பெண்ணை வாழவிடுங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணை வாழ விடுங்கள்
இயக்கம்தேவன்
தயாரிப்புகர்ணன்
விஜய சித்ரா பிலிம்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுஆகத்து 1, 1969
ஓட்டம்.
நீளம்4540 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணை வாழவிடுங்கள் (Pennai Vazha Vidungal) 1969 இல் ஆர். தேவராஜன் இயக்கத்திலும் படத்தொகுப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை எம். கர்ணன் தயாரித்ததுடன் ஒளிப்பதிவையும் மேற்கொண்டார். இது 1969 ஆகத்து 1 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியான வெற்றியும் பெற்றது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

விஜய சித்திர பிலிம்சு பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட பெண்ணை வாழவிடுங்கள் திரைப்படம் எம். கர்ணனின் முதல் தயாரிப்பாகும்.[1] இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவையும் மேற்கொண்டார். இத்திரைப்படத்தை ஆர். தேவராஜன் இயக்கியது மட்டுமல்லாமல் படத்தொகுப்பும் செய்தார்.[2]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நெஞ்சே உனக்கொரு விருந்து"  பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்  
2. "மது இறங்க இறங்க"  டி. எம். சௌந்தரராஜன், குசலா  
3. "சமையலுக்கும் மையலுக்கும்"  பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்  
4. "அழகிலே கனிரசம்"  எல். ஆர். ஈஸ்வரி  

வெளியீடும் வரவேற்பும்[தொகு]

இத்திரைப்படம் 1969 ஆகத்து 1 அன்று வெளியாகி வணிக ரீதியான வெற்றி பெற்றது.[4][5] இந்தியன் எக்சுபிரசு, "இத்திரைப்படம் பல விறுவிறுப்பான உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கொண்டுள்ளது" என்று எழுதியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Pennai Vazha Vidungal (motion picture). Vijaya Chithra Films. 1969. Opening credits, from 0:00 to 2:32.
  2. Pillai 2015, ப. 165.
  3. "Pennai Vazha Vidungal". ECRATER. Archived from the original on 14 சூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2019.
  4. Pillai 2015, ப. 166.
  5. Pillai 2015, ப. 168.
  6. "Credits to writer". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 2 August 1969. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19690802&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணை_வாழவிடுங்கள்&oldid=3942877" இலிருந்து மீள்விக்கப்பட்டது