நெப்டியூனியம் ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம் ஆர்சனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் மோனோ ஆர்சனைடு
இனங்காட்டிகள்
39350-08-8 Y
InChI
  • InChI=1S/As.Np
    Key: AUGTYUNFKAYNPM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Np].[As]
பண்புகள்
NpAs
வாய்ப்பாட்டு எடை 311.92
தோற்றம் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நெப்டியூனியம் ஆர்சனைடு (Neptunium arsenide) என்பது நெப்டியூனியம் மற்றும் ஆர்சனிக்கு ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் இருமச் சேர்மம் ஆகும். NpAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிம வேதியியல் சேர்மம் விவரிக்கப்படுகிறது. கலவை படிகங்களை உருவாக்குகிறது. நெப்டியூனியம் ஆர்சனைடு படிகங்களாக உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

தூய நிலையிலுள்ள நெப்டியூனியம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்களை விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் ஆர்சனைடு உருவாகிறது:

இயற்பியல் பண்புகள்[தொகு]

நெப்டியூனியம் ஆர்சனைடு பல வேறுபட்ட மாற்றங்களுடன் படிகங்களை உருவாக்குகிறது:[1][2]

  • கனசதுரப் படிகத் திட்டம், Fm3m என்ற இடக்குழு, a = 0.5835 நானோமீட்டர் என்ற செல் அளவுருடன் –131 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் தோன்றும்.
  • முக்கோணப் படிகத் திட்டம், a = 0.58312 நானோமீட்டர், c = 0.58281 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் –131 முதல் –98 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் தோன்றும். .
  • கனசதுரத் திட்டம், இடக்குழு Fm3m, a = 0.58318 நானோமீட்டர் என்ற செல் அளவுருவுடன் –98 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் தோன்றும்.

175 கெல்வின் வெப்பநிலையில் நெப்டியூனியம் ஆர்சனைடு எதிர்பெரோகாந்தத் தன்மைக்கு மாறுகிறது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "mp-2186: NpAs (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
  2. Arya, Balwant Singh; Patle, U. S.; Aynyas, Mahendra (24 April 2019). "High pressure structural and elastic properties of neptunium arsenide". AIP Conference Proceedings 2100 (1): 020148. doi:10.1063/1.5098702. பன்னாட்டுத் தர தொடர் எண்:0094-243X. Bibcode: 2019AIPC.2100b0148A. https://aip.scitation.org/doi/abs/10.1063/1.5098702?journalCode=apc. பார்த்த நாள்: 8 August 2021. 
  3. Erdos, Paul (6 December 2012) (in en). The Physics of Actinide Compounds. Springer Science & Business Media. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4613-3581-8. https://books.google.com/books?id=wZjfBwAAQBAJ&dq=Neptunium+arsenide+NpAs&pg=PA40. பார்த்த நாள்: 8 August 2021. 
  4. Aldred, A. T.; Dunlap, B. D.; Harvey, A. R.; Lam, D. J.; Lander, G. H.; Mueller, M. H. (1 May 1974). "Magnetic properties of the neptunium monopnictides". Physical Review B 9 (9): 3766–3779. doi:10.1103/PhysRevB.9.3766. Bibcode: 1974PhRvB...9.3766A. https://journals.aps.org/prb/abstract/10.1103/PhysRevB.9.3766. பார்த்த நாள்: 8 August 2021. 
  5. Blaise, A.; Fournier, J.M.; Damien, D.; Wojakowski, A. (1 February 1983). "Magnetization of neptunium monoarsenide" (in en). Journal of Magnetism and Magnetic Materials 31-34: 233–234. doi:10.1016/0304-8853(83)90229-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-8853. Bibcode: 1983JMMM...31..233B. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0304885383902299. பார்த்த நாள்: 8 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூனியம்_ஆர்சனைடு&oldid=3935155" இலிருந்து மீள்விக்கப்பட்டது