பளிங்கு அரண்மனை
பளிங்கு அரண்மனை | |
---|---|
பளிங்கு அரண்மனை (1854) | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | தீயினால் அழிந்தது |
வகை | கண்காட்சி அரண்மணை |
கட்டிடக்கலை பாணி | விக்டோரியன் |
நகரம் | இலண்டன் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
அழிக்கப்பட்டது | 30 நம்பர் 1936 |
செலவு | £2 மில்லியன் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | Joseph Paxton |
பளிங்கு அரண்மனை (The Crystal Palace) என்பது லண்டனில் ஹைட் பார்க் என்ற இடத்தில் 1851 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய ஒரு கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும்.[1] உலகெங்கணும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர்.[1] ஜோசப் பாக்ஸ்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகை 1850 அடி (564 மீ) நீளமும் 110 அடி (34 மீ) உயரமும், உள்ளுயரம் 408 அடியும் (124 மீ) கொண்டது.[1]
கண்காட்சிக்குப் பின்னர் இம்மாளிகை இலண்டனில் உள்ள "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு முதல் 1936 நவம்பர் 30 இல் இம்மாளிகை தீயில் எரிந்து சாம்பலாகும் வரை இவ்விடத்திலேயே இருந்தது.
பளிங்கு அரண்மனையின் கட்டுமானப் பணிக்கென ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் (ஒரே நேரத்தில் 2,000 பேர்) பங்கு பெற்றிருந்தனர்.[2] 900,000 சதுர அடி (84,000 மீ²) கண்ணாடி பயன்படுத்தப்பட்டது.
இடமாற்றம்
[தொகு]கண்காட்சி ஆறு மாதங்கள் வரை இடம்பெற்றது. கண்காட்சியின் முடிவில் நாடாளுமன்ற எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இம்மாளிகையை "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு மாற்றும் முடிவு நாடாளுமன்றத்தினால் எடுக்கப்பட்டு,[3] இரண்டே ஆண்டுகளில் இடம் மாற்றப்பட்டது. விக்டோரியா மகாராணி மீண்டும் இதனைப் புதிய இடத்தில் 1854 ம் ஆண்டில் திறந்து வைத்தார்.[1] புதிய இடத்தில் இது ஒரு நிரந்தர கண்காட்சிக்கூடமாக மாற்றப்பட்டது. இம்மாளிகையை ஆரம்ப இடத்தில் கட்டுவதற்கு £150,000 செலவு ஏற்பட்டது. ஆனால் இதனை இடமாற்றுவதற்கு மட்டும் £1,300,000 செலவு செய்யப்பட்டது.[4]
நெருப்பினால் அழிவு
[தொகு]1936 நவம்பர் 30 இல் இவ்வரண்மனைக்கு முடிவு வந்தது. சில மணி நேரங்களில் இவ்வரண்மனை நெரிப்பில் எரிந்து சாம்பலானது. இம்மாளிகை முறையாகக் காப்புறுதி செய்யப்படாததால் இதன் மீளமைப்புக்கான செலவைப் பெற முடியவில்லை.
இரண்டு பாரிய தண்ணீர்த் தாங்கிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. இரண்டாம் உலகப் போரின் போது நாசி செருமனியரினால் இலண்டன் இலகுவாக அடையாளங் காணப்படும் என்ற காரணத்தினால் இந்த இரு தாங்கிகளும் அழிக்கப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "The Great Exhibition of 1851". Duke Magazine. 2006-11. பார்க்கப்பட்ட நாள் 2007-07-30.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ The Crystal Palace and the Great Exhibition. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-485-11575-1. and by the University of Virginia's "Modeling the Crystal Palace". 2001. project: "The Crystal Palace Animation Exterior and Interior". பார்க்கப்பட்ட நாள் 2007-11-20.
- ↑ "Crystal Palace history Leaving Hyde Park October 1851". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-11-28.
- ↑ "Crystal Palace history The Building 1852–1854". Archived from the original on 2007-11-30. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Crystal Palace on ArchDaily
- Historic images of Crystal Palace, dating back to the 1850s பரணிடப்பட்டது 2014-04-14 at the வந்தவழி இயந்திரம். Taken by Philip Delamotte but now held by the English Heritage Archive.
- Crystal Palace Museum
- Crystal Palace Park பரணிடப்பட்டது 2016-09-24 at the வந்தவழி இயந்திரம் – map of the park as was until recently
- The Crystal Palace, sources from www.victorianlondon.org
- வார்ப்புரு:Mmukscaled including Victorian maps showing the palace
- [1] பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம் Russell Potter's Crystal Palace Page, with information on the Baird Television studios
- A 3D computer model of the Crystal Palace with images and animation
- Park hosts Crystal Palace replica – BBC News 31 May 2008
- The contribution of the structure of the Crystal Palace. Paper written by Isaac López César