நீலிமா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலிமா சென்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்নীলিমা সেন
இயற்பெயர்நீல்மா குப்தா
பிறப்பு28 ஏப்ரல் 1928
கொல்கத்தா, இந்தியா
இறப்பு28 சூன் 1996 (வயது 68)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி ரவீந்திர சங்கீதம்
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1944-1996

நீலிமா சென் (Nilima Sen; 28 ஏப்ரல் 1928-28 சூன் 1996) பிரபல இரவீந்திர சங்கீதப் பாடகி ஆவார்.[1][2][3][4][5]

இளமை[தொகு]

நீலிமா குப்தா 28 ஏப்ரல் 1928 அன்று இந்தியாவில் கொல்கத்தாவில் பிறந்தார்.[6] இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் சாந்திநிகேதனுக்கு குடிபெயர்ந்தனர். இங்குத் தனது கல்வியைப் பெற்ற இவர், சாந்திநிகேதனில் பாரம்பரிய இசை மற்றும் இரவீந்திர சங்கீதத்தில் பட்டயப் படிப்பை முடித்தார். சாந்திநிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். தாகூரின் வழிகாட்டுதலின் கீழ் நடிக்கும் பாக்கியம் இவருக்கு இருந்தது; ஆனால் அரங்கேற்றப்படவில்லை. காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் சாந்திநிகேதனுக்கு வருகைதந்தபோது இவர்கள் முன்னிலையில் நீலிமா பாடினார். இவரது குரு சைலஜரஞ்சன் மசூம்தார் ஆவார்.

நீலிமா வானொலியில் பாடத் தொடங்கினார். மேலும் தனது 16 வயதில் தனது முதல் இசை வட்டினை வெளியிட்டுப் பிரபலமானார். 1950ஆம் ஆண்டில், அமியா குமார் சென்னை திருமணம் செய்து கொண்டு சாந்திநிகேதனில் குடியேறினார். இந்த இணையருக்கு ஒரு மகள் இருந்தார். இவரும் ஒரு பாடகர் ஆவார். இவர் தனது கணவருடன் அமெரிக்காவுக்குச் சென்று பிபிசி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

பிரசாத் சென்னுடன் இணைந்து சுரங்கமா என்ற இசைப் பள்ளியை நிறுவினார். பின்னர் சங்கீத பாவனாவில் ஆசிரியராகச் சேர்ந்தார். ஓரிரு ஆண்டுகள் பர்தமான் பல்கலைக்கழகத்தில் இசை கற்பித்தார். இவர் சங்கித பாவனாவின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஒரு ஆசிரியராக, தஷர் தேஷ், மாயர் கேலா (சுசித்ரா மித்ரா சேஷ் ரக்ஷா உடன்) போன்ற பல்வேறு நடன நாடகங்களில் சுப்ரியோ தாகூருடன் இணைந்து நடித்தார். விசுவ பாரதி ஏற்பாடு செய்த இந்த நடன நாடகங்கள் இரவீந்திர சதன், நியூ எம்பயர் கொல்கத்தா போன்ற கலையரங்கங்களில் அரங்கேற்றப்பட்டது. "சொக்கர் ஜலேர் லாக்லோ ஜோர்", "ஆஹா தோமர் சங்கே", "பஜாவோ ரே மோகன் பன்ஷி" போன்ற பாடல்கள் அவரது குரலில் உட்பொதிக்கப்பட்ட சோகத்தின் மூலம் சரியான வெளிப்பாட்டைக் கண்டன.

இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, மியன்மார் மற்றும் மலேசியா முழுவதும் நீலிமா இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது புகழ்பெற்ற மாணவர்களில் சுவசுதிகா முகோபாத்யாய், லில்லி இசுலாம், பசாபி தத்தா, ரெசுவானா சவுத்ரி பன்யா, ரீட்டா கோசு, பிரமிதா மல்லிக், ஜெயந்தி புர்காயசுதா, சோமா ராய், அதிதி மொக்சின் ஆகியோர் அடங்குவர்.

நீலிமா நீண்டகால நோயால் 1996-இல் இறந்தார்.

பதிவுகள்[தொகு]

2004 ஆம் ஆண்டில், சா ரே கா மா நீலிமா சென் எழுதிய நான்கு தனிப்பாடல் தொகுப்புகளை மீண்டும் வெளியிட்டது. இவை "கேலர் சதி, பிடைத்வார்", "ராஜா" (நாடகம்) "தோமரி மதுர் ரூபே போரேச்சோ புவன்" மற்றும் "துமி பந்து தூமி நாத்" ஆகும்.[7]

2005ஆம் ஆண்டில், ச ரே கா மா "கி ராகினி பஜாலே" என்ற பாடலை வெளியிட்டார். இதில் இவரது 21 பாடல்கள் தொகுப்பாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The voice that continues to enchant". The Daily Star. 8 May 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  2. "Singing new tunes". 23 April 2005. Archived from the original on 3 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  3. "An evening of Rabindra Sangeet". The new Nation. 17 August 2007. Archived from the original on 14 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  4. "Evocative style". 10 March 2006. Archived from the original on 26 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  5. "Under the shady trees of Shantiniketan: Aditi Mohsin recalls her days at Tagore's university". The Daily Star. 2 November 2003. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  6. "Good Morning - Soiree to mark the 75th birth anniversary of Rabindrasangeet exponent Nilima Sen". 28 April 2003. Archived from the original on 4 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  7. [[[:வார்ப்புரு:AllMusic]] "Nilima Sen discography"]. allmusic. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07. {{cite web}}: Check |url= value (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலிமா_சென்&oldid=3916758" இலிருந்து மீள்விக்கப்பட்டது