பதுமன்தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதுமன்தேவி எனப்படுபவர்கள் பதுமன் என்ற பழனிமலைப் பகுதியை ஆண்ட அரசனின் இரண்டு மகள்களைக் குறிக்கும். இருவரும் இருவேறு சேர அரசர்களை மணந்து அரசி ஆயினர். இவர்கள் பெற்ற ஆண்பிள்ளைகள் அரசராயினர்.

ஒருத்தி வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நாடாண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி ஆனாள். இவளது மக்கள் இருவர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் இவர்கள் முறையே கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆட்சிக்கு முன்னும், பின்னும் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்டனர்.

மற்றொருத்தி கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் மனைவி. இவள் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுமன்தேவி&oldid=2565010" இலிருந்து மீள்விக்கப்பட்டது