பேச்சு:ஏரல் கடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகு, இதனை ஆரல் கடல் என மாற்றலாமா?--செல்வா 14:22, 20 பெப்ரவரி 2007 (UTC)

ஏரல் என்பதைத் தமிழகத்தவர் அடையாளங் காண மாட்டார்களோ தெரியவில்லை. ஆனால் ஈழத்தவர் ஆரல் என்றால் சற்றும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். --கோபி 15:40, 20 பெப்ரவரி 2007 (UTC)
கோபி, மூல மொழிகளில் ஆரல் என்பது போல ஒலிக்கும் என நினைக்கிறேன். கனகுக்கு ரஷ்யன் மொழி தெரியுமாகையால் அவரிடம் கேட்டேன். தமிழக வழக்கு என்று இது பற்றி ஏதும் உள்ளதா என அறியேன்.--செல்வா 15:51, 20 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, தமிழக ஈழ வழக்குகளிடையே உள்ள பல வித்தியாசங்களை ஈழத்தவரால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் ஆரல் என்றால் விளங்க வாய்ப்பேயில்லை என்பதையே சுட்டிக் காட்டினேன். ஏரல் என்பதே பழக்கமானது. பாடநூல்களில் பயன்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். --கோபி 15:53, 20 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, ரஷ்ய மொழியில் இக்கடல் அரால் (Ара́льское море) என்று தான் சொல்லப்படுகிறது. இக்கடலின் பெரும்பகுதி மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் உள்ளது. சிறுபகுதி கசகஸ்தானில் உள்ளது. ரஷ்யர்களும் தமது மொழி இலக்கணத்திற்கு ஏற்ப சொற்களைப் பலுக்குவார்கள். எனவே ரஷ்ய மொழி உச்சரிப்பு தான் சரியானது என்று சொல்லமுடியாது. உஸ்பெக் மொழியில் Orol என்பார்கள். ஆரல், அல்லது அரால் என்பதைவிட ஏரல் (ஆங்கிலத்திலும் அப்படியே உள்ளதுபோற் தெரிகிறது) என்றே இருக்கலாம் என்பது என் கருத்து. மேலும் தகவல் தெரிந்தால் மீண்டும் வருகிறேன்.--Kanags 20:40, 20 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி, கனகு. ஏரல் என்பது எனக்கு ஏற்புடையதுதான், ஆனால் அப்பகுதி மொழிகளுக்கு நெருக்கமாக இருக்கும்படியாக மாற்றலாமோ என எண்ணியே கேட்டேன். நன்றி. --செல்வா 21:39, 20 பெப்ரவரி 2007 (UTC)

ஏர்ள் கடல் என சில இடங்களில் வாசித்ததுண்டு. அத்துடன் ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் ஏரல் ஏரியாகும்.தலைப்பை மாறுவதா?,அல்லது அடைப்புக்குள் எழுதி விடலாமா?.அடைப்புக்குள் எழுதி விடலாமென தோன்றுகிறது.உங்கள் கருத்தையும் அறிய நினைக்கிறேன். நன்றி. --Aathavan jaffna (பேச்சு) 08:52, 7 ஏப்ரல் 2013 (UTC)

இது ஏரியாக இருந்தாலும், கடல் என்று தான் பழக்கத்தில் உள்ளது. எனவே தலைப்பை மாற்றத் தேவையில்லை. கட்டுரையின் முதற் பத்தியில் இது குறித்து எழுதலாம். ஏர்ள் என எழுதுவது தவறு. ஏரல் அல்லது அரல் அல்லது ஆரல் என்பதே சரியானது. கேட்க--Kanags \உரையாடுக 11:35, 7 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏரல்_கடல்&oldid=1396960" இலிருந்து மீள்விக்கப்பட்டது