தொண்டைமானாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தொண்டைமானாறு | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | |
| நேர வலயம் | இலங்கைச் சீர் நேரம் (ஒ.ச.நே.+5:30) |
தொண்டைமானாறு (Thondaimanaru) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சியின் பிரதேசங்களில் ஒன்று.
பொருளடக்கம் |
[தொகு] தொண்டைமானாறு நீரேரி
கடலுடன் கலக்கும் தொண்டைமானாறு நீரேரி ஆனையிறவு முதல் நீண்டுள்ளது.
[தொகு] செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. செல்வச்சந்நிதியில் ஓடும் நன்னீரேரி வல்லிநதி என்று முன்னர் அழைக்கப்பட்டது
[தொகு] தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்
இப்பிரதேசத்தின் ஒரேயொரு பாடசாலையாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது.
[தொகு] வரலாற்றுச் சிறப்பு
- சங்கிலியன் ஆட்சிக்காலத்துடன் தொடர்புபட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சில எச்சங்கள் இன்றும் இப்பிரதேசத்திலும் அயற்பிரதேசத்திலும் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை:-
- கெருடாவில் வீரமாகாளி அம்மன் ஆலயம்
- காட்டுப்புலம் கோட்டைகாடு
- கெருடாவில் மண்டபக்காடு
- தொட்டிலடி கந்தசுவாமி கோயில்
- கப்பல் கட்டும் தொழில் இப்பிரதேசத்தின் பண்டைய சிறப்புப் பெற்ற தொழிலாக இருந்துள்ளது.
[தொகு] அறியப்பட்ட நபர்கள்
- எழுத்தாளர் குந்தவை