பரம்பா மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரம்பா மாநிலம்
ବଡମ୍ବା ରାଜ୍ୟ
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
1305–1948

Flag of பரம்பா

கொடி

Location of பரம்பா
Location of பரம்பா
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் பரம்பா மாநிலம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1305
 •  இந்திய விடுதலை இயக்கம் 1948
பரப்பு
 •  1892 368 km2 (142 sq mi)
Population
 •  1892 29,772 
மக்கள்தொகை அடர்த்தி 80.9 /km2  (209.5 /sq mi)
தற்காலத்தில் அங்கம் ஒடிசா, இந்தியா

பராம்பா மாநிலம் (Baramba State) பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் காலத்தில் இந்தியாவின் மன்னர் ஆட்சி நடந்த பகுதிகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பாரம்பா நகரில் இருந்தது. கடைசி ஆட்சியாளர் 1948- ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தார். 1948 இல் ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக பரம்பா மாநிலம் ஆனது.

வரலாறு[தொகு]

குடும்பத்தினரின் பதிவுகள் மற்றும் நீதிமன்றப் பதிவுகளின்படி, 1305 ஆம் ஆண்டில், சோன்கா மற்றும் மொஹுரி ஆகிய இரண்டு கிராமங்களை உள்ளடக்கிய நிலம், அப்போதைய கிழக்கு கங்கை பேரரசர் இரண்டாம் நரசிம்ம தேவாவால், மல்யுத்த வீரர் அடகேஷ்வர் ரவுத் என்பவருக்கு அவரது வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டபோது, பரம்பா மாநிலம் நிறுவப்பட்டது. [1] [2] [3] பரம்பா மன்னராட்சிப் பகுதியின் கடைசி ஆட்சியாளர் 1948 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ODISHA DISTRICT GAZETTEERS CUTTACK (PDF), GAD, Govt of Odisha, 1993, pp. 46–70
  2. Cobden Ramsay (1910), Bengal Gazetteers Feudatory States Of Orissa, DLI, p. 129
  3. Imperial Gazetteer of India, v. 6, p. 433.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரம்பா_மாநிலம்&oldid=3800587" இலிருந்து மீள்விக்கப்பட்டது