பதுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவியர் குடியினர் பழனிமலைப் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் அரசன் வேளாவிக் கோமான். [1] வேளாவிக் கோமான் பதுமன் என்பவன் இவ்வூர் அரசர்களில் ஒருவன். இவன் ஆவியர் கோ வழியில் நெடுவேளாவிக்குப் பிறகு வருபவன். இவன் மகளிர் இருவருள் ஒருத்தியை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவனும், மற்றொருத்தியை செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை என்பவனும் மணந்தனர்.[2] [3] [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அவர்களில் ஒருவனான முருகன் 'வேளாவி' எனக் குறிப்பிடப்படுகிறாள். - அகம் 1
  2. ஆராத் திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் - களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் (பதிற்றுப்பத்து பதிகம் 4)
  3. குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள் ஆவிக் கோமான் றேவி யீன்றமகன் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதிற்றுப்பத்து பதிகம் 6)
  4. பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் - பெருஞ்சேரல் இரும்பொறை (பதிற்றுப்பத்து எட்டாம் பத்து - பதிகம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுமன்&oldid=3294200" இலிருந்து மீள்விக்கப்பட்டது