தொழிற்கூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க ஜனாதிபதி டுவைட் டி. ஐசனாவர் 17 ஜனவரி 1961 அன்று ஆற்றிய தனது புகழ்பெற்ற இறுதி அலுவல் உரையில் "இராணுவத் தொழிற்கூட்டு" பற்றி எச்சரித்திருந்தார்.

தொழிற்கூட்டு (Industrial complex) என்பது வணிகங்கள் சமூக அல்லது அரசியல் அமைப்புகளிலோ அல்லது நிறுவனங்களிலோ பின்னிப்பிணைந்து அவ்வமைப்புகளிலிருந்து இலாபப் பொருளாதாரத்தை உருவாக்குவதைக் குறிக்கும் ஒரு சமூகப்பொருளாதாரக் கருத்தாகும். இத்தகைய கூட்டானது சமூகநலனையோ தனிநபர் நலனையோ பொருட்படுத்தாமல் — சொல்லப்போனால் சமூகத்தையும் தனிநபரையும் சுரண்டுவதன் மூலம் — தனது சுய பொருளாதார நலனை மட்டுமே கருத்தில்கொண்டு இயங்குபவையாகும். ஒரு சமூக அல்லது அரசியல் இலக்கை அடைவதற்காக வேண்டி ஒரு தொழிற்கூட்டுக்குள் சில வணிகங்கள் உருவாக்கப்படலாம் என்றாலும் அவ்விலக்கை அடையாது போனால் பெரும்பாலும் அதுவே லாபம் ஈட்டுவதாக அமையும். சமூக ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் அல்லது திறமையற்ற அமைப்புகளை பராமரிப்பதன் மூலம் தொழிற்கூட்டானது பொருளாதார இலாபம் அடைகிறது.

வரலாறு[தொகு]

தொழிற்கூட்டு என்ற கருத்து அமெரிக்க ஜனாதிபதி டுவைட் டி. ஐசனாவரால் ஜனவரி 17, 1961 அன்று தனது பதவியிலிருந்து விடைபெறும் உரையில் பிரபலப்படுத்தப்பட்டது.[1] ஐசனாவர் இராணுவத் தொழிற்கூட்டை "ஜனநாயக அரசாங்கத்திற்கு ஒரு அச்சுறுத்தல்" என்று கூறினார்.[1] அமெரிக்க ஆயுதத் துறையின் ஈட்டும் இலாபம் மற்றும் இராணுவத்துறை, ஆயுதத் தொழில்துறை உள்ளிட்ட இராணுவம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் மக்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக இந்தத் இராணுவத் தொழிற்கூட்டானது அமெரிக்க சமூகத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீகத் துறைகளின் மீது தனது "தேவையற்ற தாக்கத்தை" கொண்டுள்ளது. இத்தொழிற்கூட்டானது அமெரிக்க இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேண்டி உருவாக்கப்பட்ட பலதரப்பட்ட பிற வணிகங்களின் பிறப்பால் உருவாகிறது. இலாப நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்தப் பலதரப்பு வணிக அமைப்புகளின் முழுமுதல் நோக்கமே பொருளாதார இலாபம் தான் என்ற பின்னர் இவற்றின் மொத்தக் கூட்டாக விளங்கும் இராணுவத் தொழிற்கூட்டானது இயல்பாகவே தொடர் லாபத்தில் இயங்கும் ஒன்றாகத் திகழ்வதில் ஆச்சரியமில்லை. இராணுவத்தின் தத்துவார்த்த நோக்கமே சமூக அமைதியை நிலைநாட்டுதல் என்றிருக்கையில் சமூகத்தை அழித்தேனும் தொடர் பொருளாதார இலாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்ட இராணுவத் தொழிற்கூட்டின் செயற்பாடு இதற்கு நேரெதிராக விளங்குவதே இங்கு சிக்கலின் ஆணிவேர்.

