பிரீத்தி சுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரீத்தி சுதன் (Preeti Sudan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாவார். 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு சூலை மாதம் வரை இந்திய சுகாதார செயலாளராகப் பணியாற்றி ஆட்சியதிகாரத்திலிருந்து ஓய்வுபெற்றார்.[1] கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இவர் முக்கிய மூலோபாயவாதியாக இருந்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கை மற்றும் திட்டமிடலில் சுதன் பட்டம் பெற்றுள்ளார். வாசிங்டனில் பொது நிதி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றார்.

தொழில்[தொகு]

1983 ஆம் ஆண்டு ஆந்திர ஆட்சிப்பணி தொகுதி அதிகாரியான சுதன் முன்னதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளராக இருந்தார். [2] [3] இதைத் தவிர, மத்திய மற்றும் மாநில அளவிலான பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், பேரிடர் மேலாண்மை [4] மற்றும் சுற்றுலா தொடர்பான பதவிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். [5] [6] இந்தியாவின் கீழ்மட்டத்தில் உள்ள 40% ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் இலவச சுகாதார பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசாங்கத்தின் தேசிய சுகாதாரக் கொள்கையின் திட்டமான ஆயுசுமான் பாரத் யோசனாவின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் சுதன் ஒரு முக்கிய செயல்பாட்டாளராக இருந்துள்ளார். உலக வங்கியில் ஓர் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். [7]

சுதன் 2020 ஆம் ஆண்டு முதல் தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளிப்புக்கான சுயாதீன குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இக்குழு உலக சுகாதார அமைப்பும் பிற நாடுகளும் கோவிட் -19 தொற்றுநோயை எவ்வாறு கையாண்டன என்பதை ஆராயும் ஒரு சுயாதீன குழுவாகும். எலன் இயான்சன் சர்லீஃப்பும் எலன் கிளார்க்கும் இவருடன் இணை தலைவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.[8]

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

  • பிறந்த மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான கூட்டு குழு உறுப்பினர் [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Preeti Sudan is new health secretary, MoH&FW". Express Pharma (The Indian Express) (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  2. Bureau, BW Online. "BW Most Influential Woman Of India: Preeti Sudan, Secretary, Ministry of Health & Family Welfare". BW Businessworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  3. "Ms. Preeti Sudan assumes charge as Secretary, Department of Food and Public Distribution". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  4. Storm kills 45, floods villages in India Reuters, June 23, 2007.
  5. "PMNCH | Preeti Sudan, PMNCH Acting Chair". WHO. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  6. "Preeti Sudan is Secretary, Dept of Food and Public Distribution". The Hindu Business Line (in ஆங்கிலம்). 2 January 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  7. "Preeti Sudan | PMNCH | Government of India". WHO. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  8. Stephanie Nebehay and Kate Kelland (September 3, 2020), Pandemic review panel named, includes Miliband, ex Mexican president Reuters.
  9. Board Partnership for Maternal, Newborn & Child Health (PMNCH).

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சுதன்&oldid=3317721" இலிருந்து மீள்விக்கப்பட்டது