நான்காம் அரிவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் அரிவர்மன்
ராஜாதி ராஜா
சம்பாவின் அரசன்
ஆட்சி1074-1080
முடிசூட்டு விழா1074
முன்னிருந்தவர்மூன்றாம் ருத்ரவர்மன்
பின்வந்தவர்இரண்டாம் செயேந்திரவர்மன்
வாரிசு(கள்)இரண்டாம் செயேந்திரவர்மன் (இளவரசன் வாக்)
முழுப்பெயர்
இளவரசர் தாங்
விஷ்ணுமூர்த்தி
மாதவமூர்த்தி
தேவதமூர்த்தி
யாம் பொ கு விஜய சிறீ அரிவர்மதேவன்
அரச குலம்அரிவர்மனித வம்சம்
பிறப்பு?
குயாங் நாம், சம்பா இராச்சியம்
இறப்பு1081
இந்திரபுரம்
சமயம்இந்து சமயம்

நான்காம் அரிவர்மன் (Harivarman IV) அல்லது இளவரசர் தாங் (?–1081),( சமசுகிருதப் பெயர் விஷ்ணுமூர்த்தி) 1074 முதல் 1080 வரை சம்பாவை ஆண்ட அரசராக இருந்தார். இவரது தந்தை தேங்காய் குலத்தை (வடக்கு பழங்குடியினர்) சேர்ந்த ஒரு உயர்குடியைச் சேர்ந்தவர். இவரது தாயார் அரேகா குலத்தை (தெற்கு பழங்குடியினர்) சேர்ந்தவர். [1]

அதிகாரத்திற்கு வருதல்[தொகு]

சியென் தானில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்காம் அரிவர்மன் காலத்திய கல்வெட்டுகளில் ஒன்று

மூன்றாம் ருத்ரவர்மன் (ஆட்சி. 1062–1074) கொடுங்கோ மற்ரும் பான் ரங் உயர் குடியினரை பிரித்து, பிரபுக்களுக்கு இடையே ஒரு குழப்பமான உள்நாட்டுப் போரைத் தூண்டினார். சம்பா இராச்சியம் பின்னர் ருத்ரவர்மனின் ஆட்சியால் ஏற்பட்ட குழப்பமான காலகட்டமாக மாறியது. உள்நாட்டுப் போர் சம்பாவை முற்றிலும் அழித்துவிட்டது.

வடக்கிலிருந்து வந்த தென்னை குலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களான இளவரசர் தாங் மற்றும் இளவரசர் பாங், ள் ( நரிகேலவம்சம், வடக்கு பழங்குடியினர்) மற்றும் அரேகா குலத்தினர் ( கிராமுகவம்சம், தெற்கு பழங்குடியினர்) அனைத்து எதிரிகளையும் வெற்றியுடன் தோற்கடித்து, சம்பா இராச்சியத்தை மீண்டும் ஒன்றிணைத்தனர்.

ஆட்சி[தொகு]

இளவரசர் தாங் 1074 இல் சிம் சோனில் (திரா கியூவிற்கு அருகில்) சம்பாவின் அரசர் அரிவர்மனாக முடிசூட்டப்பட்டார். தன்னை சம்பாவின் பாதுகாவலராக அறிவித்து, ஒரு புதிய வம்சத்தை நிறுவினார். இவர் இராச்சியத்தை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினார். ஒரு தலைநகரைக் கட்டி, திராலவுன் இசுவோனின் கோட்டையை மீட்டெடுத்தார். மேலும், மாநில நலன் மற்றும் மகிழ்ச்சியை நெறிப்படுத்தினார். [2]

சீர்திருத்தம் மற்றும் கட்டிடம்[தொகு]

அரிவர்மன் 'சம்பாவை மீண்டும் ஒரு பெரிய சக்தியாக மாற்ற விரும்புவதாக' விவரிக்கப்பட்டார். [3] எனவே பண்டைய நகரமான சிம்மபுரத்தை (சுமார் 400 முதல் 750 வரை சம்பாவின் முன்னாள் தலைநகராக இருந்தது) மீட்டெடுத்தார். மீ சன்லுள்ள மத அடித்தளங்கள், பத்ரேசுவரர் கோவில் உட்பட பல கட்டிடங்களை மீண்டும் கட்டினார். தனது இராணுவ வெற்றிகளுக்குப் பிறகு உள்ளூர் கோயிகளுக்கு வெளிநாட்டு போர்க் கைதிகள் பணி செய்ய வழங்கினார். நிதி அமைப்பை சீர்திருத்தினார். சம்பாவின் வலிமை மற்றும் செழிப்பை வலுப்படுத்தினார். இவரது ஆட்சியில் உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலத்தை சம்பா அடைந்தது. [4]

