நீலம் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலம் சூறாவளிப் புயல்
சூறாவளிப் புயல் (இ.வா.து. அளவு)
Tropical storm (JTWC scale)
சூறாவளிப் புயல் நிலம்
தொடக்கம்ஒக்டோபர் 26, 2012
மறைவுநடைபெறுகின்றது
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 85 கிமீ/ம (50 mph)
1-நிமிட நீடிப்பு: 95 கிமீ/ம (60 mph)
தாழ் அமுக்கம்994 hPa (பார்); 29.35 inHg
இறப்புகள்48
பாதிப்புப் பகுதிகள்இலங்கை, தென்னிந்தியா
2012 வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி

நிலம் புயல் அல்லது நீலம் புயல் (Cyclone Nilam)[1] [2]என்பது 2012 ஆண்டில் வங்கக் கடலில் உருவான மூன்றாவது, இரண்டாவது அதி தீவிரப் புயலும் ஆகும். வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே 2012 அக்டோபர் 26 ஆம் தேதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; 2012 அக்டோபர் 30 காலை, அது புயலாக மாறியது.[3]

பாதிப்புக்கள்[தொகு]

இந்தியாவில்[தொகு]

நீலம் புயலின் பாதை

இந்தியாவின் தென்பகுதியின் சில இடங்களில் மணிக்கு ஏறத்தாழ 100 கிலோமீற்றர் வேகத்தில் நீலம் புயல் வீசியது.[4] கடற்கரைப் பகுதிகளில் ஒன்றில் இருந்து இரண்டு மீற்றர் உயரம் அளவிற்கு கடலலைகள் உயர்ந்தன.

இலங்கையில்[தொகு]

பாதிப்புக்கள்
இடம் இறப்புகள் பாதிப்புகள்
(மில்லியன்களில்)
ஆதாரம்
இலங்கை 5 N/A [5] [6]
தமிழ் நாடு 21 N/A [7]
ஆந்திரா 22[8] N/A [9]
மொத்தம் 48 US$ 18.9 [10]

இலங்கையில் நீலம் புயல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையாயினும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகப் பொழிந்த மழையால் இலங்கையின் சில பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பேர் இறந்ததுடன் 69,659 பேர் பாதிக்கப்பட்டதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.[11] பலத்த காற்று வீசியதையடுத்து யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதிக்கு உயரழுத்த மின்சாரத்தை எடுத்து வரும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் ஏறத்தாழ 24 மணித்தியாலங்கள் மின்தடங்கல் ஏற்பட்டது.[12] மேலும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ ஒலிரோசரிப் பாடசாலை சேதமடைந்ததையடுத்து நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.[13][14] மேலும் தெற்கு விரைவு நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டது.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.bbc.co.uk/tamil/india/2012/10/121031_nilamcyclone.shtml
  2. http://www.migazin.de/2012/11/02/rassismus-in-den-deutschen-medien-warum-sandy-beliebter-ist-als-nilam-oder-son-tinh/
  3. [1]
  4. "இன்னும் 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்". அத தெரண. 01 நவம்பர் 2012. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 03 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. ColomboPage News Desk (29 October 2012). "Torrential rains cause havoc in Sri Lanka as depression over Bay of Bengal moves in". ColomboPage இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121031062513/http://www.colombopage.com/archive_12A/Oct29_1351524597KA.php. பார்த்த நாள்: 29 October 2012. 
  6. Disaster Management Centre. "Daily Situation Report - Sri Lanka 01 November 2012 at 18:00hrs". Disaster Management Centre. பார்க்கப்பட்ட நாள் 1 November 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Cyclone Nilam: By the Numbers". Dow Jones & Company,. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-11-07.
  9. "Cyclone Nilam toll rises to seven". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  10. "Tamil Nadu picks up after Nilam surge". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  11. "சீரற்ற காலநிலையால் 69,659 பேர் பாதிப்பு மூவர் பலி". அத தெரண. 01 நவம்பர் 2012. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 01 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  12. "லக்ஸபான மின்சாரம் பெற நிறுவிய கம்பங்கள் சரிந்தன". ஆன்லைன் உதயன். 31 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 01 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை". அத தெரண. 01 நவம்பர் 2012. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 01 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  14. "48 மணித்தியாலங்களுக்கு மழை தொடரும்". சூரியன் எவ். எம். செய்திகள். 01 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 01 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  15. "தெற்கு அதிவே வீதியை பயன்படுத்தும் சாரதிகளின் கவனத்திற்கு!". அத தெரண. 02 நவம்பர் 2012. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 03 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_புயல்&oldid=3737413" இலிருந்து மீள்விக்கப்பட்டது