நாட் குவான்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட் குவான்சா
Nat Quansah
தேசியம்கானா நாட்டவர்
கல்விஇலண்டன் பல்கலைக்கழகம், கோல்டுசுமித் கல்லூரி, கானா பேக கோசுட்டு பல்கலைக்கழகம்
பணிதாவரவியலாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2000)

நாட் குவான்சா (Nat Quansah) கானா நாட்டைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளர் ஆவார். இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கோல்டுசுமித் கல்லூரியில் பெரணியியல் துறையில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். கானாவின் கேப் கோசுட்டு பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். குவான்சா அன்டனனரிவோ பல்கலைக்கழகத்தில் இனக்குழு தாவரவியல் குறித்த படிப்புகளைக் கற்பித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு முதல் இவர் மடகாசுகர் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகள் கோடைகால திட்டத்தின் கல்வி இயக்குநராக பணியாற்றினார். 2013-14 ஆம் ஆண்டு முதல், தான்சானியா: சான்சிபார் - கடலோர சூழலியல் மற்றும் இயற்கை வள மேலாண்மைப் பள்ளிக்கான பன்னாட்டு பயிற்சித் திட்டத்தின் கல்வி இயக்குநராக பணியாற்றினார்.

மடகாசுகரின் அம்போதிசகோனாவை மையமாகக் கொண்ட சுகாதாரப் பாதுகாப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த படைப்புகளுக்காக 2000 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. [1] 1994 ஆம் ஆண்டில் மடகாசுகரின் அம்போதிசகோனாவில் ஒரு சுகாதார மருத்துவமனையை குவான்சா நிறுவினார். இம்மருத்துவமனை ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியது. [2] சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைகளை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதற்காக உள்ளூர் மக்களின் பல்வேறு சுகாதார, பொருளாதார, உயிரியல், கலாச்சார பின்னணிகளை இந்த திட்டம் ஒருங்கிணைக்கிறது. மருத்துவமனை இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தது. பலருக்கு பூர்வீக மற்றும் அச்சுறுத்தும் மருத்துவ தாவரங்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islands and Island Nations 2000. Nat Quansah. Madagascar, Sustainable development". Goldman Environmental Prize. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 18 November 2010.
  2. Quansah, Nat (2005-12-31). "Integrated Health Care System: Meeting Global Health Care Needs in the 21st Century". Ethnobotany Research and Applications 3: 067. doi:10.17348/era.3.0.67-72. பன்னாட்டுத் தர தொடர் எண்:1547-3465. http://journals.sfu.ca/era/index.php/era/article/view/54. 
  3. "Nat Quansah". Goldman Environmental Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்_குவான்சா&oldid=3199396" இலிருந்து மீள்விக்கப்பட்டது