நிக்கல்(II) தயோசயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல்(II) தயோசயனேட்டு

நிக்கல்(II) தயோசயனேட்டு மாதிரி

நிக்கல்(II) தயோசயனேட்டு படிகக் கட்டமைப்பு
இனங்காட்டிகள்
13689-92-4
ChemSpider 4318849
EC number 237-205-1
InChI
  • InChI=1S/2CHNS.Ni/c2*2-1-3;/h2*3H;/q;;+2/p-2
    Key: ALYMILAYQDOMFU-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5145251
SMILES
  • C(#N)[S-].C(#N)[S-].[Ni+2]
பண்புகள்
Ni(SCN)2
வாய்ப்பாட்டு எடை 174.86 கி/மோல்[1]
தோற்றம் பசும்பழுப்பு தூள்
அடர்த்தி 2.59 கி/செ.மீ3[1]
உருகுநிலை சிதைவடையும்[1]
5×10−3 செ.மீ3/மோல்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு பாதரச தயோசயனேட்டு கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
P201, P202, P260, P261, P264, P270, P272, P273, P280, P281, P285, P302+352, P304+341, P308+313
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(II) புரோமைடு, நிக்கல்(II) குளோரைடு, நிக்கல்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தாமிரம்(I) தயோசயனேட்டு, கோபால்ட்டு(II) தயோசயனேட்டு, பாதரசம்(II) தயோசயனேட்டு, அமோனியம் தையோசயனேட்டு
பொட்டாசியம் தயோசயனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நிக்கல்(II) தயோசயனேட்டு (Nickel(II) thiocyanate) என்பது Ni(SCN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒருங்கிணைப்பு பலபடியான இச்சேர்மம் பசும்பழுப்பு நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது.[1] இதன் படிக கட்டமைப்பு முதன் முதலில் 1982 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

கட்டமைப்பு[தொகு]

Ni(SCN)2 இன் கட்டமைப்பு ஒற்றை-படிக ஊடுகதிர் விளிம்புவிலகல் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வாண்டெர்வால்சு விசைகள் மூலம் ஒன்றாக வைத்திருக்கும் இரு பரிமாணத் தாள்கள் கட்டமைப்பில் உள்ளன. பாதரச தயோசயனேட்டின் கட்டமைப்பு வகையைச் சேர்ந்தது என்றும் NiBr2 (CdI2) கட்டமைப்பின் சிதைந்த வடிவமாகவும் இதை கருதலாம். ஒவ்வொரு நிக்கலும் நான்கு கந்தகங்கள் மற்றும் இரண்டு நைட்ரசன்களால் எண்முகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. SCN ஈந்தணைவியின் கந்தக முனை இரட்டிப்பாக பாலம் அமைக்கிறது.[1]

தயாரிப்பு[தொகு]

KSCN மற்றும் நிக்கல்(II) பெர்குளோரேட்டு அறுநீரேற்றின் மெத்தனாலிக் கரைசல்களின் வினையைப் பயன்படுத்தி உப்பு இடப்பெயர்ச்சி வினை மூலம் இதை தயாரிக்கலாம். , Ni(SCN)2 தீர்வை வழங்க, துரிதப்படுத்தப்பட்ட KClO4 வீழ்படிவை வடிகட்டுவதன் மூலம் நிக்கல்(II) தயோசயனேட்டு கரைசலைப் பெறலாம். இக்கரைசலிலிருந்து மெத்தனால் அகற்றப்பட்டால், Ni(SCN)2 சேர்மத்தின் தூய நுண்படிகத் தூளைப் பெறவியலும்.

காந்தத்தன்மை[தொகு]

நிக்கல்(II) அயோடைடு, நிக்கல்(II) புரோமைடு மற்றும் நிக்கல்(II) குளோரைடு சேர்மங்கள் போலவே நிக்கல்(II) தயோசயனேட்டும் குறைந்த வெப்பநிலையில் ஓர் எதிர் வயக்காமாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dubler, Erich; Relier, Armin; Oswald, H. R. (1982-01-01). "Intermediates in thermal decomposition of nickel(II) complexes: The crystal structures of Ni(SCN)2(NH3)2 and Ni(SCN)2". Zeitschrift für Kristallographie – Crystalline Materials 161 (1–4): 265–278. doi:10.1524/zkri.1982.161.14.265. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-7105. 
  2. 2.0 2.1 DeFotis, G. C.; Dell, K. D.; Krovich, D. J.; Brubaker, W. W. (1993-05-15). "Antiferromagnetism of Ni(SCN)2". Journal of Applied Physics 73 (10): 5386–5388. doi:10.1063/1.353740. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. Bibcode: 1993JAP....73.5386D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_தயோசயனேட்டு&oldid=3932752" இலிருந்து மீள்விக்கப்பட்டது