விளைவுகள்[தொகு]

பல சந்தர்ப்பங்களில், தொழிற்கூட்டு என்பது ஒரு நிறுவனத்தின் சீரிய சமூக-அரசியல் நோக்கத்திற்கும், அந்நோக்கத்தை அடையும் முயற்சியில் அதனால் பொருளாதார ரீதியில் பயனடையும் வணிக மற்றும் அரசாங்க அமைப்புகளின் செயற்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் எதிர்மறை செயலாக்கத்தையும் குறிக்கிறது. மேலும் அச்சீரிய நோக்கத்தை அடைந்துவிடும் பட்சத்தில் அது அந்த நிறுவனங்களுக்கு பொருளாதார இழப்புக்களையே நல்வதாக அமையும். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் குற்றவியல் துறையின் நோக்கமானது குற்றவாளிகளைத் திருத்தி சட்டத்தை மதிக்கும் நல்குடிமக்களாக மாறுவதேயாகும்.[2] ஆனால் சிறைத் தொழிற்கூட்டானது கைதிகளின் அதிக எண்ணிக்கையை நம்பியே இயங்குகிறது என்பதால் தன் இலக்குகளான குற்றவியல் சீர்திருத்தம், குற்றவாளிகளின் மறுவாழ்வு ஆகியவற்றை அடைவதில் குற்றவியல் துறையானது தோல்வியையே தழுவுகிறது. இந்த வகையில், பல சமயங்களில் நல்ல நோக்கமுள்ள துறைகள் தொழிற்கூட்டுகளாக மாறும்போது அதனால் பொரும்பாலும் அரசாங்க முகவர்கள் உட்பட பல அமைப்புகள் இந்த தொழிற்கூட்டாக்கலில் மூலம் பொருளாதார இலாபம் அடைவதால் இந்நிறுவனங்களை அவற்றின் உண்மையான, சமூகத்திற்கு பயனளிக்கவல்லதான நல்ல இலக்கை நோக்கி இயங்கச்செய்வதிலும் அதைச் சட்டமாக்குவதிலும் அந்த அமைப்புகளுக்கு முனைப்பின்றிப் போய்விடுகிறது.

முறைசாரா வகையில் தொழிற்கூட்டு என்ற கருத்து ஒரு நிறுவனத்தின் சமூக நல் நோக்கத்தை சீர்குலைத்து, குறிப்பாக சமூகத்திற்கும் பெரிதும் பயனற்ற விஷயங்களையும் பொருட்களையும் சமூகத்தில் திணிப்பதன் மூலமும், அதன் மூலம் பொருளாதார இலாபமடையும்படியான செயலாக்கங்களையும் மாற்றங்களையும் குறிக்கவும் பயன்படுகிறது. இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு திருமணத் தொழிற்கூட்டு.[3][4][5][6] திருமணத் தொழிற்கூட்டில் திருமணத்தை சீறும் சிறப்புமாக நடத்தவேண்டியது அவசியம் என்ற ஒரு பொது எண்ணம் சமூகத்தில் திணிக்கப்பட்டு அதன் மூலம் திருமண ஆடை தயாரிப்பாளர்கள், திருமண அரங்குகள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், திருமண இனிப்புகள் தயாரிக்கும் வெதுப்பகங்கள், திருமண வாடகை நிறுவனங்கள், திருமண புகைப்படக்கலைஞர்கள் போன்ற எண்ணற்றவைகளுக்கான தேவையை உருவாக்குவது திருமணத் தொழிற்கூட்டின் செயற்பாடாகும்.[7]

