பந்தஜே அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தஜே அருவி

பந்தஜே அருவி' (Bandaje Falls) பந்தஜே அர்பி அருவி என்றும் அழைக்கப்படும் இது கர்நாடக மாநிலத்தில் தெற்கு கன்னட மாவட்டத்தின் பெள்தங்கடி வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சார்மடி மலையில் அமைந்துள்ளது. உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியுடன் அடர்ந்த காடுகள் மற்றும் புல் நிலங்களில் மலையேற்றத்தை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த அருவியை அடைய முடியும். மேலும், கோடையில் அருவி வறண்டு போகின்றன. இதன் உயரம் சுமார் 200 அடியாகும்.

அருவி[தொகு]

பந்தஜே நீர்வீழ்ச்சி நேத்ராவதி ஆற்றின் கிளை நதியால் உருவாகி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தொலைதூர பகுதியில் அமைந்துள்ளது. வலம்ப்ராவிலிருந்து அருவிக்கான பாதை புல் நிலங்களில் முடிவடையும் அடர்த்தியான பசுமையான காடு வழியாக செல்கிறது, வழிகாட்டி இல்லாமல் மலையேறுபவர்கள் காட்டில் தங்களை இழக்க நேரிடும். அருவியைப் பார்க்க, இரண்டு வெவ்வேறு வழிகள் உள்ளன. மங்களூர் - உஜீர் வழியாக பயணம் செய்தால், உஜிரிலிருந்து அது 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. உஜிரிலிருந்து சார்மடி மலையில் 12 கி.மீ பயணித்து, கதிருத்யவரா என்ற கிராமத்தில் அருவியின் தொலைதூரக் காட்சியைக் காணலாம். இருப்பினும், அருவியை அடைய கதிருத்யாவராவிலிருந்து இன்னும் 10 கி.மீ தூரத்திற்கு மலையேற வேண்டும். [1] உள்ளூரில் இந்த அருவி பந்தஜே அர்பி என்று அழைக்கப்படுகிறது. அங்கு அர்பி என்றால் துலு மொழியில் விழுகிறது என்று பொருளாகும். பெள்தங்கடி வனவிலங்கு அலுவலகம், குதிரைமூக்கு தேசிய பூங்காவிலிருந்து அருவிக்குச் செல்ல அனுமதி பெற வேண்டும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bandaje Falls". Karnataka Holidays. Archived from the original on 14 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தஜே_அருவி&oldid=3561842" இலிருந்து மீள்விக்கப்பட்டது