பேச்சு:அமிர்தானந்தமயி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதா அம்ருதானந்தமயி எனும் பெயரில் உள்ள "மாதா" என்பது விக்கிபிடியா கொள்கைக்கு ஏற்புடையதா? இவ்வாறு ஊரை ஏமாற்றும் கண்டக்கண்ட சாமியார்களின் பெயரில் வரும் பட்டப்பெயர்களுடன் கட்டுரைகள் எழுதுதல் ஏற்புடையதாக இல்லை.

ஏமாளிகள் அகப்பட்டால் கோமாளிகளுக்கு கொண்டாட்டம் என்பது போன்று, இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அப்பாவிகளை ஆன்மீகம் எனும் பெயரில் ஏமாற்றி களம் அமைத்துக்கொள்ளும் மோசடிப்பேர்வழிகளே இவர்கள். //இகேரளத்தில் மீனவர்களுக்கு பிறந்த அம்மாச்சி இன்று, இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார்.// என்பதில் இருந்தே யூகிக்கமுடிகிறது.

பட்டப்பெயர் அகற்றப்பட வேண்டும்.- மொஹமட்

நீங்கள் சொல்வது சரியே. பட்டங்கள் தலைப்பில் வரக்கூடாது. மாற்றியிருக்கிறேன். ஆனால் ஒரு சிறு சந்தேகம் வருகிறது “மாதா அம்ருதானந்தமயி” என்பதே அவரது சட்டப்படி பெயராக இருந்தால் என்ன செய்வது? (தேடிப்பார்க்கவேண்டும். இது போன்ற பலர் சட்டப்படியே பெயரை மாற்றியுள்ளார்கள்).
மேலும் ”ஊரை ஏமாற்றும் கண்டக்கண்ட சாமியார்” இது போன்ற விமர்சனங்களைத் தவிருங்கள். கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது விமர்சனம் வையுங்கள், கட்டுரை எழுதப்பட்டவர் மீது வேண்டாம் (விக்கியில் இது போன்ற விவாதங்களை/விமர்சனங்களை அறவே தவிக்கிறோம்).--சோடாபாட்டில்உரையாடுக 12:30, 4 ஏப்ரல் 2011 (UTC)
மொகமட், நீங்கள் பொதுவாக இந்துச் சாமியார்கள் பற்றிக் குற்றம் சாட்டுகிறீர்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியே பார்க்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட சாமியாரைப் பற்றிய விமரிசனங்கள் இருந்தால் அவற்றை தகுந்த ஆதாரங்களுடன் தாருங்கள். மேலும், மாதா என்பது பட்டப்பெயரா அல்லது பெயருடன் நிரந்தரமாகவே ஒட்டிக் கொண்டதா எனத் தெரிய வேண்டும். ஆனாலும் மாதாவைத் தலைப்பில் இருந்து அகற்றுவதற்கு எனது ஆதரவுண்டு.--Kanags \உரையாடுக 12:39, 4 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமிர்தானந்தமயி&oldid=3394404" இலிருந்து மீள்விக்கப்பட்டது