நைலான் 46

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைலான் 46
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாலி[இமினோ(1,6-ஈராக்சோஎக்சாமெதிலீன்) இமினோடெட்ராமெதிலீன்]
வேறு பெயர்கள்
பாலி(எக்சாமெதிலீன் சக்சினமைடு), பாலி(N,N′-டெட்ராமெதிலின்அடிபினமைடு), இசுடானைல்
இனங்காட்டிகள்
50327-22-5
ChemSpider none
பண்புகள்
(C10H18N2O2)n
அடர்த்தி 1.19கி/மிலி (Quadrant Ertalon 46)
உருகுநிலை 290 °C; 554 °F; 563 K (Quadrant Ertalon 46)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நைலான் 46 (Nylon 46) என்பது ஒரு வகையான பல்லமைடு அல்லது நைலான் ஆகும். இந்தப் பிசினை வழங்கும் ஒரே வணிக நிறுவனம் டிஎஸ்எம் (DSM) எனும் டச்சுநாட்டு வேதிப்பொருள் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம், இந்தப் பிசினை "இசுடானைல்" (Stanyl) என்ற வணிகப்பெயரில் விற்பனை செய்கிறது.[1]

இது நைலான் 6 அல்லது நைலான் 66ஐக் காட்டிலும் உயர்ந்த உருகுநிலையைப் பெற்றுள்ளதால், சற்று கூடுதல் நேரத்திற்கு உயர் வெப்பநிலைகளைத் தாங்கவல்ல  பயன்பாடுகளில் பயன்படுகிறது. இதன் ஈரமீன் ஒருபடியை (புட்ரெசின்) உயிர்த்திரளிலிருந்து எளிதில் பெறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electronic Control Modules (ECU) - Electrical & Electronics - Applications - DSM". பார்க்கப்பட்ட நாள் 18 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைலான்_46&oldid=2485400" இலிருந்து மீள்விக்கப்பட்டது