நாசர் அபுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசர் அபுல்
தேசியம்குவைத்து
அறியப்படுவதுசனநாயக செயல்பாடு, 2011 ஆம் ஆண்டு டுவீட் செய்ததற்காக சிறைத்தண்டனை

நாசர் அபுல் (Nasser Abul) குவைத்து ஆன்லைன்[தெளிவுபடுத்துக] ஆர்வலர் ஆவார். [1] 2011 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி அன்று, பகுரைனில் அரபு வசந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியான டுவிட்டர் டுவீட்களைத் தொடர்ந்து, அவர் குவைத் அரசாங்கத்தால் மாநில பாதுகாப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். [2] பக்ரைனின் ஆளும் அல் கலீபா குடும்பத்தைச் சேர்ந்த சேக் அப்துல்லா முகமது பின் அகமது அல் பதே அல் கலீபா, அபுல் கைது செய்யப்பட்டதற்கு குவைத்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, அபுலுக்கு எதிராக தனிப்பட்ட அவதூறு வழக்கைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். [1]

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அபுல் தனது கணக்கில் மிகவும் எரிச்சலூட்டும் டுவீட்களை குறும்பர்களால் இடுகையிடப்பட்டதாகவும், அந்த டுவீட்களை அறிந்ததும், தனது ஐ-போன் மூலம் அவற்றை நீக்கிவிட்டதாகவும் கூறினார். காவலில் வைக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் தான் தாக்கப்பட்டதாகவும் தூக்கமின்மைக்கு ஆளானதாகவும் அபுல் குற்றம் சாட்டியுள்ளார். அவரது வழக்கறிஞரின் கூற்றுப்படி, அபுல் பல வழக்கறிஞர் விசாரணைகளுக்கு மறுக்கப்பட்டார். [3] அவர் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, பன்னாட்டு மன்னிப்பு அவை அவரை மனசாட்சியின் கைதி என்று அறிவித்தது மற்றும் அவரை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தது. [4] மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என்று கோரியது, "அரசுகளை இணையத்தில் விமர்சிப்பதற்காக மக்களைக் கைது செய்ததன் மூலம் குவைத்து ஒரு புதிய வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று ஒரு பிரதிநிதி கூறினார். [3] செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று, மனித உரிமைக் குழுவின் தலைவரான குவைத்து பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அல்-துவைசன், அபுலை விடுவிக்கக் கோரினார். "குவைத்தின் மனித உரிமை வரலாற்றைக் கெடுக்கும் அவமானம்" என்று கூறினார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அபுல் குவைத்து மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Priyanka Motaparthy (24 August 2011). "Jailed for tweeting in Kuwait". Foreign Policy. Archived from the original on 23 January 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  2. "Kuwaiti Arrested for Tweeting About Protests". Amnesty International. 15 June 2011. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  3. 3.0 3.1 "Kuwait: Release Jailed Internet Scribes". Human Rights Watch. 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  4. "Kuwaiti Arrested for Tweeting About Protests". Amnesty International. 15 June 2011. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012."Kuwaiti Arrested for Tweeting About Protests". Amnesty International. 15 June 2011. Retrieved 12 January 2012.
  5. "Urgent action (follow up) : Kuwait. Online activist Nasser Abul sentenced for tweeting". Amnesty International. 29 September 2011. Archived from the original on 6 September 2012. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசர்_அபுல்&oldid=3762543" இலிருந்து மீள்விக்கப்பட்டது