பேச்சு:இந்தோளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம் நல்லதல்ல. அது ஹிந்தோளம் என்றுதான் அழைக்கப்படுகிறது. கனக்ஸ், ஹி வருகிர் எல்லா வார்த்தைகளையும் அ என்று மாற்ற போகிறீர்களா? அப்படியானால் ஹிரோஹிட்டோ இரொஇட்டொ என ஏன் மாற்றவில்லை? அதைப்போல் எவ்வளவோ வார்த்தைகள், தலைப்புகள் ஹ உடன் உள்ளன. அவைகளூக்கு உங்கள் கைவரிசையை காண்பிக்கப் போகிறீர்களா? உஙகள் தேவையற்ற வெறி எங்கு நிற்கும்? நன்றி. −முன்நிற்கும் கருத்து 92.39.203.147 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஹிரோஹிட்டோவை இரோயிட்டோ என்று மாற்றுவது மிகச்சரி (இந்தி, அரிகரன், இம்சை, இரண்யன், அனுமன் போல). உங்கள் கேள்வி நேர்மையானதே. ஆனால் கைவரிசை, வெறி என்று தாறுமாறாகப் பேசுவதை நிறுத்தவும். -- சுந்தர் \பேச்சு 12:51, 12 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

சரி தெஹ்ரான், ஹிரோஹொடோ, ஆஷ்மோர், ஐஸ்லாந்து, அவுஸ்திராலியா, பஹாய், ஹரிகாம்போஜி, ஜன்னிய, ஜான், ஜொஹான்னெஸ் கெப்லர், போன்றவற்றை உடனடியாக மாற்றவும். ஏன் கனகுசு மட்டும் வார்த்தை சலவைகளில் ஈடுபடவேண்டும். −முன்நிற்கும் கருத்து 92.39.203.147 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேலும், உங்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் தாறுமாறாக தோன்றூகிறது.உங்கள் தமிழை சீர் செய்யவும். கைவரிசை என்றால் அகராதிப்படி திறமை, கொடை. −முன்நிற்கும் கருத்து 92.39.203.147 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