ராஜதந்திரம்[தொகு]

அரிவர்மன் 1074 இல் லி துவாங் கீட் தலைமையிலான வியட்நாமியத் தாக்குதலை தோற்கடித்தார். 1076 இல் தாய் வியட்டிற்கு எதிரான கூட்டுப் போரில் சொங் வம்சத்துடனும் கெமர் பேரரசுடனும் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக தாய் வியட்டுடன் சமாதானம் செய்து கொண்டார். [1]

இந்த காலகட்டத்தில் கெமர் பேரரசின் மூன்றாம் ஹர்ஷவர்மன் இளவரசர் நந்தவர்மதேவனை கெமர் படைக்கு தலைமை தாங்கி தளபதியாக அனுப்பினார். வடக்கு சம்பா பகுதியைத் தாக்கவும், நகரங்களையும் கோயில்களையும் சூறையாடவும், மீ சன் பகுதியில் பலவற்றைக் கொள்ளையடிக்கவும் செய்தார். சோமேஸ்வரப் போரில் அரிவர்மன் படையெடுப்பாளர்களை முறியடித்தார். இளவரசர் நந்தவர்மதேவன் ஒரு போர்க் கைதியாக உயிருடன் பிடிக்கப்பட்டார். 1080 ஆம் ஆண்டில், அரிவர்மன், தனது இளைய சகோதரர் இளவரசர் பாங், (பின்னர் பரமபோதிசத்வர் (ஆட்சி. 1081-1086) என்று அழைக்கப்பட்டார்) தலைமையிலான சம்பா இராணுவம் கம்போடியாவின் மீது ஒரு எதிர் படையெடுப்பைத் தொடங்கியது. அங்கு இவர்கள் மேக்கொங் ஆற்றிலுள்ள சம்புபுரம் (சம்போர்) நகரத்தை சூறையாடினர். [5]

ஓய்வு மற்றும் வாரிசு[தொகு]

ஹரிவர்மன் 1080 இல் தனது ஒன்பது வயது மகன் இளவரசர் வாக்கை வாரிசாக தேர்ந்தெடுத்து பதவி விலகினார். இவர் இரண்டாம் செய இந்திரவர்மன் (ஆட்சி. 1080-81, 1086-1113) என முடிசூட்டப்பட்டார். பின்னர் அரிவர்மன் ஆழ்ந்த மத வாழ்க்கையில் நுழைந்தார். அரிவர்மன் 1081 இல் இறந்த போது அவரது உச்முதல் ராணியும், இரண்டாம் நிலை ராணியும் உடன்கட்டை ஏறினர். [6] இராச்சியத்தை ஒழுங்காக ஆளத் தெரியாதவரான அனுபவமற்ற இளைஞரான இரண்டாம் செய இந்திரவர்மன், அரசாங்கத்தின் விதிகளுக்கு மாறாக எல்லாவற்றையும் செய்தார். பின்னர் அவரது மாமாவும் தலைமை ஆட்சிப் பிரநிதியுமான , இளவரசர் பாங்கால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Coedès 1975, ப. 154.
  2. Griffiths et al. 2012, ப. 220.
  3. Lafont 2007, ப. 159.
  4. Griffiths et al. 2012, ப. 221.
  5. Coedès 1975, ப. 152.
  6. Lafont 2007, ப. 160.

உசாத்துணை[தொகு]

  • Coedès, George (1975), Vella, Walter F. (ed.), The Indianized States of Southeast Asia, University of Hawaii Press, ISBN 978-0-824-80368-1
  • Griffiths, Arlo; Lepoutre, Amandine; Southworth, William A.; Phần, Thành (2012), The inscriptions of Campā at the Museum of Cham sculpture in Đà Nẵng / Văn khắc Chămpa tại bảo tàng điêu khắc Chăm – Đà Nẵng, Vietnam National University in Ho Chi Minh City Publishing House (published in collaboration with EFEO and the Center for Vietnamese and Southeast Asian Studies, Hồ Chí Minh City)
  • Lafont, Pierre-Bernard (2007), Le Campā: Géographie, population, histoire, Indes savantes, ISBN 978-2-84654-162-6
  • Maspero, Georges (2002), The Champa Kingdom, White Lotus Co., Ltd, ISBN 978-97475-3-499-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_அரிவர்மன்&oldid=3706694" இலிருந்து மீள்விக்கப்பட்டது