புகுயாமா பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகுயாமா பிணைப்பு
Fukuyama coupling
பெயர் மூலம் தொக்ரு புகுயாமா
வினையின் வகை பிணைப்பு வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் பிணைப்பு.shtm புகுயாமா பிணைப்பு

புகுயாமா பிணைப்பு (Fukuyama coupling) என்பது பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் ஒரு தயோயெசுத்தருக்கும் ஒரு கரிமதுத்தநாக ஆலைடுக்கும் இடையில் நடைபெறும் பிணைப்பு வினையைக் குறிக்கும். இவ்வினையில் வினைவிளை பொருளாக ஒரு கீட்டோன் உருவாகிறது. தொக்ரு புகுயாமா மற்றும் அவருடைய குழுவினர் 1998 ஆம் ஆண்டு இவ்வினையைக் கண்டறிந்தனர்.[1] வேதியியல் தேர்வு திறன், மிதமான வேதிவினை, குறைவான நச்சு வினைபடுபொருட்கள் போன்றவை இவ்வினையின் சிறப்பம்சங்களாகும்.[2]

புகுயாமா பிணைப்பு

புகுயாமா பிணைப்பு முறையின் ஒரு நன்மை என்னவென்றால், நட்டைபெறுகின்ற வினையானது கீட்டோன் உருவானவுடன் நின்று விடும். தொடர்ந்து மூன்றாம் நிலை ஆல்ககாலுக்கு செல்லாது. கூடுதலாக, வினையின் நெறிமுறையானது கீட்டோன்கள், அசிட்டேட்டுகள், சல்பைடுகள், அரோமாட்டிக் புரோமைடுகள், குளோரைடுகள் மற்றும் ஆல்டிகைடுகள் போன்ற செயல்பாட்டு குழுக்களுடன் இணக்கமாக உள்ளது.

1998 ஆம் ஆண்டில் அசல் புகுயாமா வினை

பயோட்டின் தொகுப்பு வினையில் புகுயாமா பிணைப்பு வினை பயன்படுத்தப்பட்டது[3]

பயோட்டின் ஒட்டுமொத்த தொகுப்பு வினை

இந்த வினைக்கு முன்னதாக கருத்துரீதியாக தொடர்புடைய வினையாக புகுயாமா ஒடுக்க வினை கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tokuyama, H.; Yokoshima, S.; Yamashita, T.; Fukuyama, T. (1998). "A novel ketone synthesis by a palladium-catalyzed reaction of thiol esters and organozinc reagents". Tetrahedron Letters 39 (20): 3189–3192. doi:10.1016/S0040-4039(98)00456-0. 
  2. Mori, Y.; Seki, M. (2007). "SYNTHESIS OF MULTI-FUNCTIONALIZED KETONES THROUGH THE FUKUYAMA COUPLING REACTION CATALYZED BY PEARLMAN’S CATALYST: PREPARATION OF ETHYL 6-OXOTRIDECANOATE (Tridecanoic acid, 6-oxo-, ethyl ester)". Organic Syntheses 84: 285–294. http://orgsynth.org/orgsyn/pdfs/V84P0285.pdf. ; Collective Volume, vol. 11, pp. 281–288
  3. Shimizu, T.; Seki, M. (2000). "Facile synthesis of (+)-biotin via Fukuyama coupling reaction". Tetrahedron Letters 41 (26): 5099–5101. doi:10.1016/S0040-4039(00)00781-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகுயாமா_பிணைப்பு&oldid=3305405" இலிருந்து மீள்விக்கப்பட்டது