பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா

ஆள்கூறுகள்: 27°03′31″N 88°15′16″E / 27.0586099°N 88.254405°E / 27.0586099; 88.254405
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா
நுழைவாயில்
Map
27°03′31″N 88°15′16″E / 27.0586099°N 88.254405°E / 27.0586099; 88.254405
திறக்கப்பட்ட தேதி26 ஜூலை 1957[5]
அமைவிடம்டார்ஜீலிங், மேற்கு வங்காளம், இந்தியா
நிலப்பரப்பளவு67.56 ஏக்கர்கள் (27.3 ha)[1]
விலங்குகளின் எண்ணிக்கை156 (2006)[4]
ஆண்டு பார்வையாளர்கள்300,000 (2006)[4]
உறுப்புத்துவங்கள்மத்திய விலங்கு காட்சியக ஆணையம்,[2] உலக விலங்கு மற்றும் நீர்காட்சியக சங்கம்[3]
வலைத்தளம்pnhzp.gov.in

பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா (Padmaja Naidu Himalayan Zoological Park) (டார்ஜிலிங் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) 67.56-ஏக்கர் (27.3 ha) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் நகரில் உள்ள விலங்கியல் பூங்கா ஆகும்

விளக்கம்[தொகு]

பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா 1958ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 7,000 அடிகள் (2,134 m) உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உயரமான இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மிருகக்காட்சிசாலை இதுவாகும். ஆல்பைன் சுற்றுச்சூழலில் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளுக்கு ஏற்ற விலங்கியல் பூங்காவாக இது உள்ளது. மேலும் பனிச்சிறுத்தை, மிகவும் அருகிய இனமான இமாலய ஓநாய் மற்றும் சிவப்பு பாண்டா ஆகியவற்றுக்கான இனப்பெருக்கம் திட்டங்களைக் வெற்றிகரமாக வாழிடச்சூழலில் மேற்கொண்டுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலைக்கு ஆண்டுதோறும் சுமார் 300,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். இந்த பூங்காவிற்கு சரோஜினி நாயுடுவின் மகள் பத்மசா நாயுடு (1900-1975) பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலை இந்தியாவின் மத்திய விலங்கு காட்சியக ஆணையத்தின் சிவப்பு பாண்டா திட்டத்தின் மைய மையமாகச் செயல்படுகிறது. உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வள சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளது.

வரலாறு[தொகு]

டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா

விலங்கியல் பூங்கா ஒன்று மேற்கு வங்காளம் கல்வித் துறையின் கீழ் டார்ஜிலிங் அருகில் பிர்ச் ஹில் பகுதியில் 14 ஆகஸ்ட் 1958 அன்று நிறுவப்பட்டது. இந்த விலங்கியல் பூங்கா இப்பகுதியில் உள்ள விலங்குகள் குறித்து ஆய்வு கொள்ளவும் அவற்றைப் பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டது. இதன் முதல் நிறுவன இயக்குநர் திலீப் குமார் டே ஆவார்.இவர் இந்திய வனப் பணித் துறையினை சார்ந்தவர். இவர் இப்பணிக்காக, முக்கியமாக இமயமலை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் சிறப்பு வாய்ந்த உயரமான விலங்கியல் பூங்காவை நிறுவுவதற்காக அயற்பணியில் அனுப்பப்பட்டார். 1960ஆம் ஆண்டில் சோவியத் பிரதமர் நிக்கித்தா குருசேவ் இந்திய அரசுக்கு வழங்கிய ஒரு இணை சைபீரியப் புலிகள் (உசுரி) இந்த பூங்காவின் மதிப்புமிக்க உயிரிகளாகும். பல ஆண்டுகளாகப் பிரபல உலக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இப்பூங்காவினால் ஈர்க்கப்பட்டுப் பார்வையிட்டனர். மிருகக்காட்சிசாலையில் இப்போது பனிச்சிறுத்தை, சிவப்பு பாண்டா, மலை ஆடு, சைபீரியப் புலி மற்றும் பல அருகிய பறவைகள் உள்ளன. இருப்பினும், மலைப்பாங்கான பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இமயமலை விலங்குகள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடும் என்ற கவலை உள்ளது.[4]

1972 சனவரியில், பூங்கா ஒரு பதிவு செய்யப்பட்ட சமூகமாக மாறியது. பராமரிப்பு செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என்ற ஒப்பந்தத்துடன். மே 1993இல், இந்த பூங்கா மேற்கு வங்க வனத்துறைக்கு மாற்றப்பட்டது.[6] 1975ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி இப்பூங்காவிற்கு வருகை தந்து பத்மஜா நாயுடு நினைவாக இப்பூங்காவினை அர்ப்பணித்தபோது இந்த பூங்காவின் பெயர் மாற்றப்பட்டது.[6]

பாதுகாப்பு[தொகு]

மிருகக்காட்சிசாலையில் சிவப்பு பாண்டா

இந்த மிருகக்காட்சிசாலையில் பனிச்சிறுத்தை மற்றும் சிவப்பு பாண்டா இனப்பெருக்கம் மையம் ஒன்று உள்ளது. 1983ஆம் ஆண்டில் சூரிக்கு, அமெரிக்கா மற்றும் லடாக் ஆகிய இடங்களிலிருந்து மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளுடன் பனிச்சிறுத்தைகளின் வரையறுக்கப்பட்ட இடத்தில் பனிச்சிறுத்தை இனப்பெருக்கம் தொடங்கப்பட்டது. சிவப்பு பாண்டா திட்டம் 1994இல் கொலோன் மிருகக்காட்சி சாலை, மாட்ரிட் உயிரியல் பூங்கா, பெல்ஜியம் மற்றும் ரோட்டர்டாம் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த பாண்டாக்களுடன் தொடங்கப்பட்டது. இந்த உயிரினங்களுக்கு மேலதிகமாக, மிருகக்காட்சிசாலையில் இமயமலை வரையாடு, நீல ஆடுகள், இமயமலை மோனல், சாம்பல் மயில் ஃபெசண்ட், இமயமலை சாலமண்டர், ரத்த ஃபெசண்ட் மற்றும் சத்யர் ட்ராகோபன் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.[6] சிவப்பு பாண்டா, இமயமலை சாலமண்டர், திபெத்திய ஓநாய் மற்றும் பனிச் சிறுத்தை ஆகியவற்றின் பாதுகாப்பு இனப்பெருக்கம் திட்டங்களுக்காக இந்த மிருகக்காட்சி சாலை மிகவும் பிரபலமானது.

கேலரி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Darjeeling Zoo". pnhzp.gov.in. Padmaja Naidu Himalayan Zoological Park. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 20 August 2010.
  2. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011.
  3. "Zoos and Aquariums of the World". waza.org. WAZA. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011.
  4. 4.0 4.1 4.2 "Depleting Forests Threaten Animals in Darjeeling Zoo". indiatraveltimes.com. India Travel Times. December 2002. பார்க்கப்பட்ட நாள் 20 August 2010.
  5. "Padmaja Naidu Himalayan Zoological Park". darjeelingnews.net. Darjeeling News. Archived from the original on 22 February 2004. பார்க்கப்பட்ட நாள் 20 August 2010.
  6. 6.0 6.1 6.2 Roy, Barun (28 November 2008). "Promoting life – Padmaja Naidu Himalayan Zoological Park". wordpress.com. The Himalayan Beacon. பார்க்கப்பட்ட நாள் 20 August 2010.

வெளி இணைப்புகள்[தொகு]