பரீட்சை மீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பரீட்சை மீதி (trial balance) என்பது கணக்குப் பதிவியல் செய்முறையில் ஒர் வேலைத்தாள் ஆகும்.இப் பரீட்சை மீதியானது குறிப்பிட்ட காலத்தில் வியாபார நிறுவனமொன்றால் பாரமரிக்கப்படும் சகல கணக்கியல் பேரேடுகளின் நிதி நி‌லைமையினை ஒரே பார்வையில் விளம்பும் சாரமாக காணப்படும். ஒவ்வொரு நிதிக்காலதின் முடிவின் பொழுதும்,நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் முன்பாகவும்,கணக்கியல் பதிவுகளின் பிழையின்மையினை உறுதிப்படுத்தவும் பரீட்சை மீதி தயாரிக்கப்படும்.

[தொகு] பரீட்சை மீதி மாதிரி

பேரேடு வரவுமீதி செலவுமீதி
காசேடு 220,000
மூலதனம் 300,000
பெற்ற வாடகை 15,000
கொள்வனவு 25,000
சம்பளம் 50,000
விளம்பரம் 50,000
காப்புறுதி 2,000
மின்சாரம் 2,000
வரி 6,000
365,000 365,000

பரீட்சை மீதில் கணக்கியல் பேரேடுகளில் மீதி வரவாக இருப்பவை வரவு நிரலிலும்,மீதிகள் செலவாக இருப்பவை செலவுப் நிரலிலும் பதியப்படும். முடிவில் வரவு செலவு இவற்றின் மொத்த கூட்டுத்தொகையும் சமப்படும்,அவ்வாறு சமப்படாவிட்டால் பேரேட்டு பதிவுகளில் வழுக்கள் இருப்பதாக கொள்ளப்படும்.இத்தகைய தன்மையால் பரீட்சை மீதியானது ஏடுகளின் துல்லியத்தன்மையினை உணர்த்தும் ஒர் குறிகாட்டியாக அமைகின்றது.பரீட்சை மீதி சமப்படுவதை மாத்திரம் கருத்தில் கொண்டு பேரேடுகளின் வழுவற்றதன்மை கொண்டதாக உறுதியாக கூறமுடியாது.எடுத்துக்காட்டாக, இடம்பெறும் வியாபார ஊடுசெயலொன்றினை பதியும் போது வரவினை செலவாகவும்,செலவினை வரவாகவும் பதிந்தால் இங்கு பரீட்சை மீதி சமப்படும் எனினும் இங்கு பதிவுமுறை பிழையாகும்.

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரீட்சை_மீதி&oldid=937808" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்