நூரி- ஜாம் தமாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

நூரி - ஜாம் தமாச்சி ( சிந்தி மொழி: نوري ڄام تماچي‎ ) இளவரசரான '''ஜாம் தமாச்சி''' அழகான மீனவப் பெண்ணான நூரியைக் காதலிப்பது பற்றிய பிரபலமான கதையாகும். நூரி தனது பரிபூரண சரணடைதல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றால் இளவரசரான தமாச்சியை  மகிழ்ச்சியடையச் செய்கிறாள், அவள் காதலை உணர்ந்த அவன் அவளை மற்ற ராணிகளை விட உயர்ந்த நிலையில் வைத்து நடத்துகிறான்.

 

இந்தக் கதை சிந்திக் கவிஞர் ஷா அப்துல் லத்தீப் பித்தாய்யின் கவிதை புத்தகமான ஷாவின் கவிதை இதழ்கள் (ஷா ஜோ ரிசாலோ) இல் சொல்லப்பட்டுள்ள ஏழு கதைகளில் ஒன்றாகும் மற்றும் பாகிஸ்தானின் சிந்துவில் இருந்து பிரபலமான ஏழு சோகக் காதல்களின் ஒரு பகுதியாகும். இந்த துயரமான காதல் கதாநாயகிகள் உமர் மாருய், மோமல் ரானோ, சுஹானி மெஹர், லிலன் சானேசர், சாசுய் புன்குன் மற்றும் சோரத் ராய் தியாச் இவைகள் பொதுவாக சிந்துவின் ஏழு ராணிகள் அல்லது ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்று அழைக்கப்படுவார்கள்.

ஏழு கதைகளில் இந்த கதை ஒன்றே நிறைவேறிய காதல் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் தவிர மற்றவையெல்லாம் தனிமை, பிரிவு, துணிச்சல் மற்றும் காதலின் வலியை சொல்பவையே.

கண்ணோட்டம்[தொகு]

ஜாம் தமாச்சி பாகிஸ்தானின் சிந்து, தட்டாவின் ஆட்சியாளரான ஒரு சம்மா வம்ச இளவரசன் ஆவான், ஜெர்ருக் மற்றும் தட்டா இடங்களுக்கு இடையே மூன்று ஏரிகள் உள்ளன, அவை கீஞ்சார், சோல்மாரி மற்றும் சோனாஹ்ரி என்று அழைக்கப்படுகின்றன. கீஞ்சார் நதியின் கரையில், பழமையான மீன்பிடி கிராமம் இருந்த இடத்தைக் குறிக்கும் உடைந்த சுவர்கள் இன்னமும் காணப்படுகின்றன. இந்த மீனவகுலத்தைச் சேர்ந்த நூரி என்ற பெண், ஜாம் தமாச்சியின் கவனத்தை அவளது அன்பினால் ஈர்க்கிறாள், அவள் அவனை வெறித்தனமாக காதலித்து, இன்னும் சொல்லப்போனால் தன் வெறித்தனமான காதலினால் அவனை மயக்கி அவளை அரச குடும்பத்தின் அனைத்து இளவரசிகளுக்கும் மேலாக உயர்த்தினாள். அவளுடைய சுத்தமான பெயர் காந்த்ரி என்பதாகும்,

இந்த புராணக்கதை எண்ணற்ற முறை சூஃபிகளால் தெய்வீக அன்பிற்கு உருவகமாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஷா அப்துல் லத்தீஃப் பிதாயின் கவிதைத் தொகுப்பான ஷாவின் கவிதை இதழ்கள் (ஷா ஜோ ரிசாலோ)வில் அதன் மிக அழகான மீனவ பெண் அரச ஆண் என்னும் பாடபேத வடிவம் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த கதையின் மூலம், பணிவு என்பதே பெரிய விஷயம் அதுவே யாரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என என்று ஷா சுட்டி காட்டுகிறார். [1]

நூரியின் கல்லறை[தொகு]

பல்வேறு கதைகளின் படி, நூரி தற்போதைய பாகிஸ்தானின் கீஞ்சார் ஏரியின் நடுவில் புதைக்கப்பட்டார். அவரது கடைசி ஓய்வு இடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சுர் காமோத்
  • ஜாம் டமாச்சி
  • சம்மா வம்சம்
  • சிந்துவின் கல்லறை ஓவியங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. K F MIRZA (Mirza Kalich Beg) (1980), Life of Shah Abdul Latif Bhittai: A Brief Commentary on his Risalo, Hyderabad, Sindh, Pakistan: Bhit Shah cultural centre committee
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூரி-_ஜாம்_தமாச்சி&oldid=3656978" இலிருந்து மீள்விக்கப்பட்டது