் அதை எழுதுவதிலும் உள்ள சிக்கல் மேல் உரையாடல்களிலிருந்து தெரிகிறது. ஓரளவுக்கு இசைவான ஒலியையும் எழுத்தையும் பெறலாமே ஒழிய முற்றிலும் அவை ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கமுடியாது. எனவே பல வழிமாற்றல்களைத் தருவதே பொருத்தம் என்று கருதுகிறேன். அவ்வாறே செய்துமுள்ளேன்.

--பவுல்-Paul 17:50, 11 பெப்ரவரி 2012 (UTC)

கான்கார்டு என்று எழுதலாமா அல்லது கான்கோர்டு என்று எழுதலாமா? செல்வா இரண்டில் ஒன்று என்று கூறிவிட்டார். பவுல், இரவி மற்றும் பலரது கருத்து தேவை. இது குறுந்தட்டு திட்டத்தில் உள்ள கட்டுரை என்பதை கவனித்தில் கொள்க. --குறும்பன் 17:30, 12 பெப்ரவரி 2012 (UTC)

பவுல் கருத்துடன் ஒத்துப் போகிறேன். தமிழில் வழமையாக கான்கோர்ட் என்று எழுதி வந்திருந்தால் கான்கார்டு என்பது போதுமானது. கூடுதல் துல்லியம் வேண்டி கான்கோர்டுக்கு எனது வாக்கு. குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள கட்டுரை என்பதற்காக வழமையான விக்கிப்பணிகளைச் செய்யத் தயங்கத் தேவை இல்லை. குறுந்தட்டுத் திட்டத்துக்காகத் தரும் பதிப்பு எண்ணை மட்டும் பிழையின்றியும் சர்ச்சை இன்றியும் பார்த்துக் கொண்டால் போதுமானது--இரவி 17:45, 12 பெப்ரவரி 2012 (UTC)

  • குறுந்தட்டுத் திட்டத்திற்காக ஒரு வடிவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் "கான்கார்டு" என்பதை விட கான்கோர்டு அதிகப் பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன். --பவுல்-Paul 18:34, 12 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி இரவி, பவுல். வழக்கமான விக்கிப்பணிகள் செய்வதற்கு இவை தடையில்லை என்றாலும் இக்கட்டுரையில் இன்னும் விக்கியாக்கம் விரிவாக்கம் உரை திருத்தம் போன்ற பணிகள் இன்னும் செய்யப்படாமல் இருப்பதால் அவற்றை செய்வதற்கு முன்னே தலைப்பு மாற்றம் செய்தால் நன்று என்பதே என் எண்ணம். கனகு, மற்றோரிரின் கருத்துக்களையும் கேட்போம். என் வாக்கு கான்கோர்டு என்பதற்கே. --குறும்பன் 18:44, 12 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கான்கோர்டு&oldid=1036722" இலிருந்து மீள்விக்கப்பட்டது