நோதீப் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோதீப் கவுர் (Nodeep Kaur) ஓர் இந்திய தலித் தொழிலாளர் உரிமை ஆர்வலர் மற்றும் மஸ்தூர் அதிகார சங்கத்தின் (எம்ஏஎஸ்) உறுப்பினர் ஆவார், இது 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு தீவிரமாக ஆதரவளிக்கும் தொழில்துறை தொழிற்சங்கங்களில் ஒன்றாகும். [1] கவுர், குண்டிலி தொழிற்பேட்டையில் இருந்து 12 ஜனவரி 2021 அன்று அரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சட்டவிரோத கூட்டங்கள் கூட்டுதல், தாக்குதல் மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபடல், அத்துமீறல், மிரட்டி பணம் பறித்தல், குற்றவியல் மிரட்டல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் நிறுவனத்தின் கணக்காளரின், தொழிலாளர்களின் ஊதியத்தை செலுத்தத் தவறிய அறிக்கையின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார். [2] [3] காவல் துறையினரின் காவலில் இருந்தபோது அவர் தாக்கப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. [4] கவுரின் வழக்கறிஞரின் கூற்றுப்படி, கவுர் கைது செய்யப்பட்ட பிறகான மருத்துவ அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கான காயங்கள் இருந்தது. [5] [6]

அரியானாவின் சோனிபட் நீதிமன்றம் 2 பிப்ரவரி 2021 அன்று கவுருக்கு மூன்று முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்றில் பிணை ஆணையினை மறுத்தது. [7] கவுர் சகோதரி ராஜ்விர் (இவர் ராஜ்வீர் எனவும் அழைக்கப்படுகிறார்) கவுர் குடும்பம் இந்த வழக்கினை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றமத்திற்கு மாற்றக் கோரியது[8] இந்த வழக்கு அவர்களின் சாதி மற்றும் பொருளாதார பின்னணியினால் ஊடகங்களில் பரவலாக கவனத்தினைப் பெற்றுத் தந்தது. [9] [10] மேலும், இவரது சகோதரி ராஜ்வீர் தனது சகோதரர் நோதீப் கவுர் மற்றும் பலர் சமத்துவத்திற்கான பார்வை மற்றும் அடக்குமுறை மற்றும் சுரண்டல் இல்லாத சமுதாயத்தின் காரணமாக கைது செய்யப்ப்ட்டுள்ளதாகக் கூறியுள்ளார். [11]

இந்தோ-கனடிய கவிஞர் ரூபி கவுர் ட்வீட் செய்ததன் மூலம் இவரது கைது பரவலாக பலரால் அறியப்பட்டது. நோதிப் கவுரை விடுதலை செய்ய வேண்டும் என அவர் டுவீட் செய்தது தேசிய அளவில் கவனத்தினை ஈர்த்தது. [12] மீனா ஹாரிசு ட்வீட் செய்து கவுருக்கு உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். [13] [14] [15]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கவுர் பஞ்சாபில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தார். [16] ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக அவரது குடும்பத்தினை போராடி வந்துள்ளனர். அவரது தாயார் கிசான் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அவர் தனது கிராமத்தில் நிலமற்ற தலித் பெண்களை உயர் சாதி நில உரிமையாளர்கள் பாலியல் வன்கலவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் சமூக புறக்கணிப்பை எதிர்கொண்டு தெலுங்கானா செல்ல நேர்ந்தது. இதன் காரணமாக நோதிப்பின் கற்றல் பாதிப்பிற்கு உள்ளானது. அவர் திறந்த நிலைக் கல்லூரியில் 12 ஆம் வகுப்பினைக் கற்றார். தனது 12 வது படிப்பை முடித்த பிறகு, தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர விரும்பியதால், 2019 ல் தில்லிக்கு வந்தார். தில்லியில் அவர் பகத்சிங் சத்ரா ஏக்தா மஞ்சில் உறுப்பினரானார். பகத் சிங் சத்ரா ஏக்தா மஞ்ச் (பிஎஸ்சிஇஎம்) தில்லி பல்கலைக்கழகத்தில் இடது-சார்பு அமைப்பாகும். இந்த மாணவர் அமைப்பின் உறுப்பினராக அவர் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். பின்னர் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், அரியானாவில் சோனிபட் மாவட்டத்தின் குண்ட்லி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். தொழிற்சாலை உரிமையாளர்களின் கைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அதற்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார். அவர் குறைந்தபட்ச ஊதிய சட்டம், பெண் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், காலப்போக்கில் வேலைக்கான ஊதியம் போன்றவற்றை அமல்படுத்த கோரினார். இந்த கோரிக்கைகளுக்காக பிரச்சாரம் செய்ய அவர் மஜ்தூர் அதிகாரி சங்கத்தில் (MAS) சேர்ந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. Nandy, Asmita (3 February 2021). "Family of Fierce Women: Meet Dalit Labour Activist Held at Singhu". The Quint (in ஆங்கிலம்). Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
  2. "Activist Nodeep Kaur gets international support amid reports of her 'torture', 'sexual abuse' by Indian cops | Sikh24.com" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  3. "Dalit Activist, Who Fought for Workers and Farmers' Rights, Faced Custodial Torture, Alleges Family". The Wire. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  4. Sehgal, Manjeet (February 6, 2021). "As Meena Harris brings focus to Naudeep Kaur's arrest, torture, police say she assaulted cops on duty". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  5. "Jailed Dalit Labour Activist Nodeep Kaur Sexually Assaulted by Cops in Custody, Allege Kin, to Move HC". News18 (in ஆங்கிலம்). 2021-02-07. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  6. "Nodeep Kaur: All you need to know about jailed Dalit activist". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-02-07. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  7. "'Will do whatever possible to help trace missing farmers'". Millenium Post (in ஆங்கிலம்). 4 February 2021. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
  8. "'Will do whatever possible to help trace missing farmers'". www.millenniumpost.in (in ஆங்கிலம்). 2021-02-04. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
  9. "Dalit Activist, Who Fought for Workers and Farmers' Rights, Faced Custodial Torture, Alleges Family". The Wire. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
  10. "Why was Dalit labour rights activist, Nodeep Kaur, arrested from Singhu Border?". SabrangIndia (in ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  11. "Who is Nodeep Kaur, and why was she arrested?". 2021-02-09. https://www.thehindu.com/news/national/other-states/who-is-nodeep-kaur-and-why-was-she-arrested/article33790286.ece. 
  12. "Dalit Activist, Who Fought for Workers and Farmers' Rights, Faced Custodial Torture, Alleges Family". The Wire. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  13. "Dalit activist Nodeep Kaur's arrest gets global attention after Meena Harris's tweet". The News Minute (in ஆங்கிலம்). 2021-02-07. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  14. Magan, Srishti (6 February 2021). "Who Is Nodeep Kaur And Why Is Kamala Harris' Niece Demanding Her Release". www.scoopwhoop.com (in English). Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  15. "Nodeep Kaur granted bail by Punjab & Haryana HC, released from prison". 26 February 2021.
  16. "Nodeep Kaur: The jailed activist Meena Harris tweeted about" (in en-GB). BBC News. 2021-02-17. https://www.bbc.com/news/world-asia-india-56071706. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோதீப்_கவுர்&oldid=3286267" இலிருந்து மீள்விக்கப்பட்டது