முதலாவது பெயர் அறிவிக்காத பயனர் 92.39.203.147 கூறுவது சரியல்ல. இந்தோளம் என்பது தமிழில் பெருவழக்கு. அதே போல அரிகாம்போதி என்பதும் பெருவழக்கு. அரி, அரன் என்னும் சொற்கள் தமிழில் நெடிய வழக்கு பெற்றவை. அவர் கூறும் பெயர் வரிசையைப் பார்ப்போம்: தெஹ்ரான், ஹிரோஹொடோ, ஆஷ்மோர், ஐஸ்லாந்து, அவுஸ்திராலியா, பஹாய், ஹரிகாம்போஜி, ஜன்னிய, ஜான், ஜொஹான்னெஸ் கெப்லர். இவற்றை தெஃகரான் (டெஃகரான், தெகரான்), இரோயிட்டோ, ஆழ்சுமோர் (ஆசுமோர்), ஐசுலாந்து, ஆத்திரேலியா (ஆசுத்திரேலியா), பகாய் (பஃகாய்), அரிகாம்போதி, சேய் இராகம் ('சன்னிய, சன்னிய, இசன்னிய), இசான் ('சான், சான், இஞ்சான்), யொஃகானசு கெப்லர் (யொகானசு கெப்லர்) என்று எழுதலாம். அவர் உரோமானிய எழுத்தில் Gandhi, Buddha, Dhaneshwar என்று எழுதிவிட்டால், ஏதோ 'காந்தி, 'பு'த்'தா:, 'த:னே^ச்வர் என்று ஒலிப்பதாக கற்பனை செய்கிறார். ஆங்கிலேயர்கள் காந்தியை, மிட்டாய் என்னும் பொருள் தரும் Candy என்பது போல Gandi என்று வழங்குவர். புத்தரை இந்தி மொழியில் கிழவன் என்று பொருள் படும் 'பு'ட்'டா (buddaa, not 'பு'த்'தா) என்றோ அல்லது பெருவழக்காக Boodaa என்றோ என்பது போல பலுக்குவர். தனேச்சுவர் என்பதை 'டேன்^ச்வர் அல்லது 'டேன்^ச்வார் என்றோ ஒலிக்குமாறு சொல்லுவார்கள். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கும். அதனை ஒட்டியே அம்மொழியாளர் இயங்குவர். ஏதோ 2-5% மக்கள் ஒரு சில மூல மொழியில் உள்ளது போல ஒலிக்க இயலும். இயலாமை என்பதை விட அவ்வொலிப்புகள் வழங்கு மொழியின் இயல்பைக் குலைப்பன என்பதனை உணர வேண்டும். சீன மொழியில் இருக்கும் ஒலிப்பை மூல ஒலிப்பு குன்றாமல், சமசுகிருதத்திலோ, ஆங்கில, 'டாய்ட்சு மொழியிலோ கூறுதல் இயலாது என்பதை விட உண்மையிலேயே இணக்கமுற இயங்குவது இயலாது என்பதே கண்டு கொள்ளவேண்டியது. இசைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி முதற்கொண்டு மிகப்பலரும் இந்தோளம், அரிகாம்போதி என்றுதான் கூறினார்கள்/கூறுகிறார்கள். அரியும் அரனும் ஒன்றென்று அறியாதவன் வாயிலே மண்ணு என்றெல்லாம் சொலவடை கூட உள்ளது. கம்பன் அனுமன் என்று எழுதியதும் யாவரும் அறிந்தது. புட்பம், இருடி, நட்டம், சரசுவதி போன்று ஏராளமான சொற்கள் தமிழில் கிரந்தம் விலக்கியே வழிவழியாய் எழுதி வந்துள்ளோம். கிரந்த எழுத்தை இட்டுத்தான் எழுதவேண்டும் என்பது பல நிலைகளில் பலரால் ஏற்கவியலாதது. தமிழை, தமிழ் மரபுகளை மதிக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நேர்மையானது. --செல்வா 00:52, 27 டிசம்பர் 2008 (UTC)
செல்வா, உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை. இன்றைக்கே, எஸ். எம். எஸ் எம்டன்,கிறிஸ்துமஸ், ஆஸ்திரேலியா, சனீஸ்வரன், காமிக்ஸ்‎, நவாஸ் ஷெரீப்‎, ஹரோல்ட் பிண்டர்‎ போன்ற தலைப்புகள் உள்ளன.கட்டுடைகளில் உள்ளே இன்னும் எவ்வளவோ உள்ளன. "தமிழ் மரபு மதிப்பு" திடீல் திடீல் என்று தோன்றுகிறதே தவிற , ஒரு கன்ஸிஸ்டன்சி இருப்பதாக தெரியவில்லை. அப்படி கன்ஸிஸ்டென்ஸாக அமல் படுத்தமுடியாத கொள்கைகளை வைத்துக் கொள்ள கோடாது. உங்கள் எழுத்துகளீலேயே எவ்வளவோ தடுமாற்றங்களை காணலாம். மேலும் தமிழெழுத்து தலிபான்கள் மற்றவர்களை தப்புகண்டுபிடிப்பதில் தேவையற்ற கவனம் செலுத்தி பொதுஜனத்தை விக்கியிலிருந்து நீக்குவார்கள். நீங்கள் ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் என்ற கட்டுரையில் பங்கேற்றினீர்களே, அப்போது எங்கே போச்சு "தமிழ் மரபு மதிப்பு"??

