நியோடிமியம்(III) அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) அயோடேட்டு
Neodymium(III) iodate
இனங்காட்டிகள்
14732-16-2 நீரிலி Y
55713-55-8 ஒற்றைநீரேற்று Y
EC number 238-789-0
InChI
  • InChI=1S/3HIO3.Nd/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: SEHRUTVBKBCDGC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21149363
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[Nd+3]
பண்புகள்
Nd(IO3)3
வாய்ப்பாட்டு எடை 668.95 கி/மோல்
தோற்றம் ஊதா நிறத் திண்மம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(III) அயோடேட்டு (Neodymium(III) iodate) என்பது Nd(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

நியோடிமியம்(III) நைட்ரேட்டு அல்லது நியோடிமியம்(III) ஆக்சைடு சேர்மத்துடன் நீரிலுள்ள அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 230 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நீர்வெப்ப வினையின் மூலம் நியோடிமியம்(III) அயோடேட்டை தயாரிக்கலாம்::[1]

Nd(NO3)3 + 3HIO3 -> Nd(IO3)3 + 3HNO3
Nd2O3 + 6HIO3 -> 2Nd(IO3)3 + 3H2O

பண்புகள்[தொகு]

நியோடிமியம்(III) அயோடேட்டு பின்வருமாறு வெப்பச் சிதைவுக்கு உட்படுகிறது:[2]

7Nd(IO3)3 → Nd5(IO6)3 + Nd2O3 + 9I2 + 21O2

நியோடிமியம்(III) அயோடேட்டின் ஒற்றைநீரேற்றும் அறியப்படுகிறது. P21 என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிகவமைப்பில் இது படிகமாகிறது. அறை வெப்பநிலையில் இதன் வெப்ப மின் குணகம் 2.2×10−5 C·m−2/K ஆகும்:[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்(III)_அயோடேட்டு&oldid=3958325" இலிருந்து மீள்விக்கப்பட்டது