புத்தநாத்து கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தநாத்து கோயில்

புத்தநாத்து கோயில் (Buddhanath Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தநாத் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] புவனேசுவரம் நகரத்திலிருந்து சுமார் 22 கிமீ (14 மைல்) தொலைவில் உள்ள பாலிபட்னா தொகுதியில் உள்ள கரேடி பஞ்சனா என்ற கடற்கரை கிராமத்தில் இக்கோயில் உள்ளது. புவனேசுவரத்திலிருந்து கோயிலை அடைவது எளிதாகும். சோமவன்சி வம்சத்தைச் சேர்ந்த சோடகங்கா தேவ் என்பவரால் புத்தநாத்து கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2] இக்கோயில் தாந்த்ரீக கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு அருகாமையில் இருப்பதால், உப்பு நிறைந்த காற்றினால் கற்கள் அரிக்கப்பட்டு கோயிலின் சிதைவு துரிதப்படுத்துகிறது. 14 ஆவது நிதிக்குழுவின் நிதியில் சமீபத்தில் கோயில் புதுப்பிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Barik, Bibhuti (2 September 2013). "Budhanath's tantric connection". The Telegraph இம் மூலத்தில் இருந்து 13 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160113004936/http://www.telegraphindia.com/1130902/jsp/odisha/story_17298699.jsp#.VkHv7NIrLDc. பார்த்த நாள்: 10 November 2015. 
  2. "Budhanath Temple - A 11th century [sic] #Heritage #Temple by King Chodaganga Dev of Somvanshi dynasty Near #Bhubaneswar , #Odisha #Travel #Tourism". eOdisha.org (in ஆங்கிலம்). 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  3. "FIN COM MEMBERS VISIT BUDHANATH TEMPLE". The Pioneer. 11 December 2013. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/fin-com-members-visit-budhanath-temple.html. பார்த்த நாள்: 10 November 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தநாத்து_கோயில்&oldid=3814403" இலிருந்து மீள்விக்கப்பட்டது