நல்லூர் வில்வனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லூர் வில்வனேசுவரர் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சோழர்கால கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

நடுநாட்டில் மணிமுத்தாறு, கோமுகி ஆறு, மயூர ஆறு ஆகியவை ஒன்று கலக்கும் இடத்தில் நல்லூர் உள்ளது. நல்லூர் விருதாச்சலம்-வேப்பூர் சாலையில் உள்ள கண்டப்பங்குறிச்சியில் இருந்து வடக்கே நான்கு கிலோமீட்டடர் தொலைவில் அமைந்துள்ளது.

தொன்மம்[தொகு]

அசுரர்களை வதம் செய்ததால் முருகப்பெருமானுக்கு வீர அத்தி தோசம் பீடித்தது. இதனால் முருகன் நடுநாட்டில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சிவனை வழிபட்டார். முருகனுக்கு காட்சிதந்த சிவன் முருகனைப் பீடித்த வீர அத்தி தோசத்தை நீர்த்துப்போகவைத்தார். மேலும் எம்மைத் தரிசித்து நீ பூசித்த இத்ததிருத்தலத்திலேயே, எம்மைப் பூசித்த திருக்கோலத்திலேயே, வட திசை நோக்கி நின்று எம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களின் தோசங்களைத் தீர்பாயாக என்று சிவன் கட்டையிட்டார். அன்றுமுதல் ஒரு கையில் வேலுடனும் மறுகையில் சேவற் கொடியுடனும் வடதிசை நோக்கி முருகன் அருள்பாளிக்கிறார் என்பது இங்கு உள்ள ஒரு தொன்மக் கதையாகும்.[1]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம், சுற்றாலை மண்டபங்கள் போன்றவற்றுடன் காணப்படுகிறது. சுற்றால மண்டபத்தில் 63 நாயன்மார்கள் உள்ளனர். இக்கோயில் வளாகத்தில் பிராண தியாகராயர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். கருவறைக் கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவப்பெருமாள், நான்முகன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அம்மையின் கருவறையைச் சுற்றி ஞான சக்தி, கிரியா சக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன. அம்மையின் முகப்பு மண்டபத்தை ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியவாறு உள்ளார்.[1]

வழிபாடு[தொகு]

இக்கோயிலில் இருகால பூசைகள் நடத்தப்படுகின்றன. கோயில் நடை காலை ஒன்பது மணி முதல் 12 மணி வரையும், மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டு மணி வரையும் திறந்துருக்கும். மாசிமகத்தில் தேரோட்டம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "முக்கூடலுக்கு வந்த முருகப்பெருமான்!". 2023-09-28. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா துவக்கம்". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)