தோடீக்குளம் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோடீக்குளம் சிவன் கோயில் விமானம்

தோடீக்குளம் சிவன் கோயில் (Thodikkulam Siva Temple) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக் கோயிலானது கண்ணூருக்கு தென்கிழக்கே 34 கி.மீ தொலைவிலும், தலைசேரி மானந்தவாடி சாலையில் இருக்கும் கானவம் ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள சுவர் ஓவியங்கள் புகழ்பெற்றவை. இக்கோயில் பழசி இராசா குடும்பத்துக்கு நெருக்கமானது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த சிவன் கோயில், இரண்டு மாடிகளில் கருவறை கட்டப்பட்டு, செவ்வக வடிவத்தில் உள்ளது. கருவறைக்கு முன்புறமுள்ள முகமண்டபமும் முழுமை பெறாமல் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]