−முன்நிற்கும் கருத்து 217.28.4.188 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கூடிய மட்டிலும், தவிர்த்தோ அல்லது குறைத்தோ கிரந்தத்தையும் (பிற ஒலித்திரிபுக்குறிகளையும்) பயன்படுத்துவது என்பதனையே ஏற்கத்தக்கப் பரிந்துரையாகக் கொள்கிறேன். நான் பல இடங்களில் கிரந்தங்களை எடுத்தாண்டு உள்ளேன், பிற ஒலித்திரிபுக்குறிகளையும் எடுத்தாண்டு உள்ளேன். அளவிறந்தும், தேவை இல்லாமலும் பயன்படுத்துவது வேண்டாம் என்பதே என் போக்கு. தமிழில் துல்லிய ஒலிப்பைக் காட்ட நான் பல முறைகளை பல காலமாக பரிந்துரைத்தும் கையாண்டும் வந்திருக்கின்றேன். ஆனால் அவை யாவுமே, குறைவாக இருப்பதே நல்லது என்பது என் கொள்கை. திரித்து எழுதுதலே நல்லது. எல்லா மொழிகளிலும் அப்படித்தான் செய்கிறார்கள். ஞானசம்பந்தன் என்றோ, பழனியப்பன், யாழினி என்றோ பல மொழிகளில் எழுத இயலாது. எடுத்துக்காட்டாக சீனமொழி ஒலிப்புகளையும், பிரான்சிய, போலந்திய மொழி ஒலிப்புகளையும், எல்லா மொழிகளும் எடுத்தாள இயலாது. "தமிழெழுத்து தாலிபான்கள்" என்று கடுமையாக சாடும் நீங்கள் விக்கி முறைகளையும், நாங்கள் நாள்தோறும் நேர்மையுடன் கூட்டுழைப்பாக பணியாற்றும் முறைகளையும் போதிய அளவு அறியாதவரோ என்றே நினைக்கின்றேன். "கன்ஸிஸ்டென்ஸாக அமல் படுத்தமுடியாத கொள்கைகள்" என்று கூறும் நீங்கள் நான் மேலே கூறியுள்ள பரிந்துரையை (இன்னும் கொள்கை அல்ல)எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். அப்பரிந்துரைகளுக்கு இணக்கமாகவே நான் இயங்கி வந்திருக்கின்றேன். கேள்விகள் கேட்கும் நீங்கள், இங்கு வந்து ஆக்கம் தருமாறு இரண்டொரு கட்டுரைகளை எழுதலாமே? கிரந்தத்தைப் பயன்படுத்தியும் எழுதுங்கள், அது உங்களுக்கு உவப்பாக இருப்பின். கூடிய மட்டிலும் குறைவாகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றேன். இது தாலிபான்தனம் அல்ல, நேர்மையான, அறிவுசார்ந்த பரிந்துரை. தமிழ்மொழி கிரந்தத்தைத் தவிர்த்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக செழிப்பாக வளர்ந்து வந்துள்ளது. தமிழ் வாழ்மொழி. கணக்கொன்றைத் துவக்கி நல்ல சில கட்டுரைகளையேனும் கிரந்தம் கலந்தேனும் எழுதுங்களேன் ஐயா/அம்மையாரே? எத்தனையோ பேர் கிரந்தம் கலந்து எழுதியதை நாங்கள் ஏதும் அழிக்கவில்லை. நானும் பிறரும் கிரந்தம் கலந்து எழுதி கட்டுரைகள் ஆக்கியுள்ளோம். தாலிபான்கள் என்றெல்லாம் சாடுவதில் என்ன பயன்? அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 17:27, 27 டிசம்பர் 2008 (UTC)
பெயர் அறிவிக்காத பயனரே, இன்னொன்றையும் நீங்கள் நேர்மையாக எண்ணிப்பார்க்க வேண்டும். "தமிழெழுத்து தாலிபான்கள்" என்று சாடுகின்றீர்களே, அதே போல நீங்கள் உரோமன் எழுத்துத் தாலிபான்கள் என்று ஆங்கில மொழியாளர்களையும், சிரிலிய எழுத்துத் தாலிபான்கள் என்று உருசிய, செர்பு, உக்ரேனியர்களையும், தேவநாகரி தாலிபான்கள் என்று இந்தி மொழியாளர்களையும் சாடுவீர்களா? Japan ('சப்பான்) என்று எழுதவியலாத 'டாய்ட்சு மொழியினரையும் அரபியரையும் ஜகரத்தை ஒதுக்கும் தாலிபான்கள் என்று சாடுவீர்களா? Jesus என்னும் சொல்லை எசுப்பானிய மொழியர் எப்படி ஒலிக்கின்றார்கள் என்று கேட்டுப்பாருங்கள். ஏன் ஆங்கிலேயர் ஞானசம்பந்தன் என்பதை எப்படி ஒலிக்கின்றார்கள் என்று கேட்டுப்பாருங்கள். கட்டாயம் கிரந்தம் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் திணிக்கக் கூறினால் அது தாலிபான்தனம் ஆகாது ஆனால் தமிழில் தமிழ்மொழி எழுத்துகளில் எழுதுதல் வேண்டும், ஆங்கில, மற்றும் கிரந்த எழுத்துகள் கலந்து எழுதுதல் கூடாது என்றால் அது தாலிபான்தனம் ஆகுமா? நீங்கள் இவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்களை paறைyaa என்றுதான் எழுதவேண்டும், அல்லது ஞாnasampaந்தn என்றுதான் எழுத வேண்டும் சொல்லிப்பாருங்கள். இன்றைய ஒருங்குறியில் (யூனிக்கோடில்) எழுத இயலும் என்று கூறிப்பாருங்கள். நேர்மையாக எண்ணிப்பாருங்கள். பிறமொழியாளர்கள் தங்கள் மொழி இயல்புக்கு மாற்றியும் திரித்தும் எழுதுவது போலவே தான் தமிழும் செய்கின்றது. மஞ்சுஸ்ரீ என்னும் பெயரை சீன மற்றும் பிறமொழியாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்: சீனம்: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; நிப்பான்: மோன்ஜு; திபெ.: ஜம்பெல்யாங். தமிழில் மஞ்சுசிரீ என்றோ மஞ்சுசிறீ என்றோ எழுதினால் என்ன ஐயா/அம்மையே தவறு? வலிந்து திணிப்பது தவறில்லை, திணிக்காதே என்று கூறுவது தவறா? இதனை பல முறை இங்கு பொறுமையாக கூறியிருக்கின்றோம். இது இன்னுமொரு முறை. --செல்வா 18:47, 27 டிசம்பர் 2008 (UTC)

