பயனர்:Raja Kannikovil

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wikipedia
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Raja Kannikovil

கன்னிக்கோவில் இராஜா
கன்னிக்கோவில் இராஜா
பிறப்புதிசம்பர் 11, 1975 (1975-12-11) (அகவை 48)
சென்னை, சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியா இந்தியர்
பணிஎழுத்தாளர்


கன்னிக்கோவில் இராஜா (பிறப்பு: 1975) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் ராஜா. சென்னை இவர் புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.. இவர் “தொப்புள்கொடி”, “கன்னிக்கோவில் முதல் தெரு”, “ஆழாக்கு”, “வனதேவதை” ஆகிய ஹைக்கூத் தொகுப்புகளையும், சிறுவர் பாடல்கள் மற்றும் சிறுவர்க்கான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன.

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த மயிலாப்பூரில் பிறந்த எழுத்தாளரான இவர், குமாரராஜா முத்தையா நடுநிலைப்பள்ளி, இராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் புலவர் தமிழ்நாவன் ஐயா அவர்களின் மூலம் தமிழ்ப்பற்று ஏற்பட்டு, ஏழாம் வகுப்பு முதலே கவிதைகள் எழுதத் தொடங்கியவர். பள்ளிக்கு அருகில் இருந்த வன்னியம்பதி கிளை நூலகமும், வீட்டின் அருகே இருந்த தேவநேய பாவாணர் நூலகமுமே இவரின் இலக்கியப் பயணத்திற்கு ஆணிவேராக அமைந்தவை.

தன் தாத்தா, எந்த ஒரு செய்தியையும் சுவைபட நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருப்பதைப் பார்த்தபிறகு இவர் செல்லும் இடங்களையும் சந்திக்கும் மனிதர்களையும் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் தினத்தந்தி - குடும்பமலர், கல்கண்டு, முத்தாரம், கல்கி கேள்வி-பதில் பகுதி எனப் பல இதழ்களில் படைப்புகளை அனுப்பி வெளிவந்த போதிலும், இவரது படைப்புகளை நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை இவரின் மனதில் விதைத்தவர். . . பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்பால் ஈடுபாடு கொண்ட சுப்புரத்தினதாசனாக விளங்கிய உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தான். ‘கவிதை உறவு’ மற்றும் ‘உரத்த சிந்தனை’ இதழ்கள் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கவிஞர் சுப. சந்திரசேகரன் மற்றும் கவிஞர்கள் பலரின் நட்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவங்களை ஈடுபாடு ஏற்பட்டு பல படைப்புகளை படைத்திருக்கிறார். கவிஞர் செல்லம்மாள் கண்ணன் அவர்களின் அறிமுகத்திற்கு பிறகு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வாயிலாக கவிஞர் உதயகண்ணன் இவரின் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘தொப்புள்கொடி’ என்கிற ஹைக்கூ நூலாகக் கொண்டுவந்து இலக்கியப் பாதையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். ஹைக்கூ, சென்ரியு. லிமரைக்கூ என ஹைக்கூவின் கிளை வடிவங்களை உள்வாங்கிய இவர், ‘லிமர்புன்’ என்கிற புதிய வடிவத்தையும் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இன்று பலரும் முகநூலிலும் இதழ்களிலும் லிமர்புன் எழுதி வருகிறார்கள்.

பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் வழிகாட்டுதலில் குழந்தைப் பாடல் எழுதி வந்த இவருக்கு தினமணி சிறுவர்மணி நல் ஆதரவை நல்கியது. இவருடன் இணைந்து பல தொகுப்பு நூல்களையும், ஹைக்கூ நிகழ்வுகளையும் நடத்தி உள்ளார். ‘துளிப்பா தேனடை’ என்ற பெயரில் தமிழ் இலக்கிய உலகிற்கு ஹைக்கூவின் பங்கை பறைசாற்றும் விதமாக தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் குறித்த அடைவு நூலை வெளியிட்டு, அதனை இலசவசமாக வழங்கி உள்ளார். முனைவர் ஆ.இராஜா - கவிஞர் சு. கணேஷ்குமார் ஆகியோர் கூட்டணியில் வெளிவந்த ‘புதிய செம்பருத்தி’ இதழின் ஆசிரியர் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு, இதழ் பயணத்தை ஆரம்பித்து ‘பொதிகை மின்னல்’, ‘அரும்பின் புன்னகை’, ‘நடுநிசி’, ‘எருது’, போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற பின்னர் ‘மின்மினி ஹைக்கூ’ இதழின் ஆசிரியராகவும் அறிமுகமானார். இன்று அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ‘நூலேணி’ மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறார்.

ஹைக்கூ மற்றும் புதுக்கவிதை 7 நூல்களும், சிறுவர் கதை 26 நூல்களும், சிறுவர் பாடல்கள் 6 நூல்களும், சிறுவர்கள் கதைப்பாடல் 7 நூல்களும் கட்டுரை 1 நூலும் வெளியிட்டு உள்ளார். ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ என்ற புலனக் குழுவை உருவாக்கி மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நாள்தோறும் ‘இந்த நாள் சிறப்பு நாள்’ என ஒவ்வொரு நாளின் சிறப்பை ஓவியமாக வரையவும், வெள்ளிக்கிழமைதோறும் கதைப் பாடலை பாடவும், ஞாயிற்றுக்கிழமை தோறும் கதைப் பயிற்சி அளித்து மாணவர்களை கதைகள் எழுதவும், அதை நூலாக வெளியிடவும் செய்து வருகிறார்.

