பேச்சு:இ. சி. இரகுநாதையர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்கு, நீங்களோ, வேறு யாரேனுமோ, கொக்குவில்லைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதலாமே. இங்கு கனடாவில் பல இலங்கைத் தமிழர்கள் கொக்குவில்லில் இருந்து வந்தவர்கள் (எழுத்தாளர் அ. முத்துலிங்கம் கூட அங்கிருந்து வந்தவர்தான்). கொக்குவில்லர்கள் (= கொக்குவில்லூரர்) யாரேனும் எழுதுவது பொருத்தமாக இருக்கும். --செல்வா 03:23, 6 ஜனவரி 2008 (UTC)

இ. சி. இரகுநாதையர் எழுதிய நூலில்[தொகு]

இவர் எழுதிய சிவாலய தரிசனவிதியில்:

//தானம் வாங்குதற்கு உரிய உத்தம பாத்திரமாவார்: வேதாமகங்களையும் சிவபுராணங்களையும் ஓதி உணர்ந்தவர்களாய், பாவங்களை முற்றக் கடிந்தவர்களாய், சந்தியாவந்தனம் சிவபூசை முதலிய கருமங்களைத் தவறாமல் விதிப்படி சிரத்தையோடு செய்பவர்களாய் இல்லறத்தில் வாழ்பவர்களாய், வறியவர்களாய் உள்ள பிராமணர்கள். இவர்களல்லாத பிறருக்குத் தானஞ் செய்தவர் பத்துப்பிறப்பு ஒந்தியாயும், மூன்று பிறப்புக் கழுதையாயும், இரண்டு பிறப்புத் தவளையாயும், ஒரு பிறப்பு சண்டாளராயும், பின் சூத்திரராயும், வைசியராயும், அரசராயும், பிராமணராயும் பிறந்து வறுமையினாலும் நோயினாலும் வருந்தி உழலுவர். ஆதலா, உத்தமபாத்திரராகிய பிராமணருக்கே தானஞ்செய்தல் வேண்டும். அத்தலத்தில் உத்தமர் இல்லையாயின், தம்மாலியன்ற பொருளை, வேறு தலத்துள்ள உத்தமரைச் சுட்டிச் சங்கற்பித்து, உதகங் கொடுத்து, அவரிடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்தல்வேண்டும். அவர் இறந்தாராயின், அவர் புத்திரருக்குக் கொடுத்தல் வேண்டும். அவரும் இறந்தாராயின் சிவபெருமானுக்குக் கொடுத்தல் வேண்டும்.//

இப்படியும் தமிழ்நூலில் எழுதியிருப்பது பெரு வியப்பாக உள்ளது! --செல்வா 03:38, 6 ஜனவரி 2008 (UTC)

இந்நூலை அவர் எழுதவில்லை, பதிப்பித்திருக்கிறார். மூலம் யாருடையது என்று தெரியவில்லை. சிவாலயங்களில் யார் யாருக்கு தானம் கொடுக்கலாம் என்பதை எழுதியிருக்கிறார். எல்லாப் பிராமணர்களுக்கும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். ஆனாலும், தண்டனை மிக அதிகம் தான்:).--Kanags \பேச்சு 08:21, 6 ஜனவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._சி._இரகுநாதையர்&oldid=200504" இலிருந்து மீள்விக்கப்பட்டது