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • இராணுவத் தொழிற்கூட்டு — இராணுவத்திற்கு சீருடைகள், ஆயுதங்கள், பீரங்கிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கும் வணிகங்களைக் கொண்டது. இவை தொடர்ந்து இயங்க போர் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிறது. போரற்ற அமைதிச் சூழல் நிலவினால் இவ்வணிகங்கள் பாதிக்கப்படும்.[8]
  • விலங்குத் தொழிற்கூட்டு — மனிதரல்லா விலங்குகளை திட்டமிட்ட நிறுவனமயமாக்கப்பட்ட முறையில் சுரண்டுதல். இதற்காக பில்லியன் கணக்கில் விலங்குகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன. அறிஞர்கள் இதனை "விலங்கு இனப்படுகொலை" என்கின்றனர்.[9][10]:29–32, 97[11] இதன் விளைவாக மனித வாழ்வாதார அச்சுறுத்தல்,[12]:299 காலநிலை மாற்றம்,[13] கடல் அமிலமயமாக்கல்,[13] பல்லுயிர் இன இழப்பு,[13] விலங்கியல் நோய்கள் பரவுதல்[14]:198[15][16] போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளும் புவியின் வரலாற்றில் மனிதனால் ஏற்பட்டுள்ள ஒரே பேரழிவான ஹோலோசீன் பேரழிவு எனப்படும் ஆறாவது பேரழிவும் நடைபெறுகின்றன.[17]
  • சிறைத் தொழிற்கூட்டு — சாதாரண மக்களை கூலிக்கு அமர்த்துவதை விட கைதிகளைக் கூலிக்கு அமர்த்துவது மலிவு என்பதால் வணிகங்கள் அதிக குற்றங்களினாலும் அதன் விளைவாக அதிக சிறைக்கைதிகளின் எண்ணிக்கையாலும் சிறைவாச விகிதங்களிலிருந்தும் இலாபம் அடைகின்றன.[18]
  • மருத்துவத் தொழிற்கூட்டு — மருத்துவமனைகளும் மருந்து நிறுவனங்களும் இலாபம் அடைய மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும். இதனால் மக்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமென்ற இவ்வமைப்புகளின் உண்மையான நோக்கத்தோடு அவற்றின் தற்போதைய செயற்பாட்டு நோக்கங்கள் முற்றிலுமாக முரண்படுகின்றன.[19] எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவில் சுகாதாரச் செலவினம் அதிகரித்து வருவதற்கு மருந்து மற்றும் மருத்துவமனை சார்ந்த விலைகளின் பணவீக்கம் பெரிதும் பங்களிக்கிறது.[20][21]
  • திருமணத் தொழிற்கூட்டு — திருமணங்களின் பெருகிவரும் ஊதாரித்தனத்தினால் திருமணம்சார் வணிகங்கள் இலாபம் அடைகின்றன. இவற்றின் நோக்கங்கள் சிறிய, எளிய திருமணங்களாலும் இரகசியத் திருமணங்களாலும் பாதிக்கப்படுகின்றன. அதனாலேயே விலையுயர்ந்த திருமண நிகழ்வுகளை நடத்துமாறு சமூகத்தின் மீது இத்தொழிற்கூட்டு அழுத்தத்தைக் கொடுக்கிறது.[22]
  • புதுச்சிந்தனைத் தொழிற்கூட்டு — தொழில்முறை பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் புதுமையான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இதன் விளைவாக பயனற்ற விளிம்புநிலை கருத்துக்கள் கூட பெரிய அளவில் பொது உரையாடல்களில் மிக முக்கியமான கருத்தைப் போன்று போலியாக உருமாற்றப்படும் அபாயம் உள்ளது.[23][24]

உலகியல் பிரயோகம்[தொகு]

"தொழிற்கூட்டு" என்ற பின்னிணைப்பு கீழ்க்கண்டவற்றோடு பயன்படுத்தப்படுகிறது:

  • கல்வித்துறைத் தொழிற்கூட்டு (Academic–industrial complex)[25][26][27][28]
  • விலங்குத் தொழிற்கூட்டு (Animal–industrial complex)[29]
  • விளையாட்டுத் தொழிற்கூட்டு (Athletic–industrial complex)
  • குழந்தைத் தொழிற்கூட்டு (Baby or diaper–industrial complex)[30][31][32]
  • எல்லைத் தொழிற்கூட்டு (Border–industrial complex)[33][34]
  • பிரபல்யத் தொழிற்கூட்டு (Celebrity–industrial complex)
  • உலகளாவியத் தொழிற்கூட்டு (Global–industrial complex)[35]
  • மருத்துவத் தொழிற்கூட்டு (Medical–industrial complex)[36] அல்லது மருந்துத் தொழிற்கூட்டு (medical–pharmacological industrial complex)
  • இராணுவத் தொழிற்கூட்டு அல்லது படைத்துறைத் தொழிற்கூட்டு (Military–industrial complex)
    • இராணுவ-கணினிசார் தொழிற்கூட்டு (Military-digital complex)
    • இராணுவ-பொழுதுபோக்கு தொழிற்கூட்டு (Military-entertainment complex)
    • இராணுவ-தொழிற்-ஊடகக் கூட்டு (Military–industrial–media complex)[37]
  • வணிகம்சாரா தொழிற்கூட்டு (Nonprofit–industrial complex)[38] அல்லது அரசுசாரா அமைப்புத் தொழிற்கூட்டு (NGO–industrial complex)[39]
  • சிறைத்துறைத் தொழிற்கூட்டு (Prison–industrial complex)[40] அல்லது குற்றவியல் தொழிற்கூட்டு (Criminal [justice] industrial complex)[41]
  • சமயத் தொழிற்கூட்டு (Religion–industrial complex)
  • திருமணத் தொழிற்கூட்டு (Wedding–industrial complex) மற்றும் விவாகரத்துத் தொழிற்கூட்டு (Divorce–industrial complex)
  • வெள்ளையர் மீட்பர் தொழிற்கூட்டு[42]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Ike's Warning Of Military Expansion, 50 Years Later". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  2. "Organization, Mission and Functions Manual: Federal Bureau of Prisons". www.justice.gov (in ஆங்கிலம்). 2014-08-27. Archived from the original on 2019-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  3. "What the Wedding Industrial Complex Is – And How It's Hurting Our Ideas of Love". Everyday Feminism (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  4. "The wedding industrial complex". theweek.com. 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  5. Escobar, Natalie (2019-02-11). "The Wedding-Industry Bonanza, on Full Display". The Atlantic (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  6. Garber, Megan (2017-07-20). "How 'I Do' Became Performance Art". The Atlantic (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  7. "The Dark Side Of The Disney Princess Fantasy". HuffPost. 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  8. "Military-Industrial Complex". HISTORY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-02.
  9. David Benatar (2015). "The Misanthropic Argument for Anti-natalism". Permissible Progeny?: The Morality of Procreation and Parenting. Oxford University Press. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0199378128. https://books.google.com/books?id=J6dBCgAAQBAJ&pg=PA44. 
  10. Best, Steven (2014). The Politics of Total Liberation: Revolution for the 21st Century. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1137471116. 
  11. Hedges, Chris (August 3, 2015). "A Haven From the Animal Holocaust". Truthdig. பார்க்கப்பட்ட நாள் August 29, 2021.
  12. Sorenson, John (2014). Critical Animal Studies: Thinking the Unthinkable. Toronto, Ontario, Canada: Canadian Scholars' Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55130-563-9. https://books.google.com/books?id=O85kAwAAQBAJ&q=Animal+industrial+complex. பார்த்த நாள்: 7 October 2018. 
  13. 13.0 13.1 13.2 Steinfeld, Henning; Gerber, Pierre; Wassenaar, Tom; Castel, Vincent; Rosales, Mauricio; de Haan, Cees (2006), Livestock's Long Shadow: Environmental Issues and Options (PDF), Rome: FAO
  14. David Nibert (2011). "Origins and Consequences of the Animal Industrial Complex". The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. பக். 197–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 
  15. Beirne, Piers (May 2021). "Wildlife Trade and COVID-19: Towards a Criminology of Anthropogenic Pathogen Spillover". The British Journal of Criminology (Oxford University Press) 61 (3): 607–626. doi:10.1093/bjc/azaa084. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-3529. பப்மெட் சென்ட்ரல்:7953978. https://academic.oup.com/bjc/article/61/3/607/6031472?login=true. பார்த்த நாள்: 19 September 2021. 
  16. Carol J. Adams (1997). ""Mad Cow" Disease and the Animal Industrial Complex: An Ecofeminist Analysis". Organization & Environment (SAGE Publications) 10 (1): 26–51. doi:10.1177/0921810697101007. https://www.jstor.org/stable/26161653. பார்த்த நாள்: 7 September 2021. 