பழனியப்பனை விடுங்க கண்ணன் என்பதை அமெரிக்கர்கள் கேணன் என்று தான் உச்சரிப்பார்கள். புகழேந்தி என்பதை வடநாட்டுகாரர்கள் ரொம்ப தெளிவா உச்சரிப்பாங்களா? ;-) புகழேந்திய கேட்டா சொல்லுவாறு புகழேந்தி பட்ட பாட்டை ;-)) - குறும்பன் 19:29, 27 டிசம்பர் 2008 (UTC)

ஆம் அதே போல மணி என்பதை °மேனி என்பது போல ஒலிக்கிறார்கள். இதனால் சிலர் Money என்று தங்கள் பெயரை எழுதிக்கொள்கிறார்கள். ஒலித்திரிபு குறைவாய் இருக்குமென. அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று பார்த்தால் தெரியும் எத்தனை பெயர்கள் எத்தனை திரிபுகளுடன் பலுக்கப்படும் என்பது. --செல்வா 03:48, 28 டிசம்பர் 2008 (UTC)

கிரந்தம் பற்றி ஒத்திசைவு நோக்கி[தொகு]

கிரந்தம் பற்றி அலட்ட அலுப்பு தட்டுகிறது. ஆனால் அந்தப் பயனர் ஒன்றைச் சுட்டி காட்டியுள்ளார். அதாவது கிரந்தம் தொடர்பாக த.வி ஒரு ஒத்திசைவு நிலைப்பாடு இல்லை என்று. சமஸ்கிருதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று பல முக்கிய தலைப்புகளில் கிரந்தம் இடம்பெறுகிறது. தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப சொற்கள் என்பது சரியான வழிகாட்டல். ஆனால் விதிவிலக்குகள் என்ன என்று நாம் சற்று கூடிய துல்லியமாக வரையறை செய்ய தள்ளப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். oru ilakuvaana vazi irukku, peesaama rooman ezuththumuRaikku maaRidalaam, piRaku kirawtham athu ithaNdu thollai tharamaaddaarkaL. --Natkeeran 04:32, 28 டிசம்பர் 2008 (UTC)

