பட்னா மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 25°36′41″N 85°07′30″E / 25.6114°N 85.1249°E / 25.6114; 85.1249
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்னா மகளிர் கல்லூரி
வகைகிறித்தவ சிறுபான்மை அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி
உருவாக்கம்1940 (84 ஆண்டுகளுக்கு முன்னர்) (1940)
நிறுவுனர்அப்போஸ்தலிக் கார்மலின் கத்தோலிக்க மத சகோதரிகள்
சார்புபட்னா பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்முனைவர் சகோதரி எம். ரஷ்மி ஏசி
அமைவிடம்
பெய்லி சாலை
, , ,
800001
,
25°36′41″N 85°07′30″E / 25.6114°N 85.1249°E / 25.6114; 85.1249
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம்,இந்தி
இணையதளம்கல்லூரி இணையதளம்
பட்னா மகளிர் கல்லூரி is located in பீகார்
பட்னா மகளிர் கல்லூரி
Location in பீகார்
பட்னா மகளிர் கல்லூரி is located in இந்தியா
பட்னா மகளிர் கல்லூரி
பட்னா மகளிர் கல்லூரி (இந்தியா)

பட்னா மகளிர் கல்லூரி, என்பது, இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவில் 1940 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். பாட்னா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் அறிவியல், கலை, வணிகம் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பட்னா மகளிர் கல்லூரியானது 1940 ஆம் ஆண்டில் பாட்னாவின் அப்போதைய பேராயர் பி.ஜே. சல்லிவன், மற்றும் அன்னை எம். ஜோசபின் ஏசி (அப்போஸ்தலிக் கார்மலின் உயர் தலைவர்) ஆகியோரால் நிறுவப்பட்டது. பீகாரின் பெண்களின் உயர்கல்வியின் முன்னோடியாக இயங்கிவரும் இதுவே அம்மாநிலத்தின் முதல் மகளிர் கல்லூரியாகும். பாட்னா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக இருந்தாலும் 25.07.2007 அன்று, பீகார் அரசு பாட்னா மகளிர் கல்லூரியை 'கிறித்தவ மத சிறுபான்மையினர் கல்லூரி' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்போஸ்தலிக் கார்மலின் கத்தோலிக்க மத சகோதரிகளால் நடத்தப்படும் இக்கல்லூரிக்கு இதன் சிறப்பு காரணமாக 1952 ஆம் ஆண்டில், பீகார் அரசால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.[2]

அங்கீகாரம்[தொகு]

இந்த பட்னா மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா)[3] அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) ஏ தரம் வழங்கப்பட்டு மதிபிடப்பட்டுள்ளது.

மனிதநேயம், அறிவியல், வணிகம் & மேலாண்மை, கல்வி, என ஒன்பது முதுகலை பட்டப்படிப்பு திட்டங்கள் மற்றும் நான்கு முதுகலை பட்டயத்திட்டங்களோடு, முக்கிய பாடப் பிரிவுகளில் பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இருபத்தாறு இளங்கலை பட்டப்படிப்புகள் என அந்த பகுதி பெண்களுக்கு கல்விச்சேவை புரிந்து வருகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணிதம்
  • புள்ளியியல்
  • கணினி பயன்பாடுகள் (BCA)

கலை மற்றும் வணிகப்பிரிவு[தொகு]

  • ஆங்கிலம்
  • இந்தி
  • சமஸ்கிருதம்
  • உருது
  • தத்துவம்
  • நிலவியல்
  • வரலாறு
  • சமூகவியல்
  • அரசியல் அறிவியல்
  • உளவியல்
  • வீட்டு அறிவியல்
  • பொருளாதாரம்
  • தகவல்தொடர்பு ஆங்கிலம் மற்றும் ஊடக ஆய்வுகள்(CEMS)
  • வெகுஜன தொடர்பு (BMC)
  • வர்த்தகம்
  • வணிக நிர்வாகம் (BBA)
  • விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாண்மை (AMM)

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • ஸ்வேதா சிங், இந்திய பத்திரிகையாளர்
  • பாபியா கோஷ், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்
  • திபாலி, இந்திய சிலை புகழ்
  • அர்ச்சனா சோரெங், இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Patna University".
  2. "பாட்னா மகளிர் கல்லூரியின் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  3. "இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_மகளிர்_கல்லூரி&oldid=3890890" இலிருந்து மீள்விக்கப்பட்டது