  17. "World Scientists' Warning to Humanity: A Second Notice". BioScience 67 (12): 1026–1028. 13 November 2017. doi:10.1093/biosci/bix125. http://scientistswarning.forestry.oregonstate.edu/sites/sw/files/Warning_article_with_supp_11-13-17.pdf. பார்த்த நாள்: 24 மார்ச் 2022. "Moreover, we have unleashed a mass extinction event, the sixth in roughly 540 million years, wherein many current life forms could be annihilated or at least committed to extinction by the end of this century.". 
  18. "Justice in America Episode 26: The Privatization of Prisons". The Appeal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-02.
  19. Relman, Arnold S. (23 October 1980). "The New Medical-Industrial Complex". New England Journal of Medicine 303 (17): 963–970. doi:10.1056/NEJM198010233031703. பப்மெட்:7412851. https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_1980-10-23_303_17/page/963. 
  20. Wohl, Stanley. The Medical Industrial Complex / Stanley Wohl. First edition. New York: Harmony Book, 1984: 85-98
  21. Lexchin J, Grootendorst P. Effects of Prescription Drug User Fees on Drug and Health Services Use and on Health Status in Vulnerable Populations: A Systematic Review of the Evidence. International Journal of Health Services. 2004;34(1):101-122. doi:10.2190/4M3E-L0YF-W1TD-EKG0
  22. "The wedding industrial complex". theweek.com (in ஆங்கிலம்). 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-02.
  23. Stockton, Nick. "The 19th Century Argument for a 21st Century Space Force". Wired. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
  24. Serazio, Michael (2 November 2019). "Deadspin died just like it lived. The sports world will be worse off without it.". Washington Post. https://www.washingtonpost.com/outlook/2019/11/02/deadspin-died-just-like-it-lived-sports-world-will-be-worse-off-without-it/. 
  25. Academic Repression: Reflections from the Academic Industrial Complex. AK Press. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1904859987. 
  26. Lee, Felicia R. (2003-09-06). "Academic Industrial Complex" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2003/09/06/arts/academic-industrial-complex.html. 
  27. Gandio, Jason Del. ""Neoliberalism and the Academic-Industrial Complex"". Truthout (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  28. Smith, Andrea (October 2007). "Social-Justice Activism in the Academic Industrial Complex". Journal of Feminist Studies in Religion 23 (2): 140–145. doi:10.2979/FSR.2007.23.2.140. 
  29. David Nibert (2011). "Origins and Consequences of the Animal Industrial Complex". The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. பக். 197–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 
  30. "10 Essential Diaper Changing Tips For New Parents". HuffPost. 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  31. Chopra, Samir (2013-09-13). "The Baby Industrial Complex". Samir Chopra (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  32. "China Leads the Way in Diapers". Nonwovens Industry Magazine - News, Markets & Analysis for the Nonwovens Industry. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  33. Pérez, Cristina Jo (2022). "Performing the State's Desire: The Border Industrial Complex and the Murder of Anastasio Hernández Rojas". Frontiers: A Journal of Women Studies 43 (1): 93–119. doi:10.1353/fro.2022.0003. 
  34. Smith, Cameron (2019). "‘Authoritarian neoliberalism’ and the Australian border-industrial complex". Competition & Change 23 (2): 192–217. doi:10.1177/1024529418807074. 
  35. The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 
  36. Ismail, Asif (2011). "Bad For Your Health: The U.S. Medical Industrial Complex Goes Global". The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. பக். 211-232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 
  37. Toby Miller (2011). "The Media-Military Industrial Complex". The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. பக். 97–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 
  38. "Beyond the Non-Profit Industrial Complex". INCITE! (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  39. https://www.researchgate.net/publication/272587189_The_NGO-industrial_complex
  40. "What is the PIC? What is Abolition? – Critical Resistance" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  41. Nagel, Mechthild (2011). "The Criminal (Justice) Industrial Complex". The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. பக். 117–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 
  42. Cole, Teju (21 March 2012). "The White-Savior Industrial Complex" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்கூட்டு&oldid=3720330" இலிருந்து மீள்விக்கப்பட்டது