அ. முத்துலிங்கம்
| அ.முத்துலிங்கம் | |
|---|---|
| பிறப்பு | சனவரி 19, 1937 கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை |
| இருப்பிடம் | கனடா |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
| பெற்றோர் | அப்பாத்துரை, ராசம்மா |
| வாழ்க்கைத் துணை | கமலரஞ்சினி |
| பிள்ளைகள் | சஞ்சயன், வைதேகி |
| இணையதளம் | |
| http://www.amuttu.net | |
அ. முத்துலிங்கம் (பிறப்பு: சனவரி 19, 1937) குறிப்பிடத்தக்க ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.
பொருளடக்கம் |
அறிமுகம் [தொகு]
1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.
இலக்கியப் பணிகள் [தொகு]
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள் [தொகு]
புதினம் [தொகு]
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008)
சிறுகதை தொகுப்பு [தொகு]
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan - available at Amazon.com)
- குதிரைக்காரன் - (2012)
கட்டுரைத் தொகுப்பு [தொகு]
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு - 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) - காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி - கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் - உயிர்மை பதிப்பகம் (2011)
சிறுகதைகள் பட்டியல் [தொகு]
| சிறுகதைகள் | ஆண்டு |
|---|---|
| அக்கா தொகுப்பு 1964 | |
| 1. கடைசி கைங்கரியம் | 1958 |
| 2. ஊர்வலம் | 1958 |
| 3. கோடைமழை | 1959-1961 |
| 4. அழைப்பு | 1959-1961 |
| 5. ஒரு சிறுவனின் கதை | 1959-1961 |
| 6. அனுலா | 1959-1961 |
| 7. சங்கல்ப நிராகரணம் | 1959-1961 |
| 8. இருப்பிடம் | 1959-1961 |
| 9. பக்குவம் | 1959-1961 |
| 10. அக்கா | 1959-1961 |
| திகடசக்கரம் தொகுப்பு 1995 | |
| 11. பார்வதி | 1994 |
| 12. குங்கிலிய கலய நாயனார் | 1994 |
| 13. பெருச்சாளி | 1994 |
| 14. மாற்றமா?தடுமாற்றமா? | 1994 |
| 15. வையன்னா கானா | 1994 |
| 16. குதம்பேயின் தந்தம் | 1994 |
| 17. செல்லரம்மான் | 1994 |
| 18. திகடசக்கரம் | 1994 |
| வம்சவிருத்தி தொகுப்பு 1996 | |
| 19. துரி | 1995 |
| 20. ஒருசாதம் | 1995 |
| 21. கிரகணம் | 1995 |
| 22. விழுக்காடு | 1995 |
| 23. பீனிக்ஸ் பறவை | 1995 |
| 24. முழுவிலக்கு | 1995 |
| 25. முடிச்சு | 1995 |
| 26. ஞானம் | 1995 |
| 27. சிலம்பு செல்லப்பா | 1995 |
| 28. வம்சவிருத்தி | 1995 |
| 29. பருத்தி பூ | 1995 |
| 30. வடக்கு வீதி | 1996-1997 |
| வடக்கு வீதி தொகுப்பு 1998 | |
| 31. எலுமிச்சை | 1996-1997 |
| 32. குந்தியின் தந்திரம் | 1996-1997 |
| 33. வசியம் | 1996-1997 |
| 34. பூமாதேவி | 1996-1997 |
| 35. யதேச்சை | 1996-1997 |
| 36. கம்ப்யூட்டர் | 1996-1997 |
| 37. ரி | 1996-1997 |
| 38. உடும்பு | 1996-1997 |
| 39. மனுதர்மம் | 1996-1997 |
| 40. விசா | 1996-1997 |
| 41. ஒட்டகம் | 1996-1997 |
| மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 | |
| 42. மகாராஜாவின் ரயில்வண்டி | 1999-2000 |
| 43. நாளை | 1999-2000 |
| 44. தொடக்கம் | 1999-2000 |
| 45. ஆயுள் | 1999-2000 |
| 46. விருந்தாளி | 1999-2000 |
| 47. மாற்று | 1999-2000 |
| 48. அம்மாவின் பாவாடை | 1999-2000 |
| 49. செங்கல் | 1999-2000 |
| 50. கடன் | 1999-2000 |
| 51. பூர்வீகம் | 1999-2000 |
| 52. கறுப்பு அணில் | 1999-2000 |
| 53. பட்டம் | 1999-2000 |
| 54. ஐவேசு | 1999-2000 |
| 55. எதிரி | 1999-2000 |
| 56. ஐந்தாவது கதிரை | 1999-2000 |
| 57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் | 1999-2000 |
| 58. கல்லறை | 1999-2000 |
| 59. கொம்புளானா | 1999-2000 |
| 60. ராகு காலம் | 1999-2000 |
| 61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் | 1999-2000 |
| பிற | |
| 62. 23 சதம் | 2001 |
| 63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் | 2001 |
| 64. அடைப்புகள் | 2001 |
| 65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் | 2001 |
| 66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் | 2002 |
| 67. ஆப்பிரிக்காவில் அரை நாள் | 2002 |
| 68. கொழுத்தாடு பிடிப்பேன் | 2002 |
| 69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை | 2003 |
| 70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி | 2003 |
| 71. காபூல் திராட்சை | 2003 |
| 72. நாற்பது வருட தாபம் | 2003 |
| 73. பூமத்திய ரேகை | 2003 |
| 74. தளுக்கு | 2003 |
| 75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை | 2003 |
| அமெரிக்ககாரி தொகுப்பு | 2009 |
பரிசுகளும், விருதுகளும் [தொகு]
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு - 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் - லில்லி தேவசிகாமணிப் பரிசு - 1995
- வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு - 1996
- வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு - 1996
- ஜோதி விநாயகம் பரிசு - 1997
- வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு - இலங்கை அரசு சாகித்தியப் பரிசு - 1999
- கனடா தமிழர் தகவல் - நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது - பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது - 2012
- குதிரைக்காரன் - சிறுகதைத் தொகுப்பு - 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புக்கள் [தொகு]
இவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள்... [தொகு]
- ஜெயமோகன் சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
- ஜெயமோகன் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து
- எஸ். ராமகிருஷ்ணன்
பிற இணைப்புக்கள் [தொகு]
- அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
- என்னைக் கவர்ந்தவர்கள் - 3 சிறுகதை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - கே.எஸ்.பாலச்சந்திரனின் பதிவு
- எழுத்தாளர்: அ.முத்துலிங்கம் - தென்றல் அமெரிக்க மாத இதழ்
- இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி்
- இரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி
- எழுத்தாளர் முத்துலிங்கத்தின் வலைப் பதிவு http://www.amuttu.net
- தாமரை பூத்த தடாகம்
- பாதுகாப்பில்லாத மொழி
- Tamil Literary Garden awards a ‘labour of love’ - ரொறொன்ரோ ஸ்ரார்