நற்கீரன், கிரந்தம் வரிவடிவ எழுத்து ஒரு பாடு என்றாலும், பிற தமிழ்ச் சொற்களோடு வழங்கும் பொழுது தமிழின் ஒலிநயம் கெடுகின்றது, மாறுகின்றது, இலக்கண முறைகள் சிதைவுறுகின்றன போன்ற பிற செய்திகளே முக்கியம். சீன ஒலிப்புகள் அனைத்தையும் குறிக்க வழிகள் ஏற்படுத்தினாலும், அவ்வொலிப்புகளுடன் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, 'டாய்ட்ச்சு மொழியிலோ இடையிடையே அதிகமாக வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மேலும் இந்த கிரந்தம் என்பது ஒரு பண்பாட்டுப் போராகவும் பலர் எதிர்கொள்கிறார்கள். பிற தென்னிந்திய மொழிகளைப் பாருங்கள் (குறிப்பாக விக்கி கட்டுரைகளை), சமசுகிருதத்தாக்கம், அறவே அந்த மொழிகளை அழித்து வருகின்றது (இதனை வளர்ந்து வருகின்றது என்பாரும் இருப்பார்கள்). பிறமொழிச்சொற்கள் (சமசுகிருதம், ஆங்கிலம், சுவாகிலி, சீனம்) என்பது ஒரு செடிக்கு உரம் இடுவது போன்று என்று எண்ணினாலும், உரம் அதிகம் போட்டால், செடியே செத்துவிடும். கிரந்தத்தை விடுத்து தமிழில் எழுத திட்டவட்டமான இலக்கண முறைகள் உண்டு. ஒருசிலரின் திருகுவாதத்தால் அவை செல்வாக்கு குன்றிக்கிடக்கின்றது. புஷ்பம் என்பதை புட்பம் என்றும் ரிஷி (ருஷி) என்பதை இருடி என்றும் எழுதி வந்ததுபோல பிரஷ்னேவ் என்பதை பிரட்னேவ் என எழுதலாம். பிரஷ்னேவ் என்றாலும் துல்லிய ஒலிப்பு இல்லை. பிரழ்ச்னேவ் என்றும்கூட எழுதலாம். முக்கியமாக ஒரு சொல்லை நாம் தமிழில் (நமக்காக) எவ்வாறு வழங்குகிறோம் என்பதுதான் முக்கியம். ஒலித்துல்லியம் ஒரு நிலைக்கு மேல் கட்டாயம் தேவை இல்லை. பிரானிசிய மொழியில் இருந்து பெரிய அளவிலே சொற்களையும் கருத்துகளையும் பெற்ற ஆங்கிலத்தில், பாரிசு நகரை Paris என்று கூறுகிறார்கள். என்ன பிரான்சியர் அந்நகரை தங்கள் மொழியில் அப்படியா ஒலிக்கிறார்கள்? இல்லையே! பறையன் என்னும் சொல்லில் இருந்து Pariah என்னும் சொல்லை ஆங்கிலேயர்கள் கொண்டார்கள் என்ன அவர்கள் தமிழில் உள்ளது போலவா ஒலிக்கிறார்கள். நாம் வேண்டுமானால் Thooththukkudi என்று எழுதிக்கொள்ளலாம், ஆனால் ஆங்கிலேயன் Toot_what? என்று முழிப்பான். அவன் Tutucorin என்று தனக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்வான். இங்கு ஆங்கிலத்தில் இல்லாத ஒலிப்பு ஒன்றும் இல்லை, ஆனால் அவன் மொழிமரபுக்கு ஒவ்வாத ஒலிக்கூட்டங்கள், அவ்வளவே. இப்படி ஒலித்திரிபுகள் மொழிக்கு மொழி நடக்கும். ஒலிக்கூட்ட இயல்புகள் மொழிக்கு மொழி மாறும். இது எம்மொழிக்கும் இயல்பு. தமிழைத் தாழ்வாகவும் (நீச மொழி), கிள்ளுக்கீரையாகவும் நினைத்து, தமிழ் தன் இயல்புபடி இயங்கக் கூடாது, என்று நினைப்பவர்கள், வலிந்து கூறியும், எழுதியும், நடத்தும் தமிழ் எதிர்ப்பாளர்களின் போக்கு இது. தமிழில் தமிழெழுத்தில் எழுதினால், தமிழெழுத்துத் தாலிபான் என்று சாடும் இவர்கள் தமிழை எத்தனைத் தாழ்வாக துச்சமாக எண்ணுகிறார்கள் என்பதனை அறியலாம். கிறித்தவம், சமற்கிருதம், இசுலாம் என்றும் எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். அதனைத்தான் நாமும் வலியுறுத்த வேண்டும். முகமது, ரகுமான், அல்லா என்று எழுதுவோர்கள் உள்ளார்கள். முஃகமது, ரஃகுமான், அல்லாஃ என்றும் கூட எழுதலாம். தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துக்களில் எழுதுதல்தானே முறை. தமிழர்கள் M.G. ராமச்சந்திரன் என்று முன்னெழுத்துகளை உரோமன் எழுத்திலும் பின்னர் தமிழிலும் எழுதும் நகைப்பூட்டும் படி எழுதுகிறார்கள் (இவர்களில் சிலர் முனைவர் பட்டம் (பி.எச்.டி) பட்டம் பெற்றவர்களும் இருப்பார்கள்). ஆங்கிலத்திலே ஒரு மடல் வரைந்து அதில் எம். ஜி. Ramachandran என்று எழுதிப்பாருங்கள், அப்பொழுது தெரியும் இவ்வழக்கத்தின் கொடுமை. இங்கு நான் முன்வைத்துள்ள கருத்துகள் எல்லாம் தமிழ் விக்கியின் நடைமுறைகளுக்குத் தேவையான கருத்தாடல்கள் என்னும் நோக்கிலேயே எழுதியுள்ளேன். பொறுப்பாளர்கள் ஊன்றி எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 15:07, 28 டிசம்பர் 2008 (UTC)


