கீட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கீட்டோன் குழு

கரிம வேதியியலில் கீட்டோன் (ketone) என்பது RC(=O)R' என்னும் அமைப்பு கொண்ட ஒரு கரிமவேதிப் பொருள், இதில் R உம், R' உம் பல்வேறு அணுக்கள் கொண்டதாகவோ, வேதி வினைக்குழுவாகவோ இருக்கலாம். இதில் சிறப்புக்கூறாக கார்போனைல் குழு (C=O) கொண்டுள்ளது, இருவேறு கரிம அணுக்களுடன் பிணைப்புற்று இருக்கின்றது[1] பற்பல கீட்டோன்கள் வேதியியல் சார்ந்த தொழிலகங்களிலும், உயிரியலிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எடுத்துக்காட்டாக பல்வேறு சருக்கரைகள் (sugars, இனிப்பியங்கள்), அசிட்டோன் (acetone) என்னும் தொழிற்சாலைப்பயன்பாட்டு கரைப்பான்.

கலைச்சொல் வழக்கும் சொற்பிறப்பியலும்[தொகு]

கீட்டோன் (ketone) என்னும் சொல் அசிட்டோன் என்று பொருள் படும் பழைய இடாய்ச்சு மொழிச் சொல் "Aketon" என்பதில் இருந்து பிறந்தது[2].

ஐயுபிஏசி கலைச்சொல் வழக்கு (IUPAC nomenclature) விதிகளின் படி, கீட்டோன்களின் முதல் வடிவமாகிய ஆல்க்கேன்களில் (alkane) உள்ள கடைசி e ஐ நீக்கிவிட்டு -one (-ஓன்) என்னும் பின்னொட்டைச் சேர்க்கவேண்டும். ஆனால் மிகவும் முக்கியமான, மரபாக வரும், சிலவற்றுக்கு மட்டும் இந்த முறையைப் பின்பற்றாத பழைய பெயர்களில் வழங்கும், எடுத்துக்காட்டாக அசிட்டோன், பென்சோஃபினோன் (benzophenone). முறைமீறி வரும் இவை ஐயுபிஏசி (IUPAC)-யால் இருத்திக்கொள்ளப்பட்ட பெயர்களாகக் கருதப்படுகின்றன[3] பெரும்பாலும் சில அறிமுறை இரசாயனவியல் நூல்கள் அசற்றோனை (CH3-CO-CH3) 2-propanone அல்லது propan-2-one எனக் குறிப்பிடுகின்றன. எந்த இடத்தில் கார்போனைல் குழு அமைந்துள்ளது என்பது பொதுவாக ஓர் எண்ணால் குறிக்கப்பெறும்.

இன்னொரு, அடிக்கடி எழாத ஒரு, வழக்கம் "ஆக்ஃசோ" ("oxo") என்பது கீட்டோன் வேதிவினைக்குழுவுக்குப் பயன்படுத்துதல். மற்ற முன்னொட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. உயிர்வேதியியல் சூழலில் "கீட்டோ" ("keto") அல்லது "ஆக்ஃசோ" ("oxo") ஆகியவை கீட்டோன் வேதிவினைக்குழுவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆக்ஃசோ என்பது வேதியியலில் பரவலாகப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இது ஆக்சிசன் அணு ஒரு பிறழ்வரிசை மாழையோடு பிணைந்திருப்பதை மாழை-ஆக்ஃசோ (metal oxo) என்று குறிக்கப்பெறும்.

கட்டமைப்பும் பண்புகளும்[தொகு]

கீட்டோன் எடுத்துக்காட்டுகள், இடமிருந்து: அசிட்டோன், ஒரு பொது கரைப்பான்; ஆக்ஃசாலோஅசிட்டிக்காடி அல்லது ஆக்ஃசலோஅசிட்டேட்டு (Oxaloacetic acid, oxaloacetate), சருக்கரை வளர்சிதை மாற்றத்தின் இடையே பெறுவது; அசிட்டைல்-அசிட்டோன் (acetylacetone) அதன் (மோனோ) ஈனால் (enol) வடிவில்- நீல நிறத்தில் ஈனால் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுளது; நைலான் செய்வதில் உள்ள முன்னுருப்படி வளையஎக்ஃசானோன் (cyclohexanone); முசுக்கோன் (muscone), விலங்கில் இருந்து பெறப்படும் ஒரு மணந்தரும்பொருள்; நுண்ணுயிர் எதிர்ப்பியாகிய டெட்ராசைக்ளின் (tetracycline.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. IUPAC Gold Book ketones
  2. http://www.etymonline.com/index.php?term=ketone Online Etymology Dictionary
  3. List of retained IUPAC names retained IUPAC names Link
"http://ta.wikipedia.org/w/index.php?title=கீட்டோன்&oldid=1367944" இருந்து மீள்விக்கப்பட்டது