நிர்பயா சமரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்பயா சமரோ
Nirbhaya Samaroh
வகைஇந்திய பாரம்பரிய நடனம், இந்திய பாரம்பரிய இசை
நாள்ஆன்டுதோறும்
அமைவிடம்(கள்)புது தில்லி
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2013 - முதல்
Founded byமானசி பிரதான்

நிர்பயா சமரோ (Nirbhaya Samaroh) என்பது பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மகளிர் தேசியப் பிரச்சார இயக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் நடனம் மற்றும் இசை விழா ஆகும். 2012 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த கும்பல்-வன்புணர்வு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிடப்பட்ட இந்த விழா பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. [1]

புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற 2015 நிர்பயா சமரோவில் நிகழ்ந்த ஒரு குழு நடன அமைப்பு

மகளிர் உரிமை ஆர்வலர் மானசி பிரதான் அவர்களால் நிறுவப்பட்ட இத்திருவிழா முதலில் 2013 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 அன்று நடைபெற்றது. [2] திருவிழாவின் இரண்டாவது பதிப்பு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 அன்று புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நடைபெற்றது. [3] [4]

வரலாறு[தொகு]

பெண்களுக்கான தேசியப் பிரச்சார இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நிர்பயா சமரோ 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுத்து ஆதரிக்கும் விதமாக இந்திய இசை மற்றும் நடனத்தைப் பயன்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். [2] [5]

விழா திட்டம்[தொகு]

இந்த விழாவில் பிரபல இந்திய கலைஞர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் "நமக்குள் தீ எரியட்டும் ....." என்ற திருவிழா குறிச்சொல்லுடன் ஒருங்கிணைக்கப்படுகிறடு.[6] [7]

நிர்பயா சம்மன்[தொகு]

புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற 2015 நிர்பயா சமரோவில் ஒரு நிகழ்ச்சி

திருவிழாவையொட்டி, பெண்களை மேம்படுத்தும் பங்களிப்புக்காக இந்தியாவின் முன்னணி அமைப்பொன்று நிர்பயா சமோர் விழாவில் சிறப்பிக்கப்படுகிறது. முதலாவது நிர்பயா சமரோவில் பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் சிறப்பிக்கப்பட்டது. [1] 2 ஆவது நிர்பயா சமரோவில் பிறரன்பின் பணியாளர்கள் சபை என்ற கத்தோலிக்க துறவற சபை சிறப்பிக்கப்பட்டது.

நிர்பயா புரசுகார்[தொகு]

விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நிர்பயா புரசுகார் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "NCW chief to open Nirbhaya Samaroh at Puri today".
  2. 2.0 2.1 "2015 Nirbhaya Samaroh to be held at Delhi today, Odisha Current News, Odisha Latest Headlines". Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  3. "Nirbhaya Samaroh 2015 at India Habitat Centre IHC, Lodhi Road, Delhi on 09 Apr, 2015". Archived from the original on 2016-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  4. ""Nirbhaya Samaroh 2015" A tribute to the spirit of Indian women through four choreographies by 23 dancers of different genre at Stein Auditorium, India Habitat Centre (IHC), Lodhi Road > 7pm on 9th April 2015".
  5. "The Pioneer".
  6. "Nirbhaya Samaroh 2015".
  7. "Nirbhaya Samaroh 2015". Archived from the original on 2017-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பயா_சமரோ&oldid=3560744" இலிருந்து மீள்விக்கப்பட்டது