நெருஞ்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நெருஞ்சி Tribulus terrestris |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
|
நிலைபெற்றுள்ளது
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Tribulus terrestris லின்னேயசு[1] |
நெருஞ்சி (Tribulus terrestris) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் சென்றிருக்கும். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்படு உடையன.
[தொகு] மருத்துவ குணங்கள்
- இதனை அரைத்துச் சாறு பிழிந்து குடித்தால் சிறுநீருடன் இரத்தம் கசிவது நிற்கும்.
- விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
- இது வெள்ளைபடுதலுக்கான மருந்தாக கீழாநெல்லியுடன் சம அளவு சேர்த்துத் தயிரிற் கலந்து உண்ணப்படுகிறது.
நெருஞ்சி முள். இம்முள் காலில் குத்தினால் மிகவும் வலிக்கும். மிதி வண்டி மெத்துருளிப் பட்டையை ஊடுருவி ரப்பர் குழையை (தூம்பை)ப் பொத்தல் இட்டுவிடுவதும் வழக்கம். முற்காலத்தில் போர்புரியும் பொழுது, போராளிகள் வரும் பாதையில் நெருஞ்சி முள் பரப்பி இருப்பார்கள்.
good remady for Prostatitis & impotency
[தொகு] மேற்கோள்
- ↑ "Tribulus terrestris information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-03-18.