பார்க் விடுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க் விடுதிகள்
வகைதனியார் குழும நிறுவனம்
நிறுவுகைகொல்கத்தா, இந்தியா
(நவம்பர் 01, 1967)
நிறுவனர்(கள்)சுரேந்திரா பால்
தலைமையகம்கொல்கத்தா, இந்தியா
அமைவிட எண்ணிக்கைபெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, நவி மும்பை, புது தில்லி, விசாகப்பட்டினம், கோவா, கேரளக் காயல்
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்பிரியா பால், 
(தலைவர்)
விஜய் தேவன் 
(மேலாண்மை இயக்குநர்)
தொழில்துறைவிருந்தோம்பல், சுற்றுலா
உற்பத்திகள்ஆடம்பர விடுதிகள், உணவகங்கள்
தாய் நிறுவனம்ஏபேஜே சுரேந்திரா குழுமம்
இணையத்தளம்www.theparkhotels.com

பார்க் ஹோட்டல்கள் என்பது சமகாலத்தில் உருவான ஐந்து நட்சத்திர தரம் கொண்ட ஹோட்டல்களின் குழுமம் ஆகும். ஏபிஜெய் சுரேந்திரா குழுவினைச் சேர்ந்த இந்த ஹோட்டல்களின் தலைமையகம் இந்தியாவின் கொல்கத்தாவில் (மேற்கு வங்கம்) உள்ளது. பார்க் ஹோட்டல்கள் இந்தியாவில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, நேவி மும்பை, புது டெல்லி, விசாகப்பட்டினம், கோவா மற்றும் வேம்பனாடு ஏரி கேரளாவின் உப்பங்கழி ஆகிய இடங்களில் உள்ளது. இவைத் தவிர கொச்சி, கொல்கத்தா, புனே, கோயம்புத்தூர் மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களில் புதிய ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகிறது.[1][2][3]

இவற்றுள் பார்க் கொல்கத்தா ஹோட்டலுக்கு “தேசிய அளவிலான சுற்றுலா விருது” 2003 – 2004 ஆம் ஆண்டில், அதன் சிறப்புமிக்க சேவையினைப் பாராட்டி இந்திய சுற்றுலாத் துறையினால் வழங்கப்பட்டது.[4] பார்க் பெங்களூர் ஹோட்டலினை டெரென்ஸ் கான்ரான் வடிவமைத்துள்ளார்.[3][5]

இந்தியாவில் உள்ள பார்க் ஹோட்டல்களின் விவரங்கள்[தொகு]

இடம்/நகரம் ஹோட்டலின் பெயர் அறைகள் ஹோட்டலைத் திறந்த நாள்
பெங்களூர் பார்க் பெங்களூர் 109 2001
சென்னை பார்க் சென்னை 214 மே 15, 2002
சென்னை பார்க் பிஓடி சென்னை 20 2009
ஹைதராபாத் பார்க் ஹைதராபாத் 268 2010
கொல்கத்தா பார்க் கொல்கத்தா 149 நவம்பர் 1, 1967
கொல்கத்தா பார்க் புது டெல்லி 220 1987
நேவி மும்பை பார்க் நேவி மும்பை 80 2007
விசாகப்பட்டினம் பார்க் விசாகப்பட்டினம் 66 1968
கோவா பார்க் காலங்குடே கோவா 30 2011
கேரளா பார்க் வேம்பனாடு ஏரி 10 2009
கேரளா உப்பங்கழி மோட்டார் வெஸல் அப்ஸரா 08 2009

வரலாறு[தொகு]

சுரேந்திர பால் என்பவரால் 1967 ஆம் ஆண்டு இந்த ஹோட்டல் தொழில் துவங்கப்பட்டது. இதன் முதன் ஹோட்டல் பார்க் என்ற பெயருடன் 150 அறை வசதிகளைக் கொண்டிருந்த ஹோட்டலாக இது கட்டப்பட்டது. இந்த முதல் ஹோட்டலை கொல்கத்தாவில் நவம்பர் 1 இல் திறந்தனர். 1968 இல் பார்க் விசாகப்பட்டினமும், 1987 இல் பார்க் புது டெல்லியும் திறக்கப்பட்டு அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. சுரேந்திரா பால் இறந்த பின்பு அவரின் மகளான பிரியா பால் 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுவனத்தினை வழிநடத்த துவங்கினார். அத்துடன் 2000 ஆம் ஆண்டு பார்க் பெங்களூர் ஹோட்டலைத் திறந்தார். அதன்பின்பு சென்னையில் பார்க் சென்னையினை 2002 இல் திறந்தார். இதன் மூலம், பெரும்பாலான இந்திய முக்கிய நகரங்களில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை இக்குழு தொடங்கியது.[3][6][7]

2000 ஆம் ஆண்டு ஜன்டர் மன்டர், புது டெல்லியின் பார்க் ஹோட்டல் மறு சீரமைப்பு செய்யப்பட்டது.[8] 2006 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ்-இன், இந்தியாவின் விலைமதிப்புமிக்க உணவகங்களின் வரிசையில் முதல் 10 இடங்களில் ஒன்றைப் பார்க் ஹோட்டல் பிடித்தது.[9] ‘2010 ஆம் ஆண்டின் 100 விடுமுறை நாட்களுக்கான யோசனைகள்’ எனும் இன்டிபென்ட்டட்டின் பட்டியலில் பார்க் ஹோட்டல் ஹைதராபாத் இடம்பெற்றது.[10]

குறிப்புகள்[தொகு]

  1. "The Park Hotels buys second hotel in Maharashtra". Business Standard. 19 February 2008.
  2. "Business hotel chains use tech to cut costs, keep customers". Mint (newspaper). 18 June 2007.
  3. 3.0 3.1 3.2 "Priya Paul, the force behind Park Hotels". RediffMoney. 23 July 200.
  4. "Tourism award for The Park". Business Line. 28 Jan 2005.
  5. "Aquazone at the Park Hotel, Bangalore, India". London:The Telegraph. 9 Nov 2009. பார்க்கப்பட்ட நாள் 25 May 2010.
  6. "The First Lady of boutique". Express Hospitality (Indian Express Group). 16–31 March 2006.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Innovating constantly..." Business Line. 18 Jan 2003.
  8. "Reviving the magic of Jantar Mantar". Indian Express. 22 October 2000. Archived from the original on 4 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. Saabira, Chaudhuri (2006-12-18). "International Dining: India's Most Expensive Restaurants". Forbes.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  10. Kinsman, Juliet (3 January 2010). "100 holiday ideas for 2010: Hotels". London: The Independent. பார்க்கப்பட்ட நாள் 25 May 2010. {{cite web}}: no-break space character in |publisher= at position 8 (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_விடுதிகள்&oldid=3577763" இலிருந்து மீள்விக்கப்பட்டது