பாரா-மெந்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா-மெந்தேன்
p-Menthane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-ஐசோபுரோபைல்-4-மெத்தில்வளையயெக்சேன்
இனங்காட்டிகள்
99-82-1 Y
ChemSpider 7179
EC number 202-790-4
InChI
  • InChI=1S/C10H20/c1-8(2)10-6-4-9(3)5-7-10/h8-10H,4-7H2,1-3H3
    Key: CFJYNSNXFXLKNS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7459
SMILES
  • CC1CCC(CC1)C(C)C
UNII CGW5GN8TXU Y
பண்புகள்
C10H20
வாய்ப்பாட்டு எடை 140.27 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8086 கி/செ.மீ3
கொதிநிலை 168 °C (334 °F; 441 K)
கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாரா-மெந்தேன் (p-Menthane) என்பது (CH3)2CHC6H10CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்ட்டால் விவரிக்கப்படும் ஒரு நீரகக்கரிமம் ஆகும். பாரா-சிமென், டெர்பினோலின்கள், பில்லான்டரின்கள், இலிமோனின்கள் போன்ற பல்வேறு வகை டெர்பினாய்டுகளை ஐதரசனேற்றம் அல்லது ஐதரசனாற்பகுப்பு ஆகிய வினைகளுக்கு உட்படுத்தி பாரா-மெந்தேன் தயாரிக்கப்படுகிறது. நிறமற்ற திரவமான இது நறுமணமுள்ள பெருஞ்சீரகம் போன்ற வாசனையுடன் உள்ளது. இயற்கையாகவே தோன்றும் பாரா-மெந்தேன் குறிப்பாக யூகலிப்டசு பழங்களின் கசிவுகளில் காணப்படுகிறது. மேலும், இச்சேர்மம் பொதுவாக ஒருபக்க மற்றும் மறுபக்க மாற்றியன்களின் கலவையாகக் காணப்படுகிறது. இவை இரண்டும் மிகவும் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. ஐதரோபெராக்சைடு தயாரிப்பில் பாரா-மெந்தேன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. இந்த ஐதரோபெராக்சைடுகள் பலபடியாக்கல் வினைகளை முன்னெடுக்கின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Terpenes". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a26_205. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா-மெந்தேன்&oldid=3440352" இலிருந்து மீள்விக்கப்பட்டது