நியூ கலிடோனியத் தமிழர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ கலிடோனியாவில் தமிழர்கள்
மொத்த மக்கள்தொகை
(500)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
நூமியா
மொழி(கள்)
பிரெஞ்சு, தமிழ்
சமயங்கள்
இந்து சமயம், கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள்,

நியூ கலிடோனியாவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 500 பேர் வாழ்கின்றனர். மலபார்கள் என அழைக்கப்படும் இவர்கள் 19வது நூற்றாண்டில் பிரெஞ்சு குடியேற்றப் பகுதியாக இருந்த ரீயூனியனிலிருந்து வந்தவர்களாவர்.

நியூ கலிடோனியாவில் சென்ற நூற்றாண்டில் பல தமிழ்க் குடிகள் உள்ளூர் குடிகளுடன் கலப்புமணம் செய்தனர். இந்தியர்கள் பெருந்திரளாக வேலைக்கு அங்கு சென்றதாகவும் அங்கிருந்த சீனர்களையும் சாவாகத்தாரையும் விடச் சிறப்பாக வேலை செய்ததாகவும் 1919 இல் வெளியான ஓர் நூல் கூறுகிறது. ஆகத்து 1967 இல் தாஹித்தியில் தமிழினத்தைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் கண்டறியப்பட்டனர். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தங்களின் மூதாதையர் குறித்து தெரியவில்லை எனினும் பெற்றோர் தங்களின் பெற்றோர் எவ்வாறு இந்தியர்களுடன் அவர்களது மொழியில் பேசினர் என்பதையும் தங்கள் தாய்நாடு குறித்து பாடி அழுதனர் என்றும் நினைவு கூர்ந்தனர். அவர்களது பழங்குடிமையை அறிய அவர்களது இந்திய வழியான குடும்பப் பெயர்களே துணையாக இருந்தன: பவழக்கொடி, மாரிசாமி, இராயப்பன், சாமிநாதன், திவி, வீராசாமி என்பன.

சான்றுகோள்கள்[தொகு]