உலகமெங்கும் உள்ள கதைசொல்லிகள் இவரின் கதைகளை ஒலிவடிவில் சொல்லி வருகிறார்கள்.. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ‘பேசும் கதைகள்’ என்ற பெயரில் கதைப் பாடலையும், கதைகளையும் ஒலிவடிவில் சொல்லி வருகிறார். மலேசியாவில் வசிக்கும் கவிஞர் / ஆசிரியர் நிர்மலாதேவி பன்னீர்செல்வம் அவர்களும் இவரின் கதைகளை அங்குள்ள வானொலியில் ஒளிபரப்பு செய்கிறார். இவரது கதைப் பயிற்சி காணொளியை மலேசிய தமிழ்ப் பள்ளியில் கவிஞர் / ஆசிரியர் புனிதா சுப்பிரமணியம் அவர்களும் ஒளிபரப்பு செய்து வருகிறார். தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி, ஜெர்மனி தமிழருவி வானொலி, கலாட்டா நெட்டிசன் - கலிபோர்னியா, தமிழ் எம்.டிவி டெலிவிஷன் - ஜெர்மனி ஆகியவற்றில் பன்னாட்டு குழந்தைகள் இவரின் கதைகளைச் சொல்லி வருகிறார்கள். ‘பாட்டாலே இணைவோம்’ என்ற நிகழ்ச்சியில் இவரது பாடல்களையும், ‘கதை கதையாம் காரணமாம்’ என்ற நிகழ்ச்சியில் இவரது கதைகளையும் மக்கள் தொலைக்காட்சி அனிமேஷன் வடிவில் ஒளிபரப்பி வருகிறது. குழந்தைக் கவிஞர் பணிச் செல்வர் திரு வெங்கட்ராமன் ஐயா அவர்களுடன் இணைந்து ‘குழந்தைக் கவிஞர் பேரவை’யின் செயலாளராகவும் இயங்கி வருகிறார்

மலேசிய பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்திய சிறுவர் கதைகள் போட்டியில் இவரின் கதைகள் வெற்றி பெற்றது. அதனை ‘தங்கமீன்கள் சொன்ன கதைகள்’ என்ற பெயரில் பிரசுரம் செய்து மலேசியாவில் வெளியிட்டது. அதேபோன்று எழுத்து அமைப்பு நடத்திய சிறுவர் இலக்கிய போட்டியில் இவரது கதைகள் ‘பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்’ என்ற பெயரில் நூலாக்கி கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து, நீதியரசர் இராம.சுப்ரமணியம் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இவரது படைப்புகளைப் பலர் எம்பில் ஆய்வு செய்து வருகிறார்கள். சிறுவர் இலக்கிய உட்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பல அமைப்புகள் வழங்கி இருக்கின்றன.

சிறுவர்க்கான சிறுகதைகள்[தொகு]

  • அணில் கடித்த கொய்யா / சிறுவர்க்கான கதைகள் / 2014

(நிவேதிதா பதிப்பகம், சென்னை)

  • ஒரு ஊர்ல.. ஒரு ராஜா! ராணி! / சிறுவர் கதைகள் / 2014

(அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)

  • பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் / சிறுவர் சுற்றுச்சூழல் கதைகள் / 2015

(எழுத்து இலக்கிய அமைப்பு, சென்னை)

  • அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள் / சிறுவர்க்கான கதைகள் / 2015

(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

  • கொம்பு முளைத்த குதிரை / சிறுவர்க்கான கதைகள் / 2016

(பழனியப்பா பிரதர்ஸ், சென்னை)

  • தங்கமீன்கள் சொன்ன கதைகள் / சிறுவர்க்கான கதைகள் / 2016

(கலைஞன் பதிப்பகம், சென்னை)

  • ஒற்றுமையே வலிமையாம் / பாரதியார் ஆத்திசூடி கதைகள் / 2016

(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

  • நிலவை எச்சரித்த கரடிக்குட்டி / சிறுவர்க்கான அறிவியல் கதைகள் / 2016

(சங்கர் பதிப்பகம், சென்னை)

மூக்கு நீ...ண்ட குருவி / சிறுவர்க்கான கதைகள் / 2017

(வானம் பதிப்பகம், சென்னை)

சிறுவர் பாடல்கள்[தொகு]

  • மழலைச்சிரிப்பு / சிறுவர் பாடல்கள் / 2007

(உதயம் பிரசுரம், சென்னை)

  • கிலுகிலுப்பை / சிறுவர் பாடல்கள் / 2008

(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

  • மியாவ்... மியாவ்... பூனைக்குட்டி / சிறுவர் பாடல்கள் / 2009

(மின்னல் கலைக்கூடம், சென்னை)

  • கொக்கு பற... பற... / சிறுவர் பாடல்கள் / 2012

(சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை)

  • மே... மே... ஆட்டுக்குட்டி / சிறுவர் பாடல்கள் / 2014

(மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

ஆதாரம்[தொகு]

America Thendral http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12436

Poonchittu https://poonchittu.com/pagudhi/idhu-eppadi-irukku/

Dinamani - Kondattam https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2021/aug/29/achievement-in-pencil-3688684.html

Dinamani – Siruvar mani: children’s story 29-08-2015 [1]

The hindu Mayabazaar 22-04-2015 [2]

Dinamani – Siruvar mani: children’s story 14-11-2015 [3]

The hindu Mayabazaar 20-04-16 [4]

9-4-2016 siruvar kathai paadal [5]

20-2-2016 siruvar kathai paadal [6]

http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/page/3/

Sirugathaigal.com http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/

வெளி இணைப்புகள்[தொகு]

http://kannikoilraja.blogspot.com/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raja_Kannikovil&oldid=3384126" இலிருந்து மீள்விக்கப்பட்டது