பிந்திமேடு அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிந்திமேடு அருவி (Pindimedu Waterfalls) என்பது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் நகரத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் குட்டம்புழா கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அருவியாகும். இது பூயம்குட்டி நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவின் மிக உயரமான அருவி இதுவாகும். இது பெரியாற்றின் கிளை நதியான கரிந்திரி ஆற்றில் உள்ளது. 1981ஆம் ஆண்டில், கேரள மாநில மின்சார வாரியம் இடுக்கி அணைக்கு நிகரான 1000 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலையத்தை உருவாக்க ரூ.250 கோடி திட்டத்தை வடிவமைத்தது. பின்னர் முதல்வர் அ. கு. அந்தோணி 2001-ம் ஆண்டு புதிய வடிவமைப்பை 210 மெகாவாட்ற் திறனாக மாற்றியமைத்துத் திட்டத்தைத் செயல்படுத்த முயன்றார். ஆனால் சுற்றுச்சூழல் பொருளாதார பிரச்சனைகளால் இந்திய அரசுத் திட்டத்தைத் கைவிட்டது. இந்த அருவியில் திரைப்படமாக்கப்பட்ட மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தின் மூலம் கேரளா முழுவதும் இந்த அணைப் புகழ் பெற்றது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "pooyamkutty tourism attractions - peendimedu waterfalls, deep forest etc". Tourtokeralam.com. 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  2. "Pooyamkutty project not viable". தி இந்து. 2001-08-06. Archived from the original on 13 March 2002. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  3. "Travel To The Home Of Pulimurugan Which Is An Abode For Wild Elephants Rather Than Tigers!". Nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்திமேடு_அருவி&oldid=3845598" இலிருந்து மீள்விக்கப்பட்டது