உங்கள் கருத்துக்களுடன் மெத்த ஒத்துப் போகிறேன். ஆனால் கிரந்தம் 100% தவிர்ந்து எழுதுபது என்பது இன்றைய சூழலில் சாத்தியமானதா? ஏன் என்றால் பிற பயனர்கள் அப்படி எழுதுவார்கள்.
  • மிகவும் பரந்த வழக்கத்தில் இருக்கும் சொற்களை அனுமதிப்பது அல்லது ஏற்றுக்கொள்வது.
  • சுந்தர் சுட்டியபடி கலைச்சொற்களில் இயன்றவரை கிரந்தம் தவிர்ப்பது.
  • புதிய சொல், கருத்து, கட்டுரை ஆக்கத்தில் கிரந்தம் தவிர்ப்பது.
  • தமிழ் நபர்களின் பெயர்களை அப்படியே எழுதுவது.
இயன்றவரை ஒரு பெரிய வட்டத்தை அணுசரித்து செல்வத்தே நன்று என்று தோன்றிகிறது. மேலே சுட்டியவை தொடக்க புள்ளிகளே. இவற்றை சீராக்கி பரிந்துரைக்கலாம். --Natkeeran 21:20, 28 டிசம்பர் 2008 (UTC)
நற்கீரன், 100% தவிர்த்து எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. நானும் பல இடங்களில் பயன்படுத்துகின்றேன். கூடிய மட்டிலும் குறைவாக கிரந்தம், மற்றும் பிற ஒலித்திரிபுக்குறிகள் இட்டு எழுதும் எழுத்துக்களும் இருத்தல் நல்லது என்பதே என் கருத்து. இதனை நான் மேலே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இது என் தனிப்பட்ட கருத்து. சீனிவாசன், மஞ்சுசிரீ, சிரீதரன், சரசுவதி, சனீசுவரர் (சனீச்சுவரர்) என்றெல்லாம் எழுதுவதில் தவறில்லை. இப்படி எழுதுவதை தமிழெழுத்துத் தாலிபான் என்று எல்லாம் சாடுவது அத்து மீறுவது. 100% கிரந்தம் தவிர்த்து தமிழில் எழுத முடியும், அதனால் இழுக்கொன்றும் இல்லை. ஆனால் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் ஒலித்திரிபுக்குறிகள் பரிந்துரைப்பதும் மேலும் சில ஒலிப்புகளையும் சுட்ட தமிழில் இயலும் என்பதற்காகவே, 'காந்தி, 'டாய்ட்சு, 'பைட் என்றெல்லாம் நான் எழுதுவதே என் கருத்தை தெளிவாக வெளிப்படுத்தும். புதிய ஒலிப்புகளைக் குறிக்க இயல்வது மட்டுமல்லாமல், தமிழ் ஒலிப்பொழுக்க முறை கெடாமலும் இருக்கும் (எ.கா. எப்பொழுதும் முதல் வல்லினம் வலிந்து ஒலித்தல் வேண்டும், வல்லின ஒற்றுக்குப் பின் வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். புள்ளி வைத்த வல்லினம் எப்பொழுதும் வலித்தே ஒலிக்கும். ஆகவே டேவிட் என்று எழுதினால் Teyvit என்றுதான் ஒலிக்க வேண்டும். இங்கே T, t என்பன நாமடி டகரம்தான், ஆனால் வல்லினம். ஆகவே 'டேவி'ட் என்று எழுதினால் David என்று மெலிந்து ஒலிக்க வேண்டும் என்னும் குறிப்பு இருக்கும். ஆனால் அளவிறந்து இவ்வகையான குறியீடுகள் (அல்லது கிரந்த எழுத்துகள்) இட்டு எழுதினால் நம் மொழியின் இயல்பு கெடும்). பெரும்பாலும் தமிழ் மொழியின் இயல்பு, வழக்கத்தை ஒட்டிப் பிறமொழிச்சொற்களை திரித்து எழுதுவதே நல்லது. சிறுபான்மையான இடங்களில் கிரந்தம் மற்றும் பிற ஒலித்திரிபுகள் இட்டு எழுதலாம் (வரவேற்பு இருக்குமெனில்). சீனிவாசன் என்பது கூடாது ஸ்ரீனிவாசன் என்று எழுத வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் ஸ்ரீநிவாசன் என்று எழுத வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர் ஸ்ரீநிவாஸன் என்றுதான் எழுத வேண்டும் என்கின்றனர். ஸ்ரீநிவாஸந் என்று எழுதிவிட்டால் திருப்தி அடைந்து நிற்பார்களோ எனன்வோ! ஸுதர்ஸன் என்று எழுத வேண்டும் என்கின்றனர். தமிழில் இருந்து எத்தனை வேறாக பிரித்துக் காட்டி எழுத முடியுமோ அத்தனை அயலாகக் காட்ட நினைக்கின்றனர். இவ்வகையான போக்குகளாலும் சிலர் கிரந்தத்தை எதிர்க்கின்றனர் என்று நினைக்கின்றேன். --செல்வா 04:19, 29 டிசம்பர் 2008 (UTC)
செல்வா

