பெரிமாலிப்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிமாலிப்டைட்டு
Ferrimolybdite
அரிசோனாவின் மோகேவ் மாகாணத்தில் கிடைத்த பெரிமாலிப்டைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைமாலிப்டேட்ட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe3+2(MoO4)3·8(H2O) or Fe3+2(MoO4)3·n(H2O)
இனங்காணல்
நிறம்பசுமை கலந்த மஞ்சள், வைக்கோல் போன்ற மஞ்சள்
படிக இயல்புஊசி வடிவ குஞ்சங்கள் முதல் முதல் திரட்டுகள் வரை
படிக அமைப்புOrthorombic
பிளப்பு{001} இல் தனித்துவம்
முறிவுசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை1-2
மிளிர்வுஉடைக்க முடியாதது. மென்மையானது.
கீற்றுவண்ணம்இள மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஓளிபுகும் தன்மை முதல் ஒளிபுகா தன்மை வரை
ஒப்படர்த்தி2.99
ஒளியியல் பண்புகள்Biaxial (+)
ஒளிவிலகல் எண்nα = 1.720 - 1.810 nβ = 1.730 - 1.830 nγ = 1.850 - 2.040
இரட்டை ஒளிவிலகல்δ = 0.130 - 0.230
பலதிசை வண்ணப்படிகமைX = Y = தெளிவானது முதல் கிட்டத்தட்ட நிறமற்றது வரை; Z = சாம்பல் நிறம் முதல் பசுமை கலந்த மஞ்சள் வரை
2V கோணம்26° முதல் 32° (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2][3]

பெரிமாலிப்டைட்டு (Ferrimolybdite) Fe3+2(MoO4)3·8(H2O)[2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீரேறிய இரும்பு மாலிப்டேட்டு கனிமமாக இருப்பதால் Fe3+2(MoO4)3·n(H2O).[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் பயன்படுத்தப்படுகிறது.

செஞ்சாய்சதுர கட்டமைப்பில் மென்மையான மஞ்சள் நிறங்கொண்ட ஊசிவடிவ மேற்பூச்சுகளாகப் பெரிமாலிப்டைட்டு படிகமாகிறது.

கண்டுபிடிப்பு[தொகு]

முதன் முதலாக 1914 ஆம் ஆண்டு பெரிமாலிப்டைட்டு உருசியாவில் கண்டறியப்பட்டது. இங்குள்ள சைபீரியா நிலப்பகுதியிலுள்ள காக்காசியா குடியரசின் அலெக்சீவ்சுகி சுரங்கத்தில் இது காணப்பட்டது. பெரிக் வகை இரும்பும் மாலிப்டினமும் கலந்திருப்பதால் பெரிமாலிப்டைட்டு என்ற பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டது.

தாதுப் படிவுகள் கொண்ட மாலிப்டினத்தின் ஆக்சிசனேற்ற விளைபொருளாக இயற்கையில் பெரிமாலிப்டைட்டு தோன்றுகிறது. பொதுவாக மாலிப்டினைட்டு, பைரைட்டு, சால்கோபைரைட்டு போன்ற கனிமங்கள் இதனுடன் சேர்ந்து காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிமாலிப்டைட்டு&oldid=3085131" இலிருந்து மீள்விக்கப்பட்டது