பேச்சு:கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@ பயனர்:சக்திகுமார் லெட்சுமணன்... முயற்சிக்கு பாராட்டுகள்! சில ஆலோசனைகள்:

  • .... என்பது ... எனும் உரைநடையில் எழுதுவது அனைத்துக் கட்டுரைகளுக்கும் பொருந்தாது என கருதுகிறேன். பாடல்களின் தொகுப்பாகும் என்பதனைப் படிக்கும்போது, ஏதோ ஒரு தொகுப்பினைக் குறித்த கட்டுரை என எண்ணத் தோன்றுகிறது. மாற்றாக இப்படி எழுதலாமா எனப் பாருங்கள்:

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களுக்காக சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்தார். அப்பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஆதாரங்களை உடனடியாக சேர்த்து வாருங்கள்.
  • நடிகர்கள் குறித்த தகவல்களை சேர்ப்பது, உங்களுக்கு கூடுதல் பளுவினைத் தரலாம். எனவே இசையமைப்பாளர் தகவல் போதுமானது எனக் கருதுகிறேன்.
  • விக்கி உள்ளிணைப்பினை ஒருமுறை தந்தால் போதுமானது. அதாவது, கே. வி. மகாதேவன் என முதலில் குறிப்பிடும்போது மட்டும் உள்ளிணைப்பு தரலாம். உங்களின் நேரம் மிச்சமாகும் என்பதற்கே இந்த ஆலோசனை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:52, 14 மார்ச் 2016 (UTC)

@ பயனர்:சக்திகுமார் லெட்சுமணன்... எனது பரிந்துரையை தாங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:47, 17 மார்ச் 2016 (UTC)

நன்றி நண்பரே! நான் தற்போது தான் கவனித்தேன். தவறுகளை சரிசெய்து கொள்கிறேன். நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 05:48, 17 மார்ச் 2016 (UTC)

@ பயனர்:சக்திகுமார் லெட்சுமணன்...கட்டுரையில் உரிய முன்னேற்றங்களை செய்தமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:44, 17 மார்ச் 2016 (UTC)