இது ”தமிழ் குறிகள் வரலாறு” பற்றி லெச்சர் கொடுக்கும் இடம் அல்ல. மேலும் இசுப்பானியம், ஜப்பானியம் போன்ற பிற மொழி உபயோகங்களை பற்றிய உரையாடலும் தேவையற்றது. தான் தான் தமிழ்காவலர் போன்ற மனப்பாடு ஒதுக்கத்தக்க வேண்டியது. மற்றவர்கள் எப்படி நினைக்கிறார்கள், விரும்புகிறார்கள் என்ற கற்பனைகளும் மிகை.

தமிழ் எழுத்துலகிலேயே, அதாவது பத்திரிகைகள், இலக்கியம், பிளாக்குகள், கல்வி நூல்கள் போன்றவற்றில் எவ்வாறு எழுத்துகள் கடைபிடிக்க படுகின்றனவோ , அப்படியே செய்வோம். தன் எழுத்துமுறைதான் சரியான முறை, மற்றவைகள் தவறு என்ற மனப்பான்மை பொது சொத்தான விகிக்கு உகந்ததல்ல.

−முன்நிற்கும் கருத்து 217.28.4.188 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தான் தமிழ்க்காவலர் போன்ற உணர்வுடன் இங்கு யாரும் இயங்குவதாக நானறியேன், ஆனால் பலரும் தமிழ்நலம் வேண்டியே தங்கள் நேரத்தையும் உழைப்பையும் இந்த பல்துறை தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்க நல்குகிறார்கள். இவர்கள் தமிழில் நல்ல படைப்புகள் இருக்க வேண்டும் என்று கூட்டுழைப்பு தருவோர். மொழி, மொழி நடை, சொல், சொல் தேர்வு பற்றிய கருத்தாடல்கள் விக்கி போன்ற கலைக்களஞ்சியங்களில் நிகழ்வது இயற்கை. அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் எழுதும் குழுவினர் எப்படி எழுதினால் சரியாக இருக்கும், சிறப்பாக இருக்கும் என்று தேர்ந்துதான் செய்வர். தமிழ் எழுத்துலகிலும், வலைப்பதிவுகளிலும் நல்ல தமிழ் நடையில் எழுதுவோரும் உண்டு, அப்படியல்லாத நடையில் எழுதுவோரும் உண்டு. எதைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும், எவ்வளவு, எப்படி, எதற்காக எடுத்தாளவேண்டும் என்பது விக்கியின் பொறுப்பு. ஊடகங்களிலும் பிற இடங்களிலும் எழுதப்படும் தவறான நடை அல்லது பல இடங்களில் பொறுப்பற்ற நடை ஆகியவற்றை விலக்கி, திருத்தி, கலைக்களஞ்சிய நடையில் எழுதுவது நம் கடமை. மேலும், பெயர் அறிவிக்காத பயனரே, இங்கு வந்து பொறுப்புடன் பங்களிப்பு தாருங்கள், பொறுப்பான முறையில் கிரந்தம் முதலியவற்றையும் பயன்படுத்தி எழுதுங்கள், தமிழெழுத்துத் தாலிபான் என்றெல்லாம் சாடுவதைத் தவிர்த்து, தனிமனித தாக்குதல்கள் செய்யாமல், உங்கள் கருத்துகளைப் பகிருங்கள் (தேவை எனில்). ஆக்கம் தருமாறு ஏதும் செய்யுங்களேன் ஐயா/அம்மையாரே! --செல்வா 15:22, 29 டிசம்பர் 2008 (UTC)


மேலே பெயரிலி பயனர் விதண்டாவாதம் செய்கிறார்.

{{பல நாள்நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரிய சன்னிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களை தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் டீக்கா டூக்காடிபணி முதலிய உரைகோள் கருவிகளை பொருள்தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்கு பாஷ்யகாரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லவர்கள், டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையுமாய் இருக்கிற ஆரியபாஷை. என்று வள்ளார் சொல்வதை பாருங்கள்.}}

இன்னும் புரியாதவர்கள் 20, அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய தமிழ்செய்திதாழ்கள், வடமொழி கலந்து எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழின் கொடுமை பாருங்கள். வடமொழி எழுத்துகளுக்கு எதிராக போரடியதன் விளைவு தான் இன்று இந்த எளிமை தமிழ் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் தமிழ் வார்த்தைகள் விடுதலையாகி வந்திருக்கிறது. [1]

எனவே சில இதழ்களும், நூல்களையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்பது ஏற்க கூடியதல்ல. மேலும் வலைப்பதிவு என்ற நல்ல தமிழ் சொல்லை விடுத்து பிளாக் என்று பயன்படுத்துவதேன். விகி என்று கூட குறிப்பிட்டுள்ளார். வேண்டும் என்று, அல்லது தவறுதலாக்க நடந்தா என்று தெரியவில்லை. சமசுகிருத விக்கி, ஆங்கில விக்கிகள் இருக்கின்றன. அவற்றுக்கு பங்களிக்கலாம். அங்கு சென்று தமிங்கலத்தில் ஏழுதிப் பாக்கலாம். --Natkeeran 16:53, 29 டிசம்பர் 2008 (UTC)

நட்கீரன், விதண்டாவாதம் என்று சுலபமாக தப்பித்து விடுகிறீர்கள். நீங்கள் காட்டிய பக்கத்திலுள்ள உரயாடல்களை பாருங்கள். விஞ்ஞான தமிழில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதும் விஞ்ஞானி பதிலைப் பருங்கள். //1. அறிவியல் தமிழை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் விளக்க முடியாதா?// விஞ்ஞானி: ஓரளவுதான் (40%-50%) முடியும்.

−முன்நிற்கும் கருத்து 87.254.84.3 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அதே வலைப்பதிவில் என்னுடைய மறுப்புகளையும் பதிவு செய்திருக்கின்றேன். பார்க்கவும். கிரந்த எழுத்துகள் இல்லாமல் கட்டாயம் விளக்க இயலும். கருத்துகளை விளக்க கிரந்த எழுத்துகள் தேவை இல்லை. சில பெயர்ச்சொற்களைக் குறிக்க ஒலித்திரிபுக்குறிகள் அல்லது கிரந்தம் போன்ற முறைகளைக் கையாளலாம், ஆனால் தேவை என்று ஏதும் இல்லை. எல்லா மொழிகளும் தங்களுக்கு ஏற்றார்போல தங்கள் மொழி இயல்புகளை ஒட்டியே இவ்வகையான பெயர்ச்சொற்களைக் கையாளுகின்றனர்.--செல்வா 02:02, 2 ஜனவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்தோளம்&oldid=323748" இலிருந்து மீள்விக